நோட்டா (None of the Above - NOTA;) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, இப்பொத்தான் வாக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.[1] வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக்கடைசியில் கீழே அமைந்திருக்கும்.

நடைமுறைதொகு

நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது [2]

தமிழகத்தில் முதன்முறையாகதொகு

இந்த வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4][5]

இந்தியப் பொதுத் தேர்தல், 2014தொகு

2014இல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவின் 16வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[6][7]

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[8][9][10]

இந்திய அளவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியது.[11]

மேற்கோள்தொகு

 1. நிராகரிக்கும் வசதி: 5 மாநில தேர்தலில் 'நோட்டா' பட்டன் அறிமுகம்
 2. டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு; ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4-ந் தேதி இடைத்தேர்தல்
 3. இடைத்தேர்தலில் 'நோட்டா' மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
 4. [1]
 5. நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் 16 லட்சம் நோட்டா வாக்குகள்
 6. "Election Results 2014: Close to 60 Lakh Voters Chose 'None of The Above' This Time". NDTV. பார்த்த நாள் 19 மே 2014.
 7. "Over 60 lakh NOTA votes polled". The Hindu. பார்த்த நாள் 19 மே 2014.
 8. "இடதுசாரிகள், ஆம் ஆத்மியை பின்னுக்குத் தள்ளிய நோட்டா!". தினமணி. பார்த்த நாள் 19 மே 2014.
 9. "முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய "நோட்டா'". தினமணி. பார்த்த நாள் 19 மே 2014.
 10. "தமிழகத்தில் நோட்டா விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு". தினமலர். பார்த்த நாள் 19 மே 2014.
 11. "Election results: NOTA garners 1.1% of country’s total vote share". The Times of India. பார்த்த நாள் 19 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்டா&oldid=2702095" இருந்து மீள்விக்கப்பட்டது