நோய்த்தொற்று

நோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும்.[1][2] இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும்.

நோய்தொற்று
Malaria.jpg
மலேரியா நோய் தொற்று(வெளிர்நீலம்)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்றுநோய்கள்
ஐ.சி.டி.-10A00.-B99.
ஐ.சி.டி.-9001-139
நோய்களின் தரவுத்தளம்28832
ம.பா.தD003141

நோய்த்தொற்றானது பொதுவாக தீநுண்மம், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய பூஞ்சை போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், பிறபொருளெதிரியாக்கி - பிறபொருளெதிரி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.

நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக அழற்சியும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. Definition of "infection" from several medical dictionaries - Retrieved on 2012-04-03
  2. "Utilizing antibiotics agents effectively will preserve present day medication". News Ghana. 21 November 2015. 21 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்த்தொற்று&oldid=2744536" இருந்து மீள்விக்கப்பட்டது