ந. பீரேன் சிங்
இந்திய அரசியல்வாதி
நாங்தோம்பம் பீரேன் சிங் (Nongthombam Biren Singh) (பிறப்பு:1 சனவரி 1961)[1] பாரதிய ஜனதா கட்சியின் மணிப்பூர் மாநில அரசியல்வாதியும், முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவார். மணிப்பூர் மாநில முதலமைச்சராக 15 மார்சு 2017 அன்று பதவி ஏற்றவர்.[2][3][4] பீரேன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதவி ஏற்ற முதலாவது மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆவார்.
பீரேன் சிங் | |
---|---|
![]() | |
12வது மணிப்பூர் மாநில முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 மார்ச் 2017 | |
ஆளுநர் | நச்மா எப்துல்லா இல. கணேசன் |
முன்னவர் | ஓக்ரம் இபோபி சிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சனவரி 1961 லுவான்சங்பம் மமாங் லெய்கை, கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா ![]() |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2016–மார்ச், 2017) |
பிற அரசியல் சார்புகள் |
இந்திய தேசிய காங்கிரசு (2003–16) ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சி (2002–03) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஹெய்யானு தேவி |
பிள்ளைகள் | 3 |
படித்த கல்வி நிறுவனங்கள் | மணிப்பூர் பல்கலைக்கழகம் |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | ![]() |
கிளை | எல்லைப் பாதுகாப்புப் படை |
பணி ஆண்டுகள் | 1979–1993 |
2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றதால், ந. பீரேன் சிங் மீண்டும் மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[5][6]
இவர் 1979–1993 முடிய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "SHRI NONGTHOMBAM BIREN". manipurassembly.nic.in இம் மூலத்தில் இருந்து 14 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170514194648/http://manipurassembly.nic.in/html/9who.htm. பார்த்த நாள்: 15 March 2017.
- ↑ மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
- ↑ "BJP names N Biren Singh as chief minister candidate for Manipur". http://www.hindustantimes.com/india-news/biren-singh-named-bjp-s-manipur-cm-candidate-to-meet-governor-to-stake-claim-to-form-govt/story-t6IGtmnDMR2Bc7gxQTdzYJ.html.
- ↑ "Who is N. Biren Singh?". 14 March 2017. http://www.thehindu.com/elections/manipur-2017/who-is-n-biren-singh/article17460669.ece. பார்த்த நாள்: 15 March 2017.
- ↑ N Biren Singh to be sworn in as Manipur chief minister for second time
- ↑ இரண்டாவது முறையாக என். பீரேன் சிங் மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்பு