பகதூர் யார் ஜங்
நவாப் பகதூர் யார் ஜங் (Nawab Bahadur Yar Jung) (1905 பிப்ரவரி 3, ஐதராபாத்து - 1944 சூன் 25) என்பவர் பிரிட்டிசு இந்தியாவில் ஐதராபாத் மாநிலத்தில் ஒரு முஸ்லீம் தலைவராக இருந்தார். ஐதராபாத்தில் காக்சார்களின் கிளைகளை நிறுவிய இவர் ஒரு சக்திவாய்ந்த மத போதகராக அறியப்பட்டார். 1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்து நகரத்தில் நிறுவப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியான அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி எனப்படும் கட்சிக்குத் 1938ஆம் ஆண்டில், இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இறக்கும் வரை அக்கட்சியில் பணியாற்றினார். [1] [2] [3]
பகதூர் யார் ஜங் | |
---|---|
பிறப்பு | முகமது பகதூர் கான் 3 பெப்ரவரி 1905 ஐதராபாத்து , ஐதராபாத் இராச்சியம் |
இறப்பு | 25 சூன் 1944 ஐதராபாத்து , ஐதராபாத் இராச்சியம் | (அகவை 39)
இறப்பிற்கான காரணம் | எதிர்க்கட்சியினரைச் சந்திக்கச் சென்றபோது இவரது 'ஹுக்கா' மூலம் நஞ்சு அளிக்கப்பட்டு கொல்லபட்டதாக சந்தேகிக்கப்பட்டது. |
கல்லறை | ஐதராபாத்து |
தேசியம் | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
மற்ற பெயர்கள் | காயித்-இ-மில்லத், பகதூர் யார் ஜங் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதர்சே தாருல்-உலூம், இப்போது ஐதராபாத், நகரக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது |
அறியப்படுவது | ஷரியா சட்டம் மற்றும் முஸ்லிம் மாநிலத்தின் தத்துவத்தை முன்வைத்த பாகிஸ்தான் இயக்கத்தின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் முசுலிம் லீக் காக்சார் தெரிக் ஆகியவற்றுடன் தொடர்புடையவர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் முசுலிம் லீக் காக்சார் தெரிக் |
பெற்றோர் | கட்டூன் (தாயார்) நவாப் நசீப் யார் ஜங் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | தால்மைன் கட்டூன் |
தொழில்
தொகுபகதூர் யார் ஜங் தனது சொந்த சுதேச மாநிலமான ஐதராபாத்தை ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு இசுலாமிய / முஸ்லீம் நாடாக இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும் என்று விரும்பினார். இசுலாத்தின் பிரச்சாரத்திற்காக அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் என்ற அமைப்பை வழிநடத்தினார். முகமது இக்பால் மற்றும் பாகிஸ்தான் இயக்கத்தின் மிகவும் போற்றப்பட்ட தலைவர்களில் ஒருவரான முகமது அலி ஜின்னா ஆகியோரிடம் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். 1926 ஆம் ஆண்டில், பகதூர் யார் ஜங் மஹ்தாவியா சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927 ஆம் ஆண்டில், இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் அமைப்பை வழிநடத்தினார். அதில் இவர் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். 1930 ஆம் ஆண்டில், இவர் 1892 இல் நிறுவப்பட்ட சாகிர்தார் ஒன்றியத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சிறந்த முஸ்லீம் ஆர்வலரான இவர், பிரிட்டிசு இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே அமைதியான ஆனால் தனித்தனி மற்றும் சுயாதீனமான சகவாழ்வை ஆதரித்தார். எனவே இவர் அகில இந்திய முஸ்லீம் லீக் மற்றும் பாக்கித்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் தீவிர முஸ்லீமாவார். [2] [4] [3]
சொற்பொழிவு
தொகுமிகக் குறைவானவர்களையே கவர்ந்த இவரது சொற்பொழிவு திறன்கள் பிரிட்டிசு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகமாகச் செயல்பட்டன. [4] 1943 திசம்பர் 23 அன்று அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார். தனது உரையின் முதல் பாதியில் இவர் பாக்கித்தானுக்கான போராட்டத்தை வலியுறுத்தினார். இரண்டாவது பாதியில் பாக்கித்தானின் உருவாக்கம் குறித்து பேசினார். இறுதியில் அவர்;
"முஸ்லிம்களே! அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள் நீண்ட காலம் நீடிக்காது. இன்று நமக்கு ஒரு பூவைப் போல பூக்கும் ஒரு மரத்தின் தேவையோ அல்லது நம் வாய்க்கு இனிமையான சுவை தரும் பழத்தின் தேவையோ இல்லை. மாறாக, மண்ணில் கரைந்து வேர்களை வலுப்படுத்தும் நல்ல எருவின் தேவை நமக்கு இருக்கிறது. அது நீர் மற்றும் மண்ணுடன் ஒன்றிணைந்து அழகான பூக்களை உற்பத்தி செய்யும். அது தன்னை அழித்துவிடும், ஆனால் அதன் வாசனையையும் சுவையையும் பூக்களில் விட்டுவிடும். கண்களுக்கு அழகாக இருக்கும் அழகிய காட்சியமைப்புகள் தற்போது எங்களுக்குத் தேவையில்லை, ஆனால் நமக்குத் தேவையானது அஸ்திவாரக் கற்கள். அவை மண்ணில் புதைந்து கிடக்கும் கட்டிடம் வலுவாக இருக்கும். " [5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் ஐதராபாத்தில் வசித்த நவாப் நசீப் யார் ஜங்கின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் தால்மைன் கத்தூன். இவருக்கு நவாப் முகமது மண்தூர் கான் சந்தோசாய் மற்றும் நவாப் முகமது தௌலத் கான் சந்தோசாய் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். நவாப் முகமது மண்தூர் கான் மகன்கள் (நவாப் முகமது நசீப் கான், நவாப் முகமது பகதூர் கான் & நவாப் முகமது அட்லி கான்). நவாப் முகமது தௌலத் கானுக்கு 5 மகள்கள் இருந்தனர். இவரது மகள் ஒருவருக்கு ஐதராபாத்தில் பயிற்சி பெற்ற டாக்டர் மொய்னுதீன் கான் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத் டெக்கான் சிகரெட் தொழிற்சாலையின் உரிமையாளர் ஷா ஆலம் கானின் ஏழு மகன்களில் ஒருவரான அக்மத் ஆலம் கானை அவர்களது மகள் உஸ்மா திருமணம் செய்து கொண்டார். 2019 டிசம்பரில், உஸ்மாவின் ஒரே மகன் பர்கத் ஆலம் கான், இந்தியாவின் ஐதராபாத்தில் நடந்த மிகவும் பகட்டான விழாவில் அசதுதீன் ஒவைசியின் மூத்த மகள் குத்சியாவை மணந்தார்.
அங்கீகாரம்
தொகு- பாக்கித்தானின் சிந்து, கராச்சியின் சுற்றுப்புறமான பகதராபாத் என்ற இடத்திற்கு, பகதூர் யார் ஜங்கின் பெயரிடப்பட்டது. [6]
- பாக்கித்தானின் கராச்சி நகரத்தில் பகதூர் யார் ஜங் நூலகம் மற்றும் பகதூர் யர் ஜங் அகாதமி ஆகியவை இவரது பெயரிடப்பட்டுள்ளன. [3]
- 1990 ஆம் ஆண்டில், பாக்கித்தான் போஸ்ட் என்ற இதழ் சயீத் அக்தர் என்ற ஓவியர் வடிவமைத்த 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' என்ற தொடரில் இவரை சித்தரிக்கும் ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [7] [8]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Benichou, Autocracy to Integration 2000.
- ↑ 2.0 2.1 Preserving the legacy of Nawab Bahadur Yar Jung (1905-1944), TwoCircles.net website, Published 12 March 2012, Retrieved 28 August 2017
- ↑ 3.0 3.1 3.2 Tribute paid to Bahadur Yar Jung, Dawn (newspaper), Published 28 June 2011, Retrieved 28 August 2017
- ↑ 4.0 4.1 Glowing tributes paid to Nawab Bahadur Yar Jung, Published 28 June 2014, Retrieved 28 August 2017
- ↑ BAHADAR YAR JANG பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம் at www.brain.net.pk
- ↑ Bahadur Yar Jung Library in Bahadurabad, Karachi, Pakistan, Dawn (newspaper), Published 21 June 2011, Retrieved 28 August 2017
- ↑ Profile with commemorative postage stamp image on findpk.com website, Retrieved 28 August 2017
- ↑ Bahadur Yar Jung commemorative postage stamp issued in 1990 by Pakistan Post Office, Retrieved 28 August 2017
நூலியல்
தொகு- Benichou, Lucien D. (2000), From Autocracy to Integration: Political Developments in Hyderabad State, 1938–1948, Orient Blackswan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1847-6