பகாரி சன்யால்

பகாரி சன்யால் (Pahari Sanyal) (பிறப்பு: 1906 பிப்ரவரி 22 - இறப்பு: 1974 பிப்ரவரி 10) இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் பாடகரும் ஆவார். இவர் வங்காளத் திரையுலகில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.[1]

பகாரி சன்யால்
ஜாக்தே ரஹோவில் பகாரி சன்யால் (1956)
பிறப்புநாகேந்திரநாத் சன்யால்
(1906-02-22)22 பெப்ரவரி 1906
டார்ஜீலிங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு10 பெப்ரவரி 1974(1974-02-10) (அகவை 67)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பட்கண்டே இசை நிறுவனம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1933 முதல் 1974 இறக்கும் வரை
வாழ்க்கைத்
துணை
மீரா தேவி
கையொப்பம்
தேவதாஸில் பகாரி சன்யால் (இந்தி பதிப்பு) (1935)

ஹரானோ சுர், பானு கோயந்தா ஜஹார் அசிஸ்டண்ட், ஷில்பி போன்ற பல வங்காளப் படங்களில் சன்யால் நடித்துள்ளர். ஒரு குணசித்திர நடிகராக மட்டுமல்லாமல், வங்காள சீர்திருத்தவாதியான வித்யாசாகர் கதாபாத்திரம் மற்றும் "மகாகபி கிரிஷ்சந்திரா" என்ற படத்தில் கவிஞர், நாடக ஆசிரியர்/நாடக ஆசிரியர் மற்றும் நடிகரான கிரிஷ்சந்திர கோஷின் கதாபாத்திரம் ஏற்று முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்தார். சத்யஜித் ராயின் கஞ்சன்யங்கா என்ற படத்தில பறவையியலாராக ஒரு சிறிய பாத்திரத்திலும் பின்னர் "அரண்யார் தின் ராத்ரி" என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ராஜ் கபூருடன் ஜக்தே ரஹோ, சக்தி சமந்தா இயக்கிய "ஆராதனா" என்ற இரட்டை பதிப்பு திரைப்படங்கள் மற்றும் தி ஹவுஸ்ஹோல்டர் என்ற ஆங்கில படத்தில் யானைத் தந்த வியாபாரியாக ஒரு துணிகர பாத்திரத்தில் நடித்திருந்தார்.

குறிப்புகள் தொகு

  1. Sunil K. Datta (2002). The raj & the Bengali people. Firma KLM. பக். 137. https://books.google.com/books?id=iIZuAAAAMAAJ. பார்த்த நாள்: 31 October 2012. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாரி_சன்யால்&oldid=3505977" இலிருந்து மீள்விக்கப்பட்டது