பகுப்பு பேச்சு:சிவ வாகனங்கள்

Active discussions

@Jagadeeswarann99: @Arulghsr: புராணங்களின்படி சிவனது வாகனமாகக் கருதப்படுவது ரிஷபம் மட்டும்தானே?. இப்பகுப்பினுள் காணப்படுபவை சிவன் கோயில்களில் மட்டுமல்லாது ஏனைய கடவுளர் கோயில்களிலும் திருவிழாக்காலங்களில் உற்சவ மூர்த்தியை ஊர்வலம் எடுத்துச் செல்லப்பயன்படும் அலங்கார வடிவங்கள். இவற்றை எவ்வாறு தனிப்பட்டு சிவனின் வாகனங்கள் எனக் குறிப்பிடலாம்? அருள்கூர்ந்து தங்களது விளக்கத்தைப் பதிவுசெய்து எனது ஐயத்தைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:09, 8 மார்ச் 2017 (UTC)

விளக்கம்தொகு

Booradleyp1 இந்த வாகனங்கள் பிற கடவுள்களின் வாகனங்களான பயன்படுத்தப்பட்டாலும் பெருமலவில் சிவன் கோயில்களில் வாகனங்களாகவும் பயன்படுத்தப்படுவதால் சைவம் வலைவாசலில் சிவ வாகனங்கள் என்ற பகுப்பில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல பிற கடவுள்களின் வாகனப் பகுப்புகளிலும் இவற்றை இணைக்கலாம்.--Arulghsr (பேச்சு) 05:18, 8 மார்ச் 2017 (UTC)

அருளரசன், எனக்கு என்னவோ இந்த விளக்கத்தில் உடன்பாடில்லை. எல்லாக் கடவுள்களுக்கும் திருவிழாக்களின் போது நாம் அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் அமைப்புகளை குறிப்பிட்டதொரு கடவுளுக்கான வாகனங்களாகக் குறிப்பிடுவது புராணங்கள் கூறும் அந்தந்தக் கடவுள் வாகனங்களோடு முரண்படும் தகவலாகவே உள்ளது என்பதே எனது கருத்து. --Booradleyp1 (பேச்சு) 05:31, 8 மார்ச் 2017 (UTC)

Booradleyp1 அப்படியானால் இந்த வாகனங்களின் பகுப்பை இந்து சமய கடவுள் வாகனங்கள் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ புதியதாக ஒரு பகுப்பை உருவாக்கி சேர்க்கவேண்டும் இதில் பகுப்பை உருவாக்கிய @Jagadeeswarann99: கருத்து என்னவென்று தெரியவில்லை --Arulghsr (பேச்சு) 05:48, 8 மார்ச் 2017 (UTC)

அவரது கருத்தையும் தெரிந்து கொள்ளலாம்.--Booradleyp1 (பேச்சு) 05:53, 8 மார்ச் 2017 (UTC)

சிவ வாகனங்களுக்கும் பிற வாகனங்களுக்கும் உள்ள வேறுபாடுதொகு

வணக்கம் அம்மா, இந்தப் பகுப்பில் சிவாலயங்களில் சிவனுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை தனித்து திரட்ட முற்பட்டேன். சிவனுக்கென ரிசபம் மட்டுமல்லாது, அதிகார நந்தி, கயிலாய வாகனம் போன்றவை மிகத்தனித்துவமாகப் பேனப்படுகின்றன. பரவலான சமய அறிவு தமிழ்நாட்டில் போதிக்கப்படாமையால், இவை குறித்தான சிந்தனைகள் பரவுவதில்லை. கயிலாய வாகனம், பூத வாகனம், அதிகார நந்தி போன்றவற்றை பிற தெய்வங்களுக்கு வாகனமாக பயன்படுத்துவதில்லை. எம வாகனம், புருச வாகனம் போன்ற அரிய வாகன வகைகளும் கூட இருக்கின்றன. சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான வாகனங்கள் இவை. இவையன்றி சிவபெருமானுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொதுவான வாகனங்களைக் கூட இந்த பகுப்பில் இணைக்கலாம். கட்டுரையில் மட்டும் புதிய பகுப்பான அந்த தெய்வங்களின் பெயரோடு வாகனங்கள் என்ற புதுப் பகுப்பினையோ, இந்துதெய்வ வாகனங்கள் என்றோ இணைத்துவிடலாம்.

சிவபெருமானுக்கு இருப்பதைப் போன்ற திருமாலுக்கும் தனித்த வாகனங்கள் இருக்கின்றன. இராப்பத்து, பகல் பத்து நாட்களில் பெரிய பட்டியலே திருமாலுக்கு இருக்கிறது. அவை குறித்தான தகவல்கள் கிடைத்தால் திருமால் வாகனங்கள் என்ற பகுப்பில் புதியக் கட்டுரைகளை அமைக்கலாம். தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 8 மார்ச் 2017 (UTC)

Return to "சிவ வாகனங்கள்" page.