பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்

There is another category பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும் which has to be merged here. I think a bot can do this job -SriniG 14:09, 24 நவம்பர் 2006 (UTC)Reply

இதனைத் தானியங்கி கொண்டு டெரன்ஃச், வினோத், உமாபதி யாராவது செய்ய இயலுமா? --சிவகுமார் \பேச்சு 13:31, 31 ஜனவரி 2008 (UTC)
VinodhBOT pywikipedia Frameworkஇன் Category.py -move -from:XX -to:YY என்ற Command Line Parameter மூலம் பகுப்புகளை தற்சமயம் மாற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 10 நிமிடங்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் βινόδ  வினோத் 15:42, 31 ஜனவரி 2008 (UTC)
பணி நிறைவடைந்தது. பகுப்பை நீக்கிவிடவும் βινόδ  வினோத் 15:51, 31 ஜனவரி 2008 (UTC)

ஊர்ப்பெயர்கள்: மங்கலம், அகரம் தொகு

-ஆ.சிவசுப்பிரமணியன், பேராசிரியர்[1]

வியப்பூட்டும் தகவல், எங்கள் ஊர் பக்கத்தில் விக்கிரமங்கலம் என்று ஒரு ஊர் உண்டு. -- சுந்தர் \பேச்சு 14:23, 31 ஜனவரி 2008 (UTC)

ஊர்ப்பெயர்கள்: தலைவாய், வாய்த்தலை தொகு

  • ஆற்றில் ஓடும் நீர் ஒரு கால்வாய் மூலம் பிரிந்து, வளைந்து மீண்டும் ஆற்றில் சேர்க்கப்படும். இப்படி வளைகின்ற இடத்தில் ஒரு வாய் ஏற்படுத்தி பாசன வாய்க்கால் உருவாக்கப்படும். இந்த அமைப்பு தலைவாய் அல்லது வாய்த்தலை எனப்படும். (காட்டு:பேட்டவாய்த்தலை, கரூர் அருகே காவிரிப்பகுதியில் உள்ள ஊர்)[2].

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் மண்ணே வணக்கம். விகடன் பிரசுரம். டிசம்பர், 2006. பக். 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-89780-90-5. 
  2. பக் 33, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். பக். 87. ISBN 81-87371-07-2. 

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களும் நகரங்களும் என்பது கூடிய பொருத்தம்,... தொகு

--Natkeeran 22:31, 8 ஜனவரி 2009 (UTC)

  விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:37, 19 ஆகத்து 2014 (UTC)Reply

தகவல்கள் தொகு

ஊர்களைப் பற்றிய கட்டுரைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இன்னும் பல கட்டுரைகள் வரவிருக்கின்றன. அவற்றை மேம்படுத்த சில யோசனைகள்: கீழ்க்கண்ட பகுதிகளை உட்பிரிவுகளாகச் சேர்க்கலாம்.

  • அமைவிடம்
மாவட்டம், வட்டம், பரப்பளவு, நிலை:ஊர்/ஊராட்சி/ஊராட்சி ஒன்றியம்
பெயர்க் காரணம்
  • போக்குவரத்து
சாலைகள்: தேசிய/மாநில நெடுஞ்சாலை, உள்வட்ட, வெளிவட்ட, இணைப்பு சாலைகள், புறவழிச் சாலை ஆகியவற்றின் அண்மையில் இருந்தால் அதைக் குறிப்பிடலாம்.
உள்ளூரில் சாலை வகை:தார்சாலை/மண்சாலை
அண்மையில் உள்ள பெரிய நகரங்களும் அவற்றிற்கான தொலைவும்
பேருந்துகள், சிற்றுந்துகள் ஊருக்குள் வருகின்றனவா, கடந்து செல்கின்றனவா என்ற தகவல்.
அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
  • நிலப்பரப்பு
நில வளம் - விளையும் பயிர்கள், மண் வகை, வகைப்பாடு - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
நீர் வளம் - ஊருக்குள் பாயும் ஆறு, துணையாறு, கால்வாய், ஏரி, குளம்.... நீராதாரம், நீர்ப் பாசன முறைகள்
  • தொழில்/பொருளாதாரம்
எ.கா: உழவு, நெசவு, குறுந்தொழில் உள்ளிட்டவை
  • மக்கள்
மக்களின் எண்ணிக்கை, ஆண்/பெண் விகிதம், கல்வியறிவு உள்ளிட்டவை
உள்ளூர் குலதெய்வங்கள், சடங்குகள் (தனித்துவமானவற்றை விரித்துக் கூறலாம், பொதுவான சடங்குகளை சுருக்கிக் கூறலாம்.), வாழ்க்கை முறை
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள்
  • அலுவலகங்கள்/அமைப்புகள்
அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும்
கூட்டுறவு சங்கங்கள், உழவர் உதவி மையங்கள், மண்டல மையங்கள் உள்ளிட்டவை
  • கூடுதல் (பொருத்தமான கட்டுரைகளுக்கு மட்டும்)
மத்திய, மாநில அரசுகளிடம் பெற்ற விருது
தொழிற்சாலைகள், ஆலைகள், அரசு சார்ந்த நிறுவனங்களின் கிளைகள், உற்பத்திப் பிரிவுகள்
பிரபலமான நபர்கள் (எ.கா: அரசின் உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள்.....)
முற்காலத்தைய பெயர்கள், சங்க கால, இடைக்கால நிகழ்வுகள் குறித்த ஆய்வாளர்களின் கருதுகோள்கள் (சான்றுகளுடன்)
கல்வெட்டும் சாசனங்களும் இன்ன பிறவும்.
ஊரைப் பற்றிய அறிஞர்களின் குறிப்புகள், செவி வழிக் கதைகள் / வரலாறு
  • படங்கள்
தனித்துவமான சடங்கு முறை இருப்பின், தொடர்புடைய படங்கள்

புதிய பயனர்கள் ஊர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதும் போது, இவற்றில் சில தலைப்புகளை கட்டுரையில் சேர்த்து விடலாம். என்ன எழுதுவது என்று குழம்பி இருப்போருக்கு உதவியாக இருக்கும். இவற்றினுள் சேர்க்கப்படும் தகவல்களில் கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்ப இல்லாதவற்றை திருத்திக் கொள்ளலாம். இவற்றில் சிலவற்றை தமிழக அரசு இணையதளங்களில் தேடிப் பெறலாம். ஏனைய மாநிலங்களிலும், நாட்டிலும் உள்ள கட்டுரைகளிலும் இவற்றில் தகுந்தவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் தகாதவற்றை/பொருந்தாதவற்றை நீக்கிவிடலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு)

ஒழுங்கமைவு தொகு

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:27, 22 மே 2023 (UTC)Reply

Return to "தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" page.