பகுப்பு பேச்சு:மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்
தானியக்க பிழை நீக்கம்
தொகுஒரு புதுக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து கடத்தும் போது மேற்கோள்களில் உள்ள பிழைகளால் இப்பகுப்பானது தானாக உருவாகிறது. இதில் செல்லாத <ref> குறிச்சொல்; *** என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை போன்ற பிழைகள் அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. இவற்றிற்கான விரிவான மேற்கோள்களை ஆ.வி.யிலிருந்து பயனரொருவர் எடுத்து வருவது சற்று கடினமான பணி. அதிகக் கட்டுரைகளும் தேக்கமடைந்துள்ளன. மாற்றாகத் தானியங்கியால் இந்த வழு காட்டும் <ref> அங்கத்தை நீக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். மாதிரி 1, 2, 3. இந்தப் பணிக்கு NeechalBOT கணக்கின் வழித் தானியக்கத்தை இயக்க இயலும். இதைச் செய்யலாமா? மற்றவர்களின் கருத்து/ஆதரிவினை அறிய விரும்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:38, 13 மே 2023 (UTC)
ஆதரவு
தொகு- ஆதரவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:46, 13 மே 2023 (UTC)
- ஆதரவு -- ஸ்ரீதர். ஞா (✉) 15:23, 13 மே 2023 (UTC)
கருத்து
தொகுவணக்கம் நீச்சல், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனது ஐயங்கள்
- இதுபோல் ஆங்கிலக் கட்டுரையில் இருந்து எடுக்கலாம் தானே?
- இது போல் உள்ள கட்டுரைகளில் <ref name="ChatGPTForbes"> என்று இருந்தால் அதுவும் நீக்கப்படுமா?.
- <ref> அங்கத்தை நீக்குவதன் மூலம் அந்த இடத்தில் உள்ள (பிழையான) சான்று நீக்கப்படும். ஆனால் அங்கு சான்று தேவை தானே? எனவே நீக்கிய பின்னர் சான்று தேவை எனும் வார்ப்புருவினை இடலாமா? நன்றி - ஸ்ரீதர். ஞா (✉) 13:46, 13 மே 2023 (UTC)
- ஆமாம். தற்போதைக்குப் பிழை காட்டுவதால் உள்ளடக்கமில்லாத பெயரிடப்பட்ட ref அங்கங்கள் நீக்கப்படும். நீங்கள் குறிப்பிட்டது போல அந்தப் பெயருக்கான மேற்கோள்கள் ஆங்கிலத்திலிருந்து எடுக்க முடியும். ஆங்கிலத்தில் இல்லாதவை/கண்டுபிடிக்கமுடியாதவற்றை மட்டும் நீக்கலாம். முயல்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:55, 13 மே 2023 (UTC)
கட்டுரையைத் தொடங்குபவரே இவற்றைத் தொடக்கத்திலேயே சரி செய்யலாம். அதுவே நன்றாக இருக்கும். புதிதாகக் கட்டுரை எழுதுபவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தானியங்கி செய்யும் தானே என்று விட்டு விடுவார்கள். கட்டுரை எழுதுபவர் சரியான மேற்கோள்களை ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து தேடிக் காட்டுவதே நல்லது. அனுபவமிக்க பயனர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பழைய கட்டுரைகளைத் தேவையென்றால் தானியங்கி மூலம் திருத்தலாம்.--Kanags \உரையாடுக 23:01, 13 மே 2023 (UTC)
- @Kanags: வணக்கம். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை தானியங்கி மூலமாக திருத்துவதற்குதான் ஆதரவைத் தெரிவித்துள்ளேன். நீச்சலும் அதைத்தான் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 14 மே 2023 (UTC)
- @Kanags இப்பிழை பற்றிய புரிதல் புதியவர்களுக்குத் தெரியாது. மேலும் அதே ref name கொண்ட மேற்கோளை எடுப்பதால் பயனர்களைவிட இத் தானியங்கி இந்தப் பணியினைச் சிறப்பாகச் செய்யும். இது தானாக உருவாகும் பகுப்பு என்பதால் ஒரு வாரம் கடந்த கட்டுரைகளில் மட்டும் இந்தப் பணியைச் செய்யலாமா? அதற்குள் பயனரே மாற்ற முனையலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 03:51, 14 மே 2023 (UTC)
- அதே ref name கொண்ட மேற்கோள்களைத் தானியங்கியால் எடுக்க முடியுமானால் சிறப்பு. அவ்வாறே செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:01, 14 மே 2023 (UTC)
- நீங்கள் கூறியது போல ref name கொண்ட மேற்கோள்களைத் தானியங்கியால் தற்போது எடுத்து இற்றை செய்து, பிழைகளை நீக்கமுடிகிறது. ஆங்கிலக் கட்டுரையில் இல்லையென்றால் மட்டும் நீக்கப்படுகிறது. சுமார் 15 கட்டுரைகளில் தானியக்கத்தைச் செயல்படுத்தியுள்ளேன். உதாரணம்அட்டாக் ஆன் டைட்டன், 2016 ஊரித் தாக்குதல், அக்கெனதென், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள். வேறு பரிந்துரைகளோ, சிக்கல்களோ இருந்தால் சுட்டிக் காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:55, 9 சூலை 2023 (UTC)
- நேற்றிரவு சுமார் 500 கட்டுரைகளில் வார்ப்புருப் பிழை சரி செய்யப்பட்டது. சிக்கல் வாய்ந்த நான்கு கட்டுரைகளைத் தவிர (கோலான் குன்றுகள், எலன் சாயர் கோகு, இந்தியாவில் பெண்ணியம், நண்டு உண்ணும் குரங்கு) மற்றவற்றில் சரியாக நீக்கமோ, சேர்ப்போ நிகழ்ந்துள்ளது. இந்த நான்கு சிக்கலான கட்டுரைகளில் நிகழ்ந்த திருத்தங்கள் மீளமைக்கப்பட்டன. -நீச்சல்காரன் (பேச்சு) 02:57, 22 சூலை 2023 (UTC)
- அதே ref name கொண்ட மேற்கோள்களைத் தானியங்கியால் எடுக்க முடியுமானால் சிறப்பு. அவ்வாறே செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:01, 14 மே 2023 (UTC)