பகுப்பு பேச்சு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்

விக்கிமீடியா கொமன்ஸில் உள்ள படிமங்களை நீக்கலாம்தானே? அவை இணைக்கப்பட்ட பக்கங்களை அவதானித்துத் தேவையெனின் உரிய மாற்றங்கள் செய்தபின் நீக்குவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். படிமங்களை பகுக்கவும் கட்டற்ற படிமங்களையே கொமன்ஸில் பதிவேற்றிப் புதிதாகப் பயன்படுத்தவும் நாம் தொடங்க வேண்டும். --கோபி 14:11, 26 ஜனவரி 2007 (UTC)

கொமென்சில் உள்ள படிமங்களை இங்கே நீக்கவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கியில் இலட்சக்கணக்கில் கொமென்சில் உள்ள படிமங்கள் இருக்கின்றன. இதற்குச் செலவிடும் நேரத்தை வேறு முக்கியமான பணிகளுக்குச் செலவிடுவது நல்லது. Mayooranathan 15:09, 26 ஜனவரி 2007 (UTC)
த.வி. யில் பயன்படாதிருந்த கொமன்ஸில் உள்ள படிமங்களையே நீக்கினேன். பயன்படுவனவற்றைத் தேடித் தேடி நீக்க வேண்டிய அவசியமில்லைத்தான். --கோபி 15:37, 26 ஜனவரி 2007 (UTC)
நண்பர்களே, இங்கே தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் மற்றும் படிமங்களை கண்காணிப்பது இலகு காமன்ஸ்ஸில் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளவர்கள் யாருக்காவது நிர்வாக அணுக்கம் இருந்தால் நல்லது. அவ்வாறு இல்லையென்றால் அதுவரை இங்கேயுள்ளவற்றை அழிக்காமல் விட்டாலும் பரவாயில்லை என்றே நினைக்கின்றேன் ஏனென்றால் காமன்ஸில் யாராவது அழித்தால் அதை மீள்விப்பது கடினம் இங்கே இலகுவாகச் செய்யலாம். தமிழ் விக்கிபீடியாவில் படிமங்கள் இருப்பது மேலதிகமானது என்றாலும் ஓர் Backup என்றாவது எடுத்துக் கொள்ளலாம் இல்லையா. தவிர இப்போது ஹாட்டிஸ்க் ஒன்றும் பெரிய விலை இல்லை 250GB SATA Drive 95 டாலர்கள் அளவே கொழும்பில் போகின்றது. தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்கள் குறைவே தவிர தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்களுக்கு நேரக்குறைவு இணைய இணைப்பு இன்மை ஆகிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தவிர இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற ஆமை வேக இணைப்பும் எந்த நேரம் இணைய இணைப்பு வரும் போகும் என்றே சொல்லமுடியாத நிலையில் உள்ளது. மயூரநாதன் கூறியதைப்போன்று கட்டுரை ஆக்கத்தில் கூடுதலாக கவனம் செலுத்துவதே தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று திடமாக நம்புகின்றேன். --Umapathy 16:11, 26 ஜனவரி 2007 (UTC)

உமாபதி சுட்டிக்காட்டியிருப்பது ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியது. த.வி. க்குப் பிரத்தியேகமான குறிப்பாகத் தமிழ்ச் சூழலுடன் தொடர்புடைய படிமங்கள் கொமன்ஸில் இருதாலும் நீக்காமல் விடலாம்தான். ஆனால் மிகவும் பொதுவான படிமங்களை இங்கும் வைத்திருக்க வேண்டியதில்லை. --கோபி 17:14, 26 ஜனவரி 2007 (UTC)

விக்கிமீடியா பொது தொகு

விக்கிமீடியா பொது என்று காமன்ஸை குறிக்கலாம். என்ன சொல்கிறீர்கள்? --Natkeeran 19:23, 29 ஜனவரி 2007 (UTC)

தலைப்பில் இற்றை தேவை தொகு

Return to "விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்" page.