பசுக் கண்ணிமுடிச்சு

பசுக் கண்ணிமுடிச்சு (Cow hitch) என்பது கண்ணிமுடிச்சு (hitch) வகையைச் சேர்ந்த ஒரு முடிச்சு ஆகும். இதில் இரண்டு அரைக் கண்ணிமுடிச்சுக்கள் எதிரெதிர்த் திசையில் அமைந்துள்ளன. இவாறான அரைக் கண்ணிமுடிச்சுக்கள் ஒரே திசையில் அமைந்தால் அது கராம்புக் கண்ணிமுடிச்சு எனப்படும்.

பசுக் கண்ணிமுடிச்சு
பெயர்கள்பசுக் கண்ணிமுடிச்சு, Lark's head, Lark's foot, Girth hitch, வளையக் கண்ணிமுடிச்சு, Lanyard hitch, Baggage Tag Loop
வகைகண்ணி வகை முடிச்சு
மூலம்தெரியாது
தொடர்புClove hitch, Cat's paw, Prusik, Klemheist, Icicle hitch
அவிழ்ப்புNon-jamming
பொதுப் பயன்பாடுTying a rope to a ring or pole
எச்சரிக்கைCan fail unless equal tension is applied to both of the standing parts of the rope.
ABoK
  1. 244

கட்டும் முறை

தொகு

கயிற்றின் இரண்டு முனைகளையும் பயன்படுத்திக் கட்டுதல்

தொகு

கட்டுவதற்குக் கயிற்றின் இரு முனைகளையும் பயன்படுத்த முடியுமானால், பின்வரும் முறையில் இம் முடிச்சைப் போட முடியும். ஒரு வளையத்தில் இம்முடிச்சைப் பயன்படுத்திக் கயிற்றைக் கட்டும் முறை இந்து தரப்படுகிறது:

  1. கயிற்றை இரண்டாக மடித்து மடிப்புப் பக்கத்தைக் கீழிருந்து வளையத்தினூடாகச் செலுத்தவேண்டும்.
  2. மடிப்பின் நுனியை வளையத்தினூடாகக் கீழ் நோக்கி இழுக்கவேண்டும்.
  3. இரண்டு நிலைப் பகுதிகளையும் எடுத்து அவற்றின் முனைகளை ஒருங்கே வளையத்தினூடாகக் கீழ்நோக்கித் தொங்கும் மடிப்பினூடாகச் செலுத்தி இழுக்கவேண்டும்.

இதுவே பசுக் கண்ணிமுடிச்சுப் போடும் முறையாகும்.

 
Tying a cow hitch

குறிப்புகள்

தொகு


இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுக்_கண்ணிமுடிச்சு&oldid=2742658" இலிருந்து மீள்விக்கப்பட்டது