பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம்
பஞ்சாப் பெண்கள் ஆணையம், பஞ்சாபின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின், அறிவிப்பு எண்:, 2/31/91-2(SW) 1728, 19/05/1998 என்ற தேதியிட்ட அறிவிக்கையின் படி உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண்களைப் பாதிக்கும் நியாயமற்ற நடைமுறைகள் பற்றிய பஞ்சாப் மாநில பெண்களுக்கான ஆணையச் சட்டம், 2001 (பஞ்சாப் சட்டம் எண். 4, 2001) 19/4/2001 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக சட்டரீதியான அமைப்பாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் உள்ளது. [3]
ஆணையம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 15 October 2004 |
ஆட்சி எல்லை | பஞ்சாப் அரசு |
தலைமையகம் | பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம், எஸ்சிஓ எண். -57, 58, 59 செக்டார்-17-சி (நீலம் திரையரங்கின் மேல் தளம்) சண்டிகர்.[1][2] |
ஆணையம் தலைமை |
|
வலைத்தளம் | Official Website அதிகாரப்பூர்வ இணையதளம் |
வரலாறு மற்றும் நோக்கம்
தொகுபெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குடும்பத்தாலும், மற்றவர்களாலும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராக பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும் அது தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை விசாரிக்கவும், [4] அம்மாநிலத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கும் இந்த பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்திற்கு அதிகாரங்கள் உள்ளன.
இந்த ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநில பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்.
- பெண்களின் தொடர்புடைய சட்டங்களை மீறுவது அல்லது அவர்களுக்கான வாய்ப்பினை மறுப்பது அல்லது பெண்களுக்குரிய எந்தவொரு உரிமையையும் பறித்தல் ஆகியவற்றில் சரியான நேரத்தில் தலையிடுவதன் மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளவும்.[5]
- பெண்கள் சார்ந்த பிரச்சினைகளில் தீர்வுகள் குறித்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்தல்.
- மாநிலத்தின் பெண்கள் அடிப்படையிலான சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.[6]
இம்மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக மனிஷா குலாட்டி பணியாற்றி வருகிறார். மேலும் துயரமடைந்த பெண்கள் உடனடியாக புகார்களைத் தெரிவிக்க தனது எண்ணை 88659-00064 பகிரங்கமாக அறிவித்துள்ளார்.[7]
அமைப்பு
தொகுபஞ்சாப் மாநில மகளிர் ஆணையமானது, ஒரு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களுடன் இயங்கிவருகிறது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளையும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான வழிமுறைகளையும் ஒன்றிய சமூக நலத்துறை உருவாக்குகிறது. அவர்களின் சம்பளம் மற்றும் பிற ஊதியங்கள் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டு தேவைப்படும்போது திருத்தப்படுகின்றன. மத்திய சமூக நல வாரியத்தின் ஒப்புதலுடன், புது தில்லி மாநில சமூக நல வாரியங்களின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை நிர்வகிக்கும் விதிகளின்படி. காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), பஞ்சாப் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பஞ்சாப் இயக்குநர் ஆகியோர் இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக உள்ளனர். அரசாங்கத்தின் இணைச் செயலாளர் பதவிக்குக் குறையாத பெண் ஐஏஎஸ்/பிசிஎஸ் அதிகாரிகளிடமிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்-செயலாளரையும் இந்த ஆணையம் உள்ளடக்கியுள்ளது.
திருமதி. மனிஷா குலாட்டி, தற்போதைய பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ளார். அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருந்தாலும், 2020 ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநில அரசால் அவரது பதவி பறிக்கப்பட்டது. அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையுத்தரவு வாங்கி தலைவராக இருந்துவருகிறார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Punjab State Commission For Women". Punjab State Commission For Women. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
- ↑ "Punjab State Commission For Women". Punjab State Commission For Women. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
- ↑ "சமூக பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை".
- ↑ Rajagopalan, Swarna (30 May 2016). "Why National and State Women's Commissions are important and should be held accountable". dnaindia.com. https://www.dnaindia.com/india/report-why-national-and-state-women-s-commissions-are-important-and-should-be-held-accountable-2217939.
- ↑ "Punjab Women's Panel Wants Action Against Honey Singh For "Vulgar Lyrics"". https://www.ndtv.com/india-news/punjab-womens-panel-wants-action-against-honey-singh-for-vulgar-lyrics-2063212.
- ↑ "Women Commission Chairperson asked members to sensitize women about their rights and welfare schemes". http://www.diprpunjab.gov.in/?q=content/women-commission-chairperson-asked-members-sensitize-women-about-their-rights-and-welfare.
- ↑ "Punjab State Commission For Women". ndtv.com. 19 September 2019. https://www.ndtv.com/india-news/punjab-womens-panel-chief-manisha-gulati-shares-her-phone-number-for-registering-complaints-2103965. பார்த்த நாள்: 15 January 2022.
- ↑ "பஞ்சாப் மகளிர்ஆணையம்: மகளிர்குழு தலைவர்பதவிக்கான புதிய நியமனத்தை இறுதி செய்ய வேண்டாம் என்று பஞ்சாபை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது".