பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்

பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் (Punjab Agricultural University, PAU) இந்திய மாநிலம் பஞ்சாபில் லூதியானா நகரில் அமைந்துள்ள மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகமாகும்.[1] இது 1962இல் நாட்டின் இரண்டாவது மிகப் பழைய வேளாண்மைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது; பாந்த்நகரில் உள்ள கோவிந்த் பல்லவ் பாந்த் வேளாண்மை மற்றும் தொழினுட்ப பல்கலைக்கழகம் முதன்முதலாக நிறுவப்பட்ட வேளாண்மைக்கான பல்கலைக்கழகமாகும். வேளாண் கல்வியில் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பன்னாட்டளவில் நற்பெயர் உள்ளது. 1960களில் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்நடத்தியப் பெருமையும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.[2] 2005ஆம் ஆண்டில் இதிலிருந்து குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் உருவானது.

பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்
PAU Seal
வகைபொதுத்துறை
உருவாக்கம்1962
துணை வேந்தர்பல்தேவ்சிங் தில்லோன்
கல்வி பணியாளர்
1250
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம் 1,510 ஏக்கர்கள் (6.1 km2)
சேர்ப்புஏசியூ, ஐசிஏஆர், யுஜிசி
இணையதளம்www.pau.edu

மேற்சான்றுகள்

தொகு