பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை (Pattukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பட்டுக்கோட்டை | |
— தேர்வு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E |
நாடு | இந்தியா |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பட்டுக்கோட்டை |
தலைமையகம் | தஞ்சாவூர் |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் |
[[தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினர்]] | |
சட்டமன்றத் தொகுதி | பட்டுக்கோட்டை |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 5 மீட்டர்கள் (16 அடி) |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5 மீட்டர் (16 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18,437 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 73,135 ஆகும். அதில் 36,386 ஆண்களும், 36,749 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7019 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,286 மற்றும் 587 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.82%, இசுலாமியர்கள் 7.57%, கிறித்தவர்கள் 5.34% மற்றும் பிறர் 0.18%ஆகவுள்ளனர். இந்த தொகுதியில் முக்குலத்தோர், வெள்ளாளர்,முத்தரையர், ஆதிதிராவிடர், இஸ்லாமியர்கள், மற்றும் மீனவர்கள் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.[2]
சுற்றுலாத்தலம்
தொகுபட்டுக்கோட்டை பகுதி பட்டு மழவராயர் என்பவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.[3] பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தலம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற 'கல்யாணசுந்தரம் மணிமண்டபம்' அமைந்துள்ளது.
பெயர்க் காரணம்
தொகுபதினேழாம் நூற்றாண்டுக்கு முன்பே பட்டுக்கோட்டை எனும் பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. ’பட்டு மழவராயர்’ எனும் கள்ளர் குழுத்தலைவன் வாழ்ந்ததாகவும் அவரால் கோட்டைக் கட்டப்பட்டதாகவும் தஞ்சை அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.[4][நம்பகமற்றது ] இதுவே பட்டுக்கோட்டை எனப் பெயர் வரக் காரணமாகும்.
கோயில்
தொகுசிதிலமடைந்து புனர்நிர்மாணிக்கப்படும் பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது. இப்போது இக்கோவில் புதிய ஆலயமாக மாற்றப்பட்டு தற்போது புதுப்பொலிவு பெற்று வழிபாடு நடைபெற்று வருகிறது.
இங்கு நாடியம்மன் திருக்கோவில் உள்ளது.
புகழ்பெற்றவர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pattukkottai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ 176 - பட்டுக்கோட்டை தி இந்து தமிழ் இதழ்
- ↑ "நாடி வருவோரை காக்கும் நாடியம்மன்". தினகரன் (இந்தியா). https://m-dinakaran-com.cdn.ampproject.org/v/s/m.dinakaran.com/article/News_Detail/22279/amp?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQHKAFQCrABIA%3D%3D#aoh=16056968659940&_ct=1605697194885&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s.
- ↑ சோழ நாட்டின் ஊர்-பெயர். 2020. pp. [58].