குரால்

(பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரால்[1] எனும் பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை (Collared Scops Owl, Outs bakkamoena) ஆசியாவின் தென் பகுதியில் மட்டுமே வாழும் ஓர் ஆந்தை வகை ஆகும்.

உடலமைப்பு தொகு

24 செ.மீ. - தலையில் காதுபோல் அமைந்த சிறு கொம்புகளும் பின் கழுத்தில் வெளிர்பட்டையும் கொண்டது. உடல் சாம்பல் பழுப்பாகக் கருஞ்சிவப்புத் தோய்ந்து காணப்படும். மார்பும் வயிறும் வெளிர் மஞ்சளாகக் கருங்கோடுகளும் நெளியான செம்பழுப்புக் கீற்றுக்களும் கொண்டது.

வாழிடச்சூழலும் நடத்தையும் தொகு

தமிழகம் எங்கும் இலையுதிர்க் காடுகள், மாறாப் பசுங்காடுகள், தோப்புகள், வயல்கள், சார்ந்து பகல் முழுவதும் மரக்கிளைகளில் இலை தழைகளிடையே பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு ஓணான், எலி, தத்துக்கிளி, வண்டு முதலியவற்றை இரையாகத் தேடி உண்ணும். வாயுட்? வாயுட்? எனக் கேள்வி கேட்பது போன்ற இதன் குரல் கொண்டு மட்டுமே இதன் இருப்பை அறிய முடியும். தொடர்ந்து இதுபோலக் குரல் கொடுத்தபடி இருக்கும்.

இனப்பெருக்கம் தொகு

ஜனவரி முதல் மார்ச் முடிய மரப்பொந்துகளில் 3 முதல் 5 முட்டைகள் இடும்.[2]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மதுரைக்காஞ்சி. "நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரல" 
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:75

உள் இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Otus bakkamoena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரால்&oldid=3774289" இலிருந்து மீள்விக்கப்பட்டது