பண்டாரியாவெளி நாககட்டு ஆலயம்

பண்டாரியாவெளி நாககட்டு ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொன்மைமிக்க நாகதம்பிரான் ஆலயமாகும். இது மட்டக்களப்பிற்குத் தெற்கே மண்முனை வாவிக்கு அப்பால் பண்டாரியாவெளி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

அற்புதவரலாறு தொகு

இவ்வாலயம் சுமார் மூன்றாம் நூற்றாண்டுக்குரியது எனக் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஏழைக்குடும்பமொன்றில் ஐந்தாவதாகப்பிறந்த பெண் பிள்ளையுடன் நாகபாம்பொன்று சேர்ந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்தவுடன் இந்நாகம் இங்கிருந்து பிரிந்து பக்கத்தில் வளர்ந்து வந்தது. இந்நிகழ்வுடன் ஏழையாக வாழ்ந்த குடும்பத்தில் செல்வம் மிகுந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறப்படுகின்றன.

குடும்பத்திலுள்ளவர்களின் சொத்துக்கள் பிள்ளைகளிடையே பங்கிட்ட போது ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட்டதாகவும் அதனை இந்நாகம் குழப்பிவந்நதாகவும் இறுதியில் உணர்ந்து ஆறு பங்குகளாகப் பிரிக்கப்பபட்ட போது நாகம் தன்பங்கை தானட சேர்ந்து பிறந்த பெண்ணுடைய பங்குகளுடன் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.இவ்வாறு தமது பங்கை எடுத்துக் கொண்டு செல்லம் வழியில் காடடெருமை முட்டவந்த போது தலையிலிருந்த பங்குப் பொருட்கள் வீழ்ந்து சிதற அதனுள்ளிருந்த நாகதம்பிரான் அருகிலிருந்த காஞ்சுரை மரப் பொந்தில் புகுந்கு கொண்டதாகவும். இவ்வாறு நாகம் புகுந்த இடமே இன்று நாககட்டு ஆலயம் அமைந்து எம்பிரான் அருளாட்சி செய்கின்ற தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக காஞ்சுரை மற்றும் வேம்பு காணப்படுகிறது.

ஆலய உற்சவம் தொகு

நாககட்டுப் பொங்கலிடல் நாளாந்த வழிபாட்டு முறையாக காணப்படுகிறது. இதன் வருடாந்த ஆலய உற்சவம் ஆனி உத்தரத்திற்கு இரு தினங்கள் முந்தியதாக தோடங்கும். தொடர்ந்து எட்டு நாள்கள் விழா நடைபெறும்.உற்சவ விழாவில் பட்டிப்பளை, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, கடுக்காமுனை, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி (படையாண்டவெளி) ஆகிய கிராம மக்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட திருவிழாப் பூசைகளைச் செய்து முடிப்பர்.

அறங்காவலர் சபை தொகு

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலயக் குடிவழிமரபே இங்கும் பேணப்பட்டு ஆலய நிருவகிப்புச் செய்யப்படுகிறது.

ஆதாரம் தொகு