பதார் நடனம்

பதார் நடனம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தொன்மையான நாட்டுப்புற நடனம் ஆகும். பால் பிராந்தியத்தைச் சேர்ந்த நல் சரோவர் ஏரிக்கரையில் வசிக்கும் பதார் என்ற மீனவர் சமூகத்தால் இது நிகழ்த்தப்படுகிறது.

பதார் பழங்குடி தொகு

பல பழங்குடி சமூகங்களின் பூர்விகமாக குஜராத் மாநிலம் விளங்குகிறத. பதார் குஜராத் மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஒரு சமூகமாகும். அடிப்படையில் ஒரு இந்து மதத்தை சோ்ந்த பழங்குடி சமூகமான பதர் விவசாயம், மீன்பிடி போன்றவை முக்கியத் தொழிலாகும். பதார் சமூக மக்கள் துர்கா தேவியின் பல வடிவங்களை மதித்து வணங்குகிறார்கள், இந்த நடனம் பதார் பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.மேற்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நால் ஏரிக்கு அருகில் வசிக்கும் பதார் மக்களின் வாழ்க்கைமுறை பதார் நடனம் மூலம் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. சிலரின் கூற்றுப்படி, பதார்கள் சிந்து பகுதியிலிருந்து குடிபெயர்ந்தவா்களாகக் கருதப்படுகிறார்கள். பதர் பழங்குடியினரிடையே கிருஷ்ணர், சிவன் மற்றும் ராமர் போன்ற தெய்வங்களை வழிபடும் முறையும் பெண் தெய்வமான சக்தியின் வெவ்வேறு வடிவங்களையும் வணங்குகிறார்கள். இவர்களின் வாழ்வியலை இசை, நடனம் மூலம் விளக்குவதே பதார் நடனம் ஆகும்.[1]

வரலாறு தொகு

புராணக்கதை ஒன்றில் துர்கா தேவியின் ஒரு வடிவமான ஹிங்லாஜ் மாதா தனது சகோதரி, பன்னிரண்டு மகன்கள் மற்றும் “பவுசி” என்ற செல்லப் பறவை ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அவர்கள் இரவில் சிந்துவை அடைந்த போது அவளுடைய மகன்கள் பசியுடன் இருந்ததால் ஹிங்லாஜ் தேவி தனது சகோதரியின் வீட்டில் உணவைத் தேடினார் என்றும் அந்த நேரத்தில் அவரது மற்ற சகோதரி சிந்து இல்லாததால், மாதா திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் சிந்துவை சந்தித்தாகவும் அவர் தனது மீன் மற்றும் உணவை சாப்பிட வழங்கினார் எனவும் கதை விவாிக்கிறது. மேலும் மாதா நால் ஏரிக்குத் திரும்பி தனது சகோதரி வழங்கிய மீன்களை ஏரியில் தூக்கி எறிந்ததாகவும் அவை ஏரி நீரில் செழித்து வளர்ந்ததாகவும் நம்பப்படுவதால் இன்றளவும் அந்த பிராந்தியத்தில் வசிக்கும் பதார் சமூக மக்களின் முக்கிய உணவாக நால் ஏரியின் மீன்கள் உட்கொள்ளப்படுகின்றன. மாநிலம் முழுவதும் பரவி இருக்கும் பதார் பூர்வீக மக்களிடையே இந்த நடனம் ஒரு பொழுதுபோக்கு சடங்காக ஆடப்படுகிறது. பதார் நாட்டுப்புற நடனம் குஜராத்தில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

நடன முறை தொகு

பதார் சமூகம் ஒரு வேளாண் சார்ந்த குழு ஆகும் அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் நீர்வழிப்பயணங்களின் போது இசையும் நடனமும் அவர்களின் வாழ்க்கைச் செழிப்பையும், அதற்காக அவா்கள் அலைந்து திரிதலையும் பிரதிபலிக்கின்றன. கடற்பயன வாழ்க்கை, கடல் அலைகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை பெரும்பாலும் இந்த நடன நிகழ்ச்சிகளின் கருப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பதார் நாட்டுப்புற நடனத்தில் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் உற்சாகமான வாழ்வியலையம் அந்த இடத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், நீர்ப்பணனத்தின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் இசை மற்றும் நடனம் மூலம் சித்தரிக்கப்படுகின்றன.

இந்த நடனத்தை ஆடும் போது நடனக் கலைஞர்கள் கையில் சிறிய குச்சிகளைப் பிடித்துக் கொள்கின்றனா்.. படகுகளை இயக்கிக் கொண்டும் .இந்த நடனமானது ஆடப்படுகின்றது. .அவர்கள் தங்களது நடனத்தின போது தண்ணீர் தொடர்புடைய பாடல்களைப் பாடுகிறார்கள். [2] [3] [4]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-09. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  2. Dances Of India. Har-Anand Publications Pvt. Limited. 1 August 2010. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-241-1337-0. https://books.google.com/books?id=GC9Vegt10IwC&pg=PA52. 
  3. Folk Dances of Gujarat. Directorate of Information and Tourism. பக். 19. https://books.google.com/books?id=bLYMAAAAYAAJ. 
  4. The Gujarat directory, including who's who. Gujarat Pub. House. https://books.google.com/books?id=5J05AQAAIAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதார்_நடனம்&oldid=3589422" இலிருந்து மீள்விக்கப்பட்டது