பதினோறாம் இராம வர்மா

பதினோறாம் இராம வர்மா (Rama Varma XI) (இறப்பு: நவம்பர் 1837) இவர் 1828 முதல் 1837 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார்.[1]

பதினோறாம் இராம வர்மா
மகாராசா
கொச்சியின் மன்னன்
ஆட்சிக்காலம்1828 ஆகத்து — 1837 நவம்பர்
முடிசூட்டுதல்1828 ஆகத்து
முன்னையவர்மூன்றாம் இராம வர்மா
பின்னையவர்பனிரென்டாம் இராம வர்மா
இறப்பு1837 நவம்பர்
வெள்ளரப்பள்ளி அரண்மனை, புத்தியேட்டம், காலடி, இந்தியா
மரபுகொச்சி இராச்சியம்
மதம்இந்து சமயம்

ஆட்சி தொகு

இவர், மூன்றாம் கேரள வர்மனின் மருமகன் ஆவார். 1828 ஆகத்து மாத்தில் அவர் இறந்தபோது இவர் அரியணையில் ஏறினார். இவர் பதவியேற்ற உடனேயே, இவரிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த பிரதம அமைச்சரான (திவான்) சேசகிரி ராவ் 1830 இல் வெளியேறினார். அவருக்குப் பின்னர், எடமனை சங்கர மேனன் என்பவர் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவரும் 1834 அக்டோபரில் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக வெங்கட சுப்பராயன் என்பவர் திவானாக நியமிக்கப்பட்டார்.

இறப்பு தொகு

ஒன்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இவர், 1837 நவம்பரில் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினோறாம்_இராம_வர்மா&oldid=3084405" இலிருந்து மீள்விக்கப்பட்டது