பதி பக்தி (1936 திரைப்படம்)
பதி பக்தி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நிறுவனத்தினரின் தயாரிப்பில், அலாக்கெர், டி. ஆர். பி. ராவ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. கேசவன், காளி என். ரத்னம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பதி பக்தி | |
---|---|
இயக்கம் | பி. ஒய். அல்தேக்கர் டி. ஆர். பி. ராவ் |
தயாரிப்பு | மதுரை ஒரிஜினல் பாய்ஸ் சினிட்டோன் |
கதை | தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் |
நடிப்பு | கே. டி. கேசவன் காளி என். ரத்னம் டி. ஆர். பி. ராவ் கே. கே. பெருமாள் ராதா பாய் கே. வி. ஜானகி சாந்தாதேவி பி. ஆர். மங்களம் |
ஒளிப்பதிவு | சித்த பானர்சி |
வெளியீடு | 1936 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
தொகுபதி பக்தி 1930களில் தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் எழுதிய ஒரு நாடகம் ஆகும்.[2] இது குடிப்பழக்கத்தின் தீமைகளையும், குடும்ப வாழ்க்கையில் குடிப்பழக்கம் ஏற்படுத்திய தாக்கத்தையும் கொண்ட கதை. இந்த நாடகம் சென்னை மாகாணம் முழுவதும் பெரும் வெற்றியுடன் அரங்கேற்றப்பட்டது. பாவலரின் மூல நாடகம் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி (MOBC) நாடகக் குழுவிற்காக மற்றொரு நாடக ஆசிரியரான சென்னை கந்தசாமி முதலியார் என்பவரால் மீண்டும் எழுதப்பட்டது,[3] இது 150 க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றப்பட்டது.[4] மனோரமா பிலிம்சின் ஏ. என். மருதாச்சலம் செட்டியார் பதிபக்தியை ஒரு திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார், ஆனால் அவரது ஏமாற்றத்திற்கு, அவர் இல்லாமல் மற்றொரு திரைப்பட பதிப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வந்தது.[a] பி. ஒய். ஆல்டர்கர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[5] [4] முதலியார் தனது மகனும் நாடக நடிகருமான எம். கே. ராதாவை பதிபக்தியுடன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த விரும்பினார், ஆனால் மற்றொரு நாடக நடிகரான கே. பி. கேசவன் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதால் முடியவில்லை.[5][7] காளி என். ரத்னம் இந்தப் படத்தின் மூலம் திரைப்படத்திற்கு அறிமுகமானார்.[8] ராதாபாய் கதாநாயகியாக நடித்தார், ஜித்தன் பானர்ஜி ஒளிப்பதிவு செய்தார், டி. எஸ். மணி கலை இயக்குநராகப் பணியாற்றினார்.[9]
வரவேற்பு
தொகுஇந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தப் படத்தை நடிப்புக்காகவும், குறைவான பாடல்களுக்காகவும் பாராட்டியது, ஆனால் அதன் நீளத்தை விமர்சித்தது.[10] 1936 ஆகத்து 14 அன்று, மலாயா ட்ரிப்யூனின் ஒரு விமர்சனம் படத்தைப் பாராட்டியது, குறிப்பாக கேசவன், ரத்னம் மற்றும் ராதாபாய் ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியது..[11]
உப தகவல்
தொகு- இந்த பதி பக்தி திரைப்படமும், சதிலீலாவதி (1936) திரைப்படமும் ஒரே கதையைக் கொண்டிருந்தன. இது சம்பந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரைப்படக்கதை தொடர்பாக நடந்த முதல் வழக்கு இதுவாகும்.[12]
- முதல் கூடிப் பழகும் நடனம் (Club Dance) இடம் பெற்றது இப்படத்தில் ஆகும்.[12]
- இப்படத்தில் நாயகனும் நாயகியும் தங்கள் மகள் லட்சுமியுடன் ஆகாஷ்வாணி (வானொலி) கேட்பதாக கதையுள்ளது. இப்படம் திரைக்கு வந்தது 1936 இல், ஆனால், மதறாஸ் வானொலி தொடங்கப்பட்டது 1938, சூன் 16 இல் தான். வானொலி, நிஜத்தில் ஒலிக்கும் முன்பே இந்தத் திரைப்படத்தில் ஒலித்தது.[12]
குறிப்புகள்
தொகு- ↑ வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் 1997 ஸ்டார்லைட், ஸ்டார்பிரைட் புத்தகம் மதுரை ஒரினல் பாய்சு சினிட்டோன் நிறுவனமே தங்கள் நாடகத்தின் திரைப்படப் பதிப்பைத் தயாரிக்க முடிவு செய்ததாகக் கூறினாலும்,[5] அவரது 2016 புத்தகமான மதராஸ் நினைவுகள், வரலாற்றாசிரியர் வாமனன் ஆகியோர் நேசனல் மூவிடோனின் சிதம்பரம் செட்டியார் நாடகத்தின் திரைப்பட உரிமையைப் பெற்றதாகக் கூறுகிறார்கள்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-21.
- ↑ S. Muthiah (6 February 2017). "The film that got MGR started". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181005045137/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/The-film-that-got-MGR-started/article17199879.ece.
- ↑ Guy 1997, ப. 173.
- ↑ Mohan Raman (23 August 2014). "100 years of laughter". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181014070941/https://www.thehindu.com/features/cinema/100th-birthday-of-one-of-actor-t-s-balaiah/article6345220.ece.
- ↑ 5.0 5.1 5.2 Guy 1997, ப. 174.
- ↑ Guy 2016, ப. 69.
- ↑ 7.0 7.1 Vamanan (4 January 2016). "பதிபக்தியைத் தழுவி அதை முறியடித்த சதி லீலாவதி! – வாமனன் – தொடர் –5" (in ta). தினமலர் (Nellai) இம் மூலத்தில் இருந்து 4 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181004101727/http://www.dinamalarnellai.com/web/news/1896.
- ↑ Guy, Randor (5 February 2015). "The Ratnam brand of comedy". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180112150658/http://www.thehindu.com/features/friday-review/in-lighter-vein-column-kali-n-ratnam-ct-rajakantham/article6860504.ece.
- ↑ Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 25 December 2018. Retrieved 25 December 2018.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Pathi Bakthi". இந்தியன் எக்சுபிரசு: pp. 2. 22 January 1936. https://news.google.com/newspapers?id=yL8-AAAAIBAJ&sjid=XkwMAAAAIBAJ&pg=4738%2C1034415.
- ↑ ""Pathi-Bhakti" At The Royal". Malaya Tribune: pp. 12. 14 August 1936. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/maltribune19360814-1.2.51.
- ↑ 12.0 12.1 12.2 "அபூர்வ தகவல்கள் - publisherwww.cinemaexpress.com (தமிழ்) - 2016". Archived from the original on 2016-10-28. Retrieved 2016-10-21.