பதிபாத மூலத்தர்

பதிபாத மூலத்தர் என்போர் இறைவனுக்கு வழிபாட்டுத் தொண்டினைத் தூய்மையுடன் செய்யும் முதன்மையாளரான கோயில் அர்ச்சகர்கள் ஆவர்.

தூய்மை தொகு

இவர்கள் நாள்தோறும் ஆகமவிதிப்படி புறத்தூய்மை செய்து கொண்டாராக, அகத்தூய்மையுடன் இறையக வாயில் தாண்டிச் செல்லும் வழக்குடையவர்களாதலால் அப்பகுதியினைத் தாமே தூய்மை செய்தற்குரிய திருவலகுடனும், அபிடேகம் செய்வதற்குரிய குடமும் கைக்கொண்டு செல்லும் நெறியுடையார்கள் என்ற நிலையில் கல்வெட்டுக்களில் பின்வருமாறு சிறப்பிக்கப்பெறுகின்றனர். [1]

பொறுப்பு தொகு

இவர்கள் கோயில் நிர்வாகத்தினை முழுதும் நடத்துபவர்களாகவும், நிவந்தங்கள் ஏற்று முறைப்படி செலுத்துபவராகவும் சில சமயங்களில் இயங்கியுள்ளனர்.

தெய்வப்பணியாளர் தொகு

கோயிலின் முதன்மை அதிகாரமுடையாராக வழங்கப்பெறும் சண்டேசுவரரை முதல்வராகக் கொண்ட தெய்வப்பணியாளராகத் தம்மைக் குறித்துக்கொள்ளும் வகையில் 'ஆதிசண்டேசுவர தேவகன்மிகள்' என்றும், 'சண்டேசுவரர் உள்ளிட்ட தேவகன்மிகள்' என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளனர். [1]

மேற்கோள்கள் தொகு

<references>

  1. 1.0 1.1 கரந்தை கோவிந்தராசனார், தமிழகத்தில் கோயில் அமைப்பு, மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபாத_மூலத்தர்&oldid=1785062" இலிருந்து மீள்விக்கப்பட்டது