பதிவுத் திருட்டு

பதிவுத் திருட்டு அல்லது உள்ளடக்கத் திருட்டு (content theft) என்பது வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில் காணப்படும் ஒருவர் படைப்பை இன்னொருவர் நகலெடுத்து இடும் செயற்பாட்டை குறிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் எதனையும் தாமாக சிந்திக்காமல், ஒன்றைப் பற்றி போதிய அறிவு இல்லாமல், படிக்காமல், தேடல் இல்லாமல் பதிவிட விதால் ஏற்படுகின்றன. இது இணைய உலகில் எந்த ஒரு பதிவையும் வெட்டி ஒட்டி விடலாம் என்பதால் எளிதாக நடைபெறுகிறது. அநேகமாக புதிதாக பதிவுலகிற்கு வருவோர் ஆர்வத்தின் வெளிப்பாட்டாலும் இவ்வாறு செய்து விடுவதுண்டு. இருப்பினும் இதனை ஒரு அநாகரிகமான செயற்பாடாகவும் திருட்டுச் செயலாகவுமே வலைப்பதிவுலகில் பார்க்கப்படுகிறது. பதிவுத் திருட்டுக்கு எதிரான சட்டங்களும் உள்ளன. ஒரு பதிவு இணையத்தில் இன்னொருவரால் மீள்பதிவிடப்பட்டுள்ளதா என்பதையறிய உதவும் இணையத்தளங்களும், மென்பொருள்களும் கூட உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவுத்_திருட்டு&oldid=2758102" இலிருந்து மீள்விக்கப்பட்டது