பத்ராச்சலம்

பத்ராச்சலம் (Bhadrachalam) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில், இராமருக்கு அர்பணிக்கப்பட்ட புகழ் பெற்ற பத்திராசலம் கோவில் இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும்.

பத்ராச்சலம்
భద్రాచలము
பத்ராத்திரி
கோயில் நகரம்
பத்திராசலம் கோவில்
நாடுஇந்தியா
மாநிலம்தெலுங்கானா
பத்ராத்திரிபத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்
மாவட்டம்அக்டோபர், 2016
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்12.00 km2 (4.63 sq mi)
ஏற்றம்
50 m (160 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்50,087
 • அடர்த்தி7,121/km2 (18,440/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
507111
தொலைபேசி குறியிடு எண்08743
வாகனப் பதிவுTS-04
பாலின விகிதம்1:1 /
கொத்தகூடத்திலிருந்து தொலைவு40 கிலோ மீட்டர்
ஐதராபாத்திலிருந்து தொலைவு325 கிலோ மீட்டர்
இணையதளம்telangana.gov.in
பத்திராசலம் கோவில் ஓவியங்கள், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்

பத்திராச்சலம் நகரம் தெலுங்கானா மாநிலத்தலைநகரான ஐதராபாத்திலிருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும், கம்மம் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமனருடன் இராமர், பத்ராச்சலம் மலைப்பகுதியில் சில காலம் தங்கி இருந்ததாக இராமாயண காவியம் கூறுகிறது. பத்திராசலம் மலைப் பகுதியில் இராமர் தங்கியிருந்த நினைவை குறிக்கும் வகையில் 17-ஆம் நூற்றாண்டில் கஞ்சேர்லா கோபன்னா என்பவர் (370 ஆண்டுகளுக்கு முன்னர்) பத்திராசலம் இராமர் கோயிலைக் கட்டினார்.[3]

மக்கள் தொகையியல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ராச்சலம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 50,087 ஆகும். அதில் ஆண்கள் 24,834; பெண்கள் 25,253 ஆக உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1017 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.77 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 88.02 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 77.65 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5,232 ஆக உள்ளது. [4]

மக்கள் தொகையில் இந்துக்கள் 91.96%,; இசுலாமியர்கள் 5.55%; கிறித்தவர்கள் 2.07%; மற்றவர்கள் 0.07% ஆக உள்ளனர். இந்நகரத்தில் தெலுங்கு மொழி பேசப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள்

தொகு

பத்ராசலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. பத்ராச்சலத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பத்ராச்சலம் ரோடு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census Handbook - Khammam" (PDF). Census of India. The Registrar General & CensusCommissioner. pp. 14, 40. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  3. ":: Welcome to Bhadrachala Sree Seetha Ramachandra swamy temple ::". bhadrachalarama.org.
  4. [ http://www.census2011.co.in/data/town/579086-bhadrachalam-andhra-pradesh.html Bhadrachalam Population Census]
  5. "BDCR/Bhadrachalam Road (3 PFs) Map/Atlas – India Rail Info". India Rail Info.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ராச்சலம்&oldid=2919427" இலிருந்து மீள்விக்கப்பட்டது