பத்ராஸ் பொகாரி

பத்ராஸ் பொகாரி (ஆங்கிலம்: Patras Bokhari) (பிறப்பு:1898 அக்டோபர் 1 & இறப்பு: 1958 டிசம்பர் 5 ) என பொதுவாக அழைக்கப்படும் சையத் அகமது ஷா ( உருது : سید احمد شاہ ) இவர் ஒரு பாக்கித்தானின் நகைச்சுவையாளர், எழுத்தாளர், ஒளிபரப்பாளர் மற்றும் இராஜதந்திரியுமாவார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாக்கித்தானின் முதல் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார். [1] [2] [3] பிரித்தானிய இந்தியாவின் பெசாவரில் ஒரு காஷ்மீரி குடும்பத்தில் பிறந்த ஷா, பெசாவரில் உள்ள எட்வர்ட்ஸ் மிஷன் பள்ளியில் படித்தார். பின்னர் லாகூருக்குச் சென்று அங்கு அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.

ஷா ஐக்கிய இராச்சியம் சென்று அங்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் இம்மானுவேல் கல்லூரியில் தனது திரிபோசைப் பெற்று பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கு 1927 இல் அரசு கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தார். அவர் தெற்காசியாவில் முஸ்லீம் அறிவார்ந்தவர்களில் ஒரு முக்கிய அங்கமாக ஆனார். ஷா இறுதியில் டெல்லியில் அகில இந்திய வானொலியின் இயக்குநராகவும் பின்னர் அரசு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். 1951 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் இருந்து நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தனது நாட்டின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து 1958 வரை ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராகப் பணியாற்றினார் . [3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பத்ராஸ் பெசாவரில் ஒரு காஷ்மீரி குடும்பத்தில் பிறந்தார் (19 ஆம் நூற்றாண்டில் பாரமுல்லாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்). இவரது தாயார் இந்த்கோவன் இனத்தைச் சேர்ந்தவர். [4] பெசாவரில் குடியேறுவதற்கு முன்பு, அவரது மூதாதையர்கள் புகாராவிலிருந்து காஷ்மீருக்கு குடிபெயர்ந்தனர். பொகாரி தான் பிறந்த நகரத்தில் ஆரம்பக் கல்வியைப் கற்றார். 1916 இல் பெசாவரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில்சேர்ந்து பயின்றார். பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பை முடித்த பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1922 ஆம் ஆண்டில், ஒரு வருட படிப்புக்குப் பிறகு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அதில் முதலிடம் பிடித்தார். அதன் பிறகு கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இது அவரது படைப்புக் காலம் ஆகும். ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய இருமொழிகளிலும் சிறந்த புலமை பெற்றதனால் அவர் இம்மொழிகளில் வெளியான சிறந்த புத்தகங்கள் மற்றும் நாடகங்களை அவர் தீவிரமாக மொழிபெயர்த்தார். அவர் உயரமான மனிதராக இருந்தார். அவருடையக் கண்களில் நிறம் நீலமாக இருந்தது. கூர்மையான புத்தி, அதற்கீடான நாக்கு வனமை காரணமாக வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல ஆர்வமாக இருந்தார். பத்ராசின் சகோதரர் சுல்பிகர் அலி புகாரி பாக்கித்தானில் பிரபல ஒளிபரப்பாளராக இருந்தார்.

கேம்பிரிச்சு, இம்மானுவேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஒரு திரிபோசு முடிக்க போகாரி 1925 இல் லாகூரில் உள்ள அரசு கல்லூரியை விட்டு வெளியேறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரைப் போற்றும் வகையில் போகாரி ஆங்கில பரிசு என்ற ஒன்று நிறுவப்பட்டது. [5] 1927 ஆம் ஆண்டில், அவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரிக்குத் திரும்பி பேராசிரியராக சேர்ந்து 1939 வரை அங்கேயே இருந்தார். 1947 இல் பாக்கித்தான் சுதந்திரம் அடைவதற்கு முன்பு அகில இந்திய வானொலியின் இயக்குநராக இருந்தார். ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்த அவர் 1947 முதல் 1950 வரை லாகூரில் உள்ள அரசு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். உருது கவிஞர்களான பைஸ் அகமது பைஸ், நூன் மீம் ரஷீத் மற்றும் கன்ஹையலால் கபூர் [6] ஆகியோர் அவரது மாணவர்களில் அடங்குவர்.

இறப்பு மற்றும் ஆளுமை

தொகு

1923 ஆம் ஆண்டில், அவர் பஞ்சாபி மொழி பேசும் காஷ்மீரி பெண்மணியும் காவல்துறை கண்காணிப்பாளரின் மகளுமான சுபைதா வாஞ்சூவை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் - மன்சூர் & ஆரூன், மற்றும் ஒரு மகள் ரோசன் அரா ஆகியோர். ரோசன் அரா குழந்தையாக இருக்கும்போதே இறந்து போனார். பத்ராஸ் பொகாரி 1958 டிசம்பர் 5 அன்று இறந்தார். நியூயார்க்கின் வல்கல்லா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு அனைவரது மனதிலும் இன்றும் அறிவார்ந்தவராக பணியாற்றி வருகிறார். [7] [3] முக்கிய பாக்கித்தானிய ஆங்கில மொழி செய்தித்தாள் ஒன்று அவரைப் பற்றி இவ்வாறு கருத்துரைக்கிறது, "கூடுதலாக அவர் தனது நண்பர்கள், தோழர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த பக்தியையும் அன்பையும் தூண்டினார்." [3]

கௌரவம்

தொகு
  • 1956 இல் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து துனிசியாவின் சுதந்திரத்திற்கு அவர் செய்த பங்களிப்புக்கான அங்கீகாரமாகதுனிசியா அரசு அவருடைய பெயரை துனிசின் ஒரு சாலைக்கு வைத்தது [8] பாக்கித்தானின் இஸ்லாமாபாத்தில் அவரது பெயரில் ஒரு சாலையும் உள்ளது. [9]
  • லாகூர் அரசு கல்லூரி, அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு ஆடிட்டோரியத்திற்கு "பொகாரி ஆடிட்டோரியம்" என்று பெயரிட்டது. [10]

மேற்கோள்கள்

தொகு
  1. Gertrude Samuels (9 October 1955). "Bokhari: Cosmopolitan Crusader at the U.N.; A Pakistani who is thoroughly steeped in the cultures of both East and West sets out to 'inject the U.N. into the thinking of the world.'". The New York Times (archived from 1955). பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
  2. Profile of Ahmad Shah Patras Bokhari amazingpakistanis.com website, Retrieved 28 November 2018
  3. 3.0 3.1 3.2 3.3 Ali Madeeh Hashmi (2 December 2011). "Tribute: Remembering 'Patras'". The Friday Times (newspaper). Archived from the original on 2 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Ahmed, Khaled (13 May 1999). "The House of Patras". The Friday Times. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019. Ahmed Shah spoke Hindko at home because his mother was Hindko-speaking.
  5. "Endowment of Prizes". Emmanuel College, Cambridge. Archived from the original on 2007-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05. Bokhari English Prize: for a College Prize in English for the best first in the English Tripos.
  6. Parekh, Rauf (2015-05-18). "Literary notes: Kanhaiya Lal Kapoor and his satirical writings". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  7. "Biography (brief timeline of his life)". patrasbokhari.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
  8. Ali Madeeh Hashmi (6 December 2013). "Kalos (profile of Patras Bokhari)". http://www.thefridaytimes.com/tft/kalos/. 
  9. "Patras Bukhari Road". பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
  10. "Awards & Recognition". patrasbokhari.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ராஸ்_பொகாரி&oldid=3776036" இலிருந்து மீள்விக்கப்பட்டது