பந்திபோரா (Bandipore) (English: /ˌbændɪˈpɔː/) or Bandipora) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்த பந்திபோரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பந்திபோரா நகரம் உளர் ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. பந்திபோரா நகரத்தின் முப்புறங்களிலும் மலைகளாள் சூழப்பட்டுள்ளது.

பந்திபோரா
நகரம்
பந்திபோரா is located in ஜம்மு காஷ்மீர்
பந்திபோரா
பந்திபோரா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் பந்திபோரா நகரத்தின் அமைவிடம்
பந்திபோரா is located in இந்தியா
பந்திபோரா
பந்திபோரா
பந்திபோரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°25′00″N 74°39′00″E / 34.4167°N 74.6500°E / 34.4167; 74.6500
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்பந்திபோரா மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்20,176
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகாஷ்மீரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்193502
இணையதளம்http://bandipore.gov.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 17 வார்டுகளும், 5,584 வீடுகளும் கொண்ட பந்திபோரா நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 37,081 ஆகும். அதில் ஆண்கள் 20,176 மற்றும் பெண்கள் 16,905 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4245 (11.45%) உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 838 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.13% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 95.04%, இந்துக்கள் 4.57% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்திபோரா&oldid=2950710" இலிருந்து மீள்விக்கப்பட்டது