பன்னாட்டுத் தேனீ ஆராய்ச்சி சங்கம்

பன்னாட்டுத் தேனீ ஆராய்ச்சி சங்கம் (International Bee Research Association) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இது தேனீக்களின் மதிப்பை மேம்படுத்துவதற்கும், தேனீ அறிவியல் மற்றும் தேனீ வளர்ப்பு பற்றிய தகவல்களை உலகளவில் வழங்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது 1949ஆம் ஆண்டில் தேனீ ஆராய்ச்சி சங்கமாக நிறுவப்பட்டது.[1] இது வழக்கமாக இரண்டு ஆய்விதழ்களை வெளியிடுகிறது. இவை பீ வேர்ல்ட் (தேனீ உலகம்) மற்றும் ஜர்னல் ஆப் அப்பிக்கல்ச்சுரல் ரிசர்ச் (தேனி வளர்ப்பு ஆய்விதழ்).[2][3]

பன்னாட்டுத் தேனீ ஆராய்ச்சி சங்கம்
புனைப்பெயர்IBRA
உருவாக்கம்1949-01-24
நிறுவனர்ஈவா கிரேன்
வகைசேவை அமைப்பு
பதிவு எண்சேவை எண்: 209222
நோக்கம்உலகம் முழுவதும் தேனீ அறிவியல் மற்றும் தேனீ வளர்ப்பு பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் தேனீக்களின் மதிப்பை ஊக்குவித்தல்
தலைமையகம்1 அகின்கோர்ட் தெரு, மோன்மவுத், என்.பி.25 3DZ
தலைவர்
பனி கட்ஜினா
முக்கிய நபர்கள்
  • அன்சு கேர்சுகார்ட் (செயலர்)
  • வில்லியம் கிர்க்
  • ஜாக்குலின் கார்ட்
  • மார்ட்டின் குன்சு
  • இசுடூவர்ட்டு இராபர்ட்சு
வலைத்தளம்ibra.org.uk
முன்னாள் பெயர்
தேனீ ஆராய்ச்சி சங்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. "IBRA History". International Bee Research Association (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
  2. Bee World , article on https://ibra.org.uk/bee-world
  3. "Journal of Apicultural Research". International Bee Research Association (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.

வெளி இணைப்புகள்

தொகு