பன்னாட்டுத் தொழில் வர்த்தகச் சங்கம் (இந்தியா)


பன்னாட்டுத் தொழில் வணிகச் சங்கம் (இந்தியா) (International Chamber of Commerce (India), இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களின் மிகப்பெரும் தலைமை அமைப்பாகும். இந்தியாவின் மாநில தொழில் வர்த்தகச் சங்கங்கள், பெரும் தொழில், வணிக, நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் இதன் உறுப்பினர்கள் ஆவர். பன்னாட்டுத் தொழில் வணிகச் சங்கத்தில் (Internalational Chamber of Commerce) இவ்வமைப்பு உறுப்பினராக உள்ளது. அமைப்பின் உறுப்பினர்களுக்கு தொழில், வணிகம், நிதி மற்றும் காப்பீடு துறைகளில் தேவையான வழிகாட்டுதல்கள் அவ்வப்போது வழங்குகிறது.

இந்தியாவில் தொழில், வணிகம், நிதி, மற்றும் காப்பீட்டுத்துறையில் தாராளமயம், உலக மயம், அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்கப்படுத்தவும், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான இடர்பாடுகளை களையவும், இந்தியாவில் தொழில் வணிகம் தொடங்க தேவையான சலுகைகள் மற்றும் வசதிகளை இந்திய அரசிடமிருந்தும், மாநில அரசுகளிடமிருந்தும் கோரிப்பெறவும் முயற்சிகள் மேற்கொள்கிறது. இந்திய அரசின் தொழில் வணிகக் கொள்கைகளை வடிப்பதில் இச்சங்கம் உறுதுணையாக உள்ளது.

வெளிநாட்டு வணிகத்தை ஊக்குவிக்க இந்தியாவில் தொழில் வணிக கண்காட்சிகள் ஆண்டு தோறும் இந்தியப் பெரு நகரங்களில் நடத்துகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.iccindiaonline.org/