பபானிபூர் (சட்டமன்றத் தொகுதி)

பபானிபூர் (Bhabanipur) (வங்காள மொழி: ভবানীপুর বিধানসভা কেন্দ্র) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருக்கும் கொல்கத்தா நாடாளுமன்ற தொகுதிக்குள் 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] தொகுதி மறுசீரமைப்பின்படி காலிகட் தொகுதி இல்லாமற்போனது. பபானிபூர் சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி 77.46 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [2]

பபானிபூர்
மேற்கு வங்காள சட்டமன்ற தொகுதி
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கொல்கத்தா
தொகுதி எண்159
நாடாளுமன்றத் தொகுதி23.கொல்கத்தா தக்சின்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு

பபானிபூர் சட்டமன்றத் தொகுதியில் கொல்கத்தா மாநகராட்சியை சார்ந்த 63, 70, 71, 72, 73, 74, 77 மற்றும் 82 ஆகிய வார்டுகள் உள்ளன. [3]

வெற்றி பெற்றவர்கள் தொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசு 65520 [4] 47.66 %
2011 (இடைத் தேர்தல்) மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசு 73,635 77.46 %

மேற்கோள்கள் தொகு