பபுவா
பபுவா (Bhabhua), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு தென்மேற்கே 188.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இந்நகரத்தில் முந்தேசுசுவரி கோயில் உள்ளது. மேலும் கைமூர் மலைத்தொடர் உள்ளது.
பபுவா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பபுவா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°03′N 83°37′E / 25.05°N 83.62°E | |
நாடு | ![]() |
மாநிலம் | பீகார் |
கோட்டம் | பட்னா கோட்டம் |
மாவட்டம் | கைமுர் மாவட்டம் |
வார்டுகள் | 25 |
பரப்பளவு | |
• மொத்தம் | 12 km2 (5 sq mi) |
ஏற்றம் | 76 m (249 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,179 |
• அடர்த்தி | 4,200/km2 (11,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 821101 |
தொலைபேசி குறியீடு | 06189 |
வாகனப் பதிவு | BR-45 |
இணையதளம் | https://kaimur.nic.in/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 7,855 குடியிருப்புகளும் கொண்ட பபுவா நகரத்தின் மக்கள் தொகை 50,179 ஆகும். அதில் 26,681 ஆண்கள் மற்றும் 23,498 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.66 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.23 % மற்றும் 3.21 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 79.53%, இசுலாமியர் 20.10%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.15% மற்றும் பிற சமயத்தினர் 0.22 % வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி வட்டார மொழியாக பேசப்படுகிறது.
போக்குவரத்து
தொகுதொடருந்து நிலையம்
தொகுஹவுரா-பாட்னா-தில்லி செல்லும் இருப்புப்பாதையில் பபுவா நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பபுவா ரோடு இரயில் நிலையம் உள்ளது. [2]