பப்பி

2019 திரைப்படம்

பப்பி (Puppy) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை அறிமுக இயக்கநரான நட்டு தேவ் (முரட்டு சிங்கிள் என குறிப்பிடப்பட்டுள்ளது) எழுதி இயக்கியுள்ளார். படத்தில் முன்னணி நடிகராக வருண் அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்யுக்தா எக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ஐசரி கணேஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் கீழ் தயாரித்தார். இப்படத்திற்கான இசையை தரண் குமார் அமைத்தார்.  இந்த படம் திரையரங்குகளில் 11 அக்டோபர் 2019 அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2]

பப்பி
இயக்கம்நட்டு தேவ்
தயாரிப்புஐசரி கணேஷ்
கதைநட்டு தேவ்
இசைதரண் குமார்
நடிப்புவருண்
சம்யுக்தா எக்டே
யோகி பாபு
ஒளிப்பதிவுதீபக் குபார் பாண்டி
படத்தொகுப்புரிச்சி
கலையகம்வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடு11 அக்டோபர் 2019 (2019-10-11)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் பிரபு ( வருண் ) தான் கன்னிப் பையன் என்ற நிலையிலிருந்து மாறவேண்டும் என்ற வலுவான ஆசையோடு உள்ளான். அவனது மூத்த மாணவன் ( யோகி பாபு ) அவனுக்கு வழிகாட்டுகிறான். பிரபு தனது வகுப்பு தோழி ரம்யாவை ( சம்யுக்தா எக்டே ) காதலிக்கிறான். அவனும் ரம்யாவும் திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபடும்போது அவனது பாலியல் ஆர்வம் அவனை சிக்கலில் ஆழ்த்துகிறது. அதாவது ரம்யா கர்ப்பமடைகிறாள். இதை அறிந்ததும் அவன் மிகவும் அதிர்ச்சியடைகிறான். கருவை கலைக்குமாறு ரம்யாவிடம் கூற அவள் அதற்கு மறுக்கிறாள். இது இருவரையும் கவலையடையச் செய்கிறது. அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு சரிசெய்கிறார்கள் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள் தொகு

இசை தொகு

எண். தலைப்பு பாடகர் (கள்) நீளம் (நிமிடங்கள்) பாடல் வரிகள்
1 "அஞ்சி மணிக்கு" யுவன் சங்கர் ராஜா, சாஷா திருப்பதி 05:16 மிர்ச்சி விஜய்
2 "என் கை எனக்கு" தரண் குமார், சாண்டி 03:30
3 "சோத்துமூட்டை" தரண் குமார், ஆர். ஜே. பாலாஜி 04:01
4 "சூப்பர் ஸ்டார்" அனிருத் ரவிச்சந்திரன், எம். சி. டி, தரண் குமார் 03:49
5 "உயிரே வா" கௌதம் மேனன், தரண் குமார், அலிஷா தாமஸ் 04:58
6 "யோகி பாபு" (தீம்) எம்.சி.டி, தரண் குமார் 01:51

குறிப்புகள் தொகு

  1. "Puppy to hit screens on October 11 – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-25.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/puppy/movie-review/71538726.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பி&oldid=3660405" இலிருந்து மீள்விக்கப்பட்டது