கண்ணன் திருக்கோயில்
முன்னுரை:
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்,தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் வட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகில் காவிரி,வெண்ணாறுகளுக்கு இடையே இருக்கும் வளப்பமிகு பகுதியாகும்.இவ்வூரிலில் திருவருள் புரியும் ஸ்ரீகண்ணபிரானின் இங்கு எப்படி வந்தார்?,அவரின் சிறப்புகள் யாது?,என்றோடு மட்டும் அல்லாது இளங்காடு எங்கு உள்ளது?,இளங்காடின் வரலாறு யாது?,சிறப்புகள் யாது? என்று எங்கள் ஊரினை பற்றிய தகவல்களை அடியேனால் முடிந்த அளவிற்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இளங்காடு வரலாறு:
இராஜராஜ சோழனுக்கு இராஜகேசரி என்ற பெயர் உண்டு.அவர் இராஜகேசரி என்ற பட்டம் சூடிகொண்ட இவ்விடம் "இராஜகேசரி புரம்" என்று அழைக்கப்பட்டது காலத்தே மறுவி இராஜகிரி என்றானது.இவ்ராஜகிரியில் கோயில் கொண்டிருப்பவர் ஸ்ரீவாலவனேஸ்வரர் என்பதால் இவ்வூர் வாலைவனம் என்றும் அழைக்கப்பட்டது.வாலை-என்றால் இளமை,வனம் என்றால் காடு என்று அர்த்தம் கொண்டு இவ்வூர் "இளங்காடு"என்று அழைக்கப்பட்டு வருகின்றது.ஆனால் இவ்வூரில் இளங்காடு என்பது அஞ்சல் முகவரியாகவும்,இராஜகிரி என்பது வருவாய் துறையின் முகவரியாகவும் உள்ளது.இவ்வாலைவனம் சோழமன்னனுக்கு படைத்தளபதியாக இருந்த சேதிராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது என்று கூறுவர்மேலும் ஒரு விரிவான இணைப்பினை உங்களுக்கு விரைவாக இணைக்கின்றேன்.
அமைவிடம்:
சமயம்:
.இவ்வூரில் கோ