அன்புடையீர் வணக்கம். நான் பகுதி நேரமாக தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆய்வு செய்து வருகிறேன். மேலும் தமிழ்த் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். தமிழில் மேம்பட்ட இலக்கிய வளம் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தி நல்ல தரமான திரைப்படங்கள் தமிழில் வரவில்லையே என்பது எனது ஏக்கமாக உள்ளது. தில்லானா மோகனாம்பாள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், உன்னைப்போல் ஒருவன், மலைக்கள்ளன், தியாகபூமி போன்ற ஒரு சில படங்களே நாவலாகவும் பின் அஃது சினிமாவாகவும் பரிமளித்திருக்கின்றன. மேலைநாடுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்படும் பல படங்கள் நாவலாக இருந்து பின் சினிமாவாக்கப்பட்டவையே. தமிழில் உலகத் தரமான திரைப்படங்கள் வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நாம் அதற்கான முயற்சிகளில் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது கேள்விக்குரிய விடயமாக உள்ளது. எனவேதான் நான் தமிழில் நாவலில் இருந்து சினிமாவாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். நல்ல இலக்கிய வளம் செறிந்த நாவல்களிலிருந்து தரம் வாய்ந்த சினிமா எடுக்க முடியும், அதே நேரத்தில் மக்களையும் அப்படங்களைப் பார்க்க வைத்து வணிக ரீதியாகவும் வெற்றிபெற வைக்க முடியும் என்பது என் எண்ணம். ஆகவே விக்கியின் உதவியை நாடியிருக்கிறேன். விக்கியின் பயனர்கள் இது குறித்த தகவல்கள், குறிப்புகள், ஆய்வு புத்தகங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஏதேனும் கிடைத்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் உலகளவில் நாவலாக இருந்து சினிமாவாக எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் இந்திய அளவில் நாவலாக இருந்து சினிமாவாக எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இருந்தாலும் அதையும் எமக்கு மின்னஞ்சல் செய்க. நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி: www.aazhicinema2015@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:முகுந்தன்&oldid=1403318" இலிருந்து மீள்விக்கப்பட்டது