அருகன் Arugan தொகு

தத்துவவாதி,தமிழ் எழுத்தாளர், Scrittore Tamil - Tamil writter எழுத்தாளர் “அருகன்” 1974ல் செப்டம்பர் 26ல் யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயர் திரு. மக்ஸிமின். தந்தை சமாதான நீதிவான் திரு க.பிரான்சிஸ், தாயார் மதிப்புக்குரிய பி.அந்தோனியம்மா அம்மையார் ஆவார்.

இவருடன் அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் இதில் இவர் ஆறாவதானவர்.

இவருடைய ஆரம்பக்கல்வி புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயம். இங்கு ஆரம்பக்கல்வியில் இருந்து 11ம் வகுப்பு வரைகல்விகற்குங்காலத்தில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசுடனான பிரச்சனைகாரணமாக (1990ல்) இந்தியா புறப்பட்டார். 1990க்குமுன் இவருடைய நடவடிக்கைகள் ஆச்சரியத்துக்குரியன. யாழ்.கொஞ்செஞ்சிமாதா பங்கில் (பெரியகோவில்) பீடப்பணியாளராக 12வது வயதில் இருந்து செயற்பட்டவர். அக்காலத்திலேயே கவிதை கட்டுரை நாடக அமைப்பாளர் நடிகர் என்று பல்துறையிலும் பொதுத்தொண்டிலும் சிறந்து விளங்கினார். இவர் பேச்சுக்கள் பலராலும் பாராட்டப்பட்டது. சிறப்பாக, (17-06-1983)ல் அவருடைய 9வது வயதில் பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றது மட்டுமல்லாது, அப்போது அவருக்குக் கற்பித்த ஆசிரியையில் ஒருவரான திருமதி செல்வநாயகம் ஆசிரியை தனது பேச்சுத்திறனுக்கக் காரணம் என்றும் தற்போதிலும் அவரை மறக்கமுடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடன் பேசும் போது இன்னொரு விடையத்தையும் விளக்கினார். 1983-1985 காலப்பகுதிகளில் இனக்கலவரம் சூடுபிடித்தகாலம், அப்போதுள்ள தனது நண்பர்களுடன் “இளைஞர் விடுதலை இயக்கம்” என்று தலைப்பில் அமைப்பொன்றை உருவாக்கியதாகவும் அதற்கான பயிற்சிகள் பாடசாலை வளாகத்தின் பின்பகுதியில் மேற் கொண்டதாகவும் பின்னர் அது சிறுபிள்ளை வேளான்மையானதாகவும் சிரித்துக் கொண்டு சொன்னார்.

இங்கு இவர் மாணவர் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16வது வயதில் க.பொ.சா.த.பரிட்சை எடுக்கவிருக்கும் காலத்தில் பிரச்சனை அதிகரித்ததால், இந்தியா சென்று அங்கு தனது கல்வியைக் கற்றுத் தேறினார். எனினும், இந்தியா வாழ்க்கை 2 வருடத்திற்கு மேல் அவருக்கு நீடிக்கவில்லை. அங்கிருக்கும் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற வரலாற்றுத் தளங்களை ஆராட்சிக்காகத் தரிசிக்க நேர்ந்தது என்று எடுத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

1992ல் மீண்டும் இலங்கை திரும்ப நேர்ந்தது. அப்போது அவருடைய பெற்றோர்கள் யாழ் விட்டுப் புறப்பட்டு வவுனியா வந்தடைந்தார்கள். அப்போது, அவருடைய தாயின் சகோதரி வவுனியா கச்சேரியில் வேலை செய்து கொண்டிருந்தார், மேலும் அவருடைய கணவன் சிங்களவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர் ஏஜென்சித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

இந்தியாவில் இருந்து திரும்பி இவர்களுடனே தங்கியிருக்க நேர்ந்தது. இக்காலத்தில், இரண்டுவருட இலங்கைப்படிப்பில் இருந்து முற்றாக விடுபட்டிருந்தவருக்கு மீண்டும் படிப்பில் அவசியம் இருக்காது என்று எண்ணிய தந்தை அவரை வெளிநாடு போகும்படி கேட்டார். ஆனால் அருகன் அவர்கள் தான் தொடர்ந்தும் படிப்பினை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அது எப்படிச் சாத்தியமாகும் என்று எல்லாரும் வினாவினர் காரணம் இன்னொன்றும் இருந்தது, பரிட்சைக்கு இன்னும் 4மாதங்களே இருந்தன.

இதற்கிடையில் வவுனிய பாடசாலையில் இணைந்து கொள்வதற்கு அப்போதைய அதிபர் திரு சீனிவாசகத்துடன் பேசியபோது “ பாடசாலைமூலமாக பரிட்சை இந்த வருடம் எடுக்கமுடியாது, வருகிற வருடம் வேண்டுமென்றால் எடுக்கலாம்” என்றார். அதற்கு, “இல்லை சேர், நான் தனிப்பட்ட முறையில் பரிட்சைக்குப்போட்டுவிட்டேன்.” என்று சொல்லி பாடசாலையில் சேந்தார்.

பரிட்சையின் பெறுபேறுகள் வெற்றியாக வந்து சேர்ந்தது. எனவே உ.த கல்விக்கு தகுதி கிடைத்தது. இதனால் தமிழில் ஆர்வம் இருந்தும், வாழ்க்கைக்கு தேவையென்று கருதி, வர்த்தகப்பிரிவில் படிப்பினைச் செலுத்தினார். எனினும் தமிழில் இவருக்கு இருந்த ஈடுபாடு மேலும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. இங்கும் பாடசாலையில் இணையும் போது அதாவது, 05-05-1992ல் இந்து சமயப்போட்டி ஒன்று நடைபெற்றது, அதில் முன்னேற்பாடு இல்லாமலே அதில் கலந்து கொண்டார். அதில் முன்னறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்தோரிலும் பார்க்க சிறப்புடன் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப் பெற்றார். எனினும் மதத்தால் அவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அக்கல்லூரியில் அவருக்கு இரு நண்பர்கள் பாலமாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டார். திரு குலேந்திரன், திரு றமணதாஸ் என்போரின் பலமான ஒத்துளைப்பால் இன்னும் பல சாதனைகளை அவர் அப்பாடசாலையில் சாதித்ததாகத் தெரிவித்தார். இங்கும் அவர் மாணவர்தலைவராக இருந்தார். அவருக்கு இறுதியில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் அவர் வகித்த பல பதவிகள் மறைக்கப்பட்டும் அவர் செய்த சேவைகள் குறைக்கப்பட்டும் இருந்தது என்று ஆதாரத்தோடு விளக்கப்படுத்தினார்.

அப்போது, “வளரும்பயிர்” என்றொரு புத்தகத்தை வெளியிட்டார், அதற்கு சிறப்பு விருந்தினராக அப்போதைய அரச அதிபர் திரு தில்லை நடராசா அவர்கள் பங்குபற்றினார். அவ்வெளியீட்டுக்கு திரு அகளங்கன், திரு கருனாகரன் போன்ற கவிஞர்கள் விமர்சனமும் கருத்துரைகளும் வழங்கிச் சிறப்பித்தனர். இது 1993ன் கடைசியில் இடம்பெற்றது.

வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்ட முதல் நூல் அது என்று பெருமையுடன் சொன்னார். மேலும் 1994ன் ஆரம்பத்தில் பாடசாலைக்கு மாணவர் சார்பில் அன்பளிப்பாக ஒரு மாபெரும் குத்து விளக்கொன்றை வழங்கியதும் அதுவே முதல் முறை என்றும் அதுவரை அப்படிக் குத்துவிளக்கினை வேறு இடத்தில் இருந்துதான் பெற்றுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதென்றார்.

இப்போதும் அங்கு இருக்கும் பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார், காந்தி, போன்ற உருவப்படங்கள் இவரால், இவருடைய முயற்சியால் அப்பாடசாலைக்கு வழங்கப்பட்ட இன்னொரு அன்பளிப்பு என்றும் தெரிவித்தார்.

அமைப்புகளில் இருந்து கடமைபுரிவோர் கையாடல் செய்வது என்பது பிரபல்யம்தான் ஆனால், இவருடைய செயல் மாறுபட்டது. ஒவ்வொரு பதவியிலும் பாடசாலைக்குத் தேவையான ஒவ்வொரு பொருளைச் சேர்த்துவைத்தபெருமை மற்றவர்களால் பாராட்டப்படாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவித்தார். இன்றும் அவரால் வழங்கப்பட்ட பொருட்களில் அவருடைய வகுப்பின் பெயர் பொறித்தாரேயொழிய தனது பெயரைப் பொறிக்காது ஒதுங்கிக் கொண்ட பெருந்தன்மை அவருடையது.

தனது அக்கால சேவையில் தனது நண்பர்கள் இருவரையும் மறக்கமுடியாது என்று கலக்கத்தோடு சொன்னார். குத்துவிளக்கை கொடுப்பதற்குத் தாம்பட்டபாடும் அதனைத் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கொண்டு வருவதற்கு காசு இல்லாமல் ஆட்டோச் செலவிற்குத் தம்மிடையே இருந்த சில்லறையினைப் பொறுக்கியும் காணாமல் ஆட்டோ ஓட்டுனர் பொறுத்துக் கொண்டார் என்று சொன்னார்.

கிறிஸ்தவ அமைப்பில் பொறுப்பாக இருந்தபோது, அக்காலத்து ஒழிவிழா வேறு எக்காலத்திலும் நடக்கப்போவதில்லை என்று பெருமையாகச் சொன்னார். அதிலும் நிலையாக இருக்கும் பொருட்டு கிறிஸ்மஸ்றீ ஆறு அடிக்கும் மேல், மற்றும் லைற் செற், சோடினை போன்று பல்வேறு பொருட்கள் ஒழிவிழாவின் பின் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்ததாக சொன்னார்.

இதில் ஒரு குறிப்பு பாடசாலை வரலாற்றில் யாரும் கணக்குகள் ஒழுங்காக பிரபல்யப்படுத்தியது கிடையாது என்றும் தனது செயற்பாட்டில் எல்லாம் கட்சிதமாக இருந்ததாகவும் அவற்றை அவ்வப்போது நோட்டீஸ் போட்டில் போட்டுவிடுவதாகவும் பெருமையுடன் சொன்னார்.

இத்தனைக்கும் பாடசாலை அவருக்கு எவ்வித கௌரவிப்பும் கொடுக்கவில்லை. இத்தனை செய்தும் பாடசாலைப்பதிவில் அவைகள் பார்க்கப்படுகிறதாஎன்றும் வருத்தத்தோடே அவர் கேள்விகள் கேட்டார்.

மேலும் ஆசிரியர் மகிழ்ச்சிகரன் தன்நினைவில் நீங்காதவர் என்றும் சொன்னார். அவருடைய சங்கமம் நாடகத்தில் நடித்துப் பெயர் வாங்கியதும் பல பிரதேசத்தில் அது மேடையேற்றப்பட்டதும் மனதில் நீங்காதவை என்றார்.

இலக்கியத்திலும், கலையிலும் தான்மட்டுமன்றி தன்னோடு இணைவோரையும் கலைஞராக்கும் திறன் அவருக்கே உரிய தனிச் சிறப்புப் போல், நடிக்கத் தெரியாதவரையும் நடிகராக்கும் பக்குவம் அவருக்குண்டு.

1995ல் உயர்தர கல்வியிலும் சிறப்புத் தேற்சி பெற்று சித்தியடைந்தார். பின்னர் மட்டக்களப்பு பல்களைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்பு மாணவராக பயின்றகாலத்தில், தான் கல்விகற்ற பாடசாலையிலே கற்பிக்கும் சிறப்புக் கிடைத்ததாகவும், மாணவர்கள் தனது வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் பல கருத்தரங்குகள், இலக்கிய விழாக்கள் என்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவும் நடத்தியதாகளும் எடுத்துரைத்தார்.

1995ல் சா.த. சித்தியடையாத பலமாணவர்களை மீண்டும் பயிற்சி கொடுத்து அவர்களைச் சித்தியடையவைத்தார்.

பின்னர் 1996ல் ஜெர்மனி போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு கலையில் ஈடுபடுவதற்குத்தடைகள் பல கிடைத்தது எனினும் தனிப்பட்ட முறையில் கவிகளை இயற்றிவந்தார். பின்னர் 1996-1997 வரையும் பின்னர் 1997-1998 பிரான்ஸ் தேசத்திலும் காலங்கள் ஓடின. பிரான்சில் இருந்த காலத்தில் புனர்வாழ்வுக்கழகத்தில் ஈடுபடநேர்ந்தது. அப்போது அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த வெளியீடுகளில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தியபோது அதனால் அவர்களுக்கு பெரும் இலாபம் கிடைக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

1998ல் இத்தாலிவந்தபோது ஒரு அமைப்பு தமிழர்களுக்குத் தேவை. அது பக்கச் சார்பற்று சேவையை நோக்கமாகக் கொண்டு செயற்படவேண்டும். அதனால் மேற்கொள்ளப்படும் கலைக்கும் கலைஞருக்கும் சேவைகளுக்கும் ஒரு தகுந்த முகவரி வேண்டும் என்று அவரால் உருவாக்கப்பட்டதே தமிழ்ப்புதிய தலைமுறைச்சங்கம். நண்பன் ஜொலி இவ்வமைப்புக்குப் பல சின்னங்களை வரைந்த போதிலும் அருகனின் திட்டத்தில் கடைசியாக இச்சின்னம் வெளிவந்தது.

இச்சின்னத்தில், கல்வியறிவடன் கூடிய ஆதிக்கம் இருக்குமெயானால் உலகத்தையே ஒற்றைவிரலில் சுற்றிவிடலாம் என்ற சிந்தனையின் நோக்கிலும், பல்வேறு வர்ணத்தை இணைத்த முறையில் சாந்தமும் தேவைப்படும்போது போராட்டமும் இணையும் வகையில் அமைக்க்கப்பட்டது.

பின்னர் இத்தாலி தேசத்தை வந்தடைய நேர்ந்தது. 1998ல் தொடங்கி தனது கலை மற்றும் சேவை மக்களுக்குத் தொடங்கப்பட்டது என்று புரியவைத்தார். திலீபன் பாடசாலை மூடப்பட்டிருந்தது, எனவே தமிழ்கற்பிக்கவேண்டும் என்று வீட்டில் வைத்தே ஒருசில பிள்ளைகளுடன் கற்பித்தலை மேற் கொண்டு தமிழ்த் தொண்டு புரியும் காலத்தில் நான்கு இத்தாலியர்களுக்கும் தமிழ் கற்பிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

இதில் எனக்கு நினைவு வருகிறதென்ன வென்றால், இத்தாலியரான வீரமாமுனிவர் தமிழுக்காற்றிய தொண்டு… அருகன் இத்தாலியருககுகத் தமிழாற்றிய தொண்டு…

உலகத்தில் கணனி வேகம் தமிழில் அதிகரித்த போதில் இத்தாலிமட்டும் கணனியில் கனாக்கண்டு கொண்டிருந்த போது, கணனிக் கல்வியை 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்பித்ததாக பெருமைப்பட்டார். தற்போது பலர் கணனிபாவிப்பதற்கும் கணனிதொடர்பான அறிவிற்கும் தான் பாலமாக அமைந்ததாகச் சொன்னார். மேலும் 2002ல் கணனியைக் கற்பதற்கான அடிப்படை விடையங்கள் அடங்கிய மும்மொழிக் கையேட்டினை வெளியிட்டார். இதுவே கணனிதொடர்பாக இத்தாலியில் வெளியிடப்பட்ட முதல் ஏடாகும்.

மேலும் இத்தாலியில் பாடகர்களையும், பாடலாசிரியர்களையும், இசைக்கலைஞர்களையும் உருவாக்கியதோடு அவர்களை மேடையேற்றியும் அழகுபார்த்தார். இவருடைய வெளியீடுகள் கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இலவசமாகவே நடைபெற்றன. இது இத்தாலியில் தமிழர்களுக்கு புதுமை. காரணம் மாவீரர் நிகழ்வைத்தவிர மற்கைய பெரும்பாலான நிகழ்வுகள் கட்டணத்திலேய நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ல் அநுப+தி என்னும் நூலினை வெளியிட்டார்.

(அருகனின் ஆக்கங்கள் வெளியிடப்பட்ட தளங்களிற் சில: தமிழ்நேஷன், வானவில், தமிழ்நெற், வீரகேசரி, வானொலி, சூரியன்வெப், மேலும் தொலைக்காட்சி, சஞ்சிகைகள், இத்தாலிப் பத்திரிகைகள் ...

இத்தாலிய அரசுமட்டத்தில் தமிழ் என்ற சொல் இலங்கை அரசால் குறைக்கப்பட்டுவந்த காலமது. வெளிஉலகுக்குத்தெரியாத வகையில் கட்சிதமாக இலங்கை அரசு செயற்பட்டபோது, தமது அமைப்பிற்கு அதனால் பின்னடைவுகள் தேன்றக் கூடுமெனவும், வெளிநாட்டுமக்கள் அங்கத்தவராக இணைந்த காரணத்தாலும், பல்லமைப்புக்களை இணைத்த ஒன்றியம் ஒன்று இவரால் மீழமைக்கப்பட்டது. த.பு.த.சங்கம் புதிய தலைமுறை ஒன்றியமாகச் செயற்பட்டது. திழர்கள் மத்தியில் மட்டும் த.புதிய தலைமுறை இயங்கிவந்தது. அரச மட்டத்தில் ஒன்றியமே செயற்பட்டு வந்தது.

இதன் சின்னம் பலராலும் பெரிதும் பாராட்டப்பட்ட வடிவத்தைக் கொண்டிருந்தன. அதில் 8 நட்சத்திரங்கள் மேலதிகமாகக் காணப்பட்டது. அது தன்னகத்Nது 8 அமைப்புக்களின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளதை விளக்கியது. மேலும் தனது வெளியீடுகளை பிற்காலத்தில் ஒன்றியத்தின் மூலமே முற் றாக வெளியிட்டார்.

ஒன்றியத்தின் ஊடாக அருகனின் வெளியீடுகளிற் சில...

· நீங்களும் கணனியில் 1 (2002)

· அநுபூதி (2003)

· நீங்களும் கணனியில் 2 (2005)

· இதுதானா மிலேனிய மாற்றம்? (2005) பதிப்பு-1

· நீங்களும் கணனியில் 3 (2006)

· இதுதானா மிலேனிய மாற்றம்? (2006) பதிப்பு-2

· அர்ச்சனை இதழ்கள் (2007)

· மகளிர் மங்கலம்( சிற்;பிகள்) -2008

· மலருமா தமிழீழம்!? – 2008 ... )

இத்தாலியில் அமைப்பை நடத்திச் செல்வதில் “தமிழ்” என்ற பெயர் அமைப்பில் இணைந்திருப்பதால் சட்டத்தின் மத்தியில் பல்வேறு சிக்கல்களுக்கும் அமைப்பு பின்னடைவிற்கும் உள்ளான காரணத்தால், அமைப்பின் பெயரை மாற்ற நேர்ந்தது. எனவே அருகனின் திட்டப்படி அமைப்பினை மாற்றாது பல்வேறு மக்கள் இருப்பதனால் பல அமைப்புக்களைச் சேர்த்த ஒன்றியம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று எடுத்துரைத்து (ருNபுயு) அவரால் உருவாக்கப்பட்டது. அதற்கான சின்னமும் மீள் பரிமானத்திற்குள்ளானது. அதன்பதிவுகளும் மாற்றப்பட்டு தற்போது பிரபல்யமாகவுள்ள அமைப்பைத் தோற்றுவித்தது.

இவ்வமைப்பின் மூலம் பல்வேறுபட்ட தமிழ்த்தொண்டு மேற்கொள்ளப்பட்டது.கலை, கலாசார, கல்வி, பொருளாதார, சமாதான, சமய வெளிப்பாடுகள் வெளிநாட்டுமக்களுக்கம் மத்தியில் சிறப்பிக்கப்பட்டது. கிறிஸ்தவராக இருந்த போதிலும் இந்துக்களுக்கும் மதிப்பளித்து தமிழர் பெருவிளாவினை நடாத்தி அதில் பிரான்சில் இருந்து குரக்களை வரவழைத்து பொங்கல் திருவிழாவை முதன்முதலில் றெஜியோ எமிலியாவில் நடாத்தி இந்துக்களுக்கும் சமயவழிபாட்டடைத் தோற்றுவித்தார். இச்செயற்பாடு இப்பிரதேசத்தில் முதன்முறையாக நடைபெற்றது இதற்கு திரு சிறதரன் அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்.

மக்கள்சேவையினைக்கருத்திற் கொண்ட இத்தாலிய அமைப்புக்கள் இவரை தம்முடன் இணைந்து சேவை செய்யும் படி அழைத்தனர். இதனால் கொமுனை, அமைப்புக்கள், தொழிலாளர் சங்கள்கள் போன்றவற்றின் அறிமுகங்கள் கிடைக்கப்பெற்று (ஊபுஐடு) தொழில் வாய்ப்புக்கூட இவ்வமைப்பில் மேற்கொள்கிறார். இது இத்தாலியில் மிகப்பலம் வாய்ந்த அமைப்பாகும். இதன்மூலம் மக்களுக்கு இன அமாழி வேறுபாடின்றி சேவைகளை இன்று வரை வழங்கி வருகிறார்.

பல்வேறு ஆழ்மனதின் பாதிப்புக்களே தன்னை இவ்வாறு மாற்றியது என்று மேலும் தொடர்கிறார்...

இத்தாலியில் மிகப்பலம்பொருந்திய இவ்வமைப்பு அரசின் ஆட்சிமாற்றங்களையே அசைக்கவல்லது. அதற்குள் செயற்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கூட்டமைப்பிற்கென தனது பெயரைத்தாங்கிய ஒரு புரோக்கிராமை உருவாக்கிக் கொடுத்த பெருமை இவருடையதே. “ஆயஒiஆழனெழ” என்ற நிகழ்ச்சித் தொகுப்பு கடந் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்து வருகிறது. இவரைச் செல்லமாக வேலைஅலுவலகத்தில் “மக்ஸ்” என்று செல்லமாக அழைத்தனர்.

“தனிமனித முகவரியிலும் பார்க்க அமைப்பொன்றின் முகவரி ஆழம்” ஆனதென்றார். இதனால் அமைப்பில் இருந்து செயற்பட்ட மதிப்பின் சேவையாளர் “எலிற்ற” (நுடவைந) ஷானா அவர்களை அதே அமைப்பில் நிரந்தர வேலையாளாக மாற்றினார். அவருடைய கல்வி அறிவும் முயற்சியும், திட்டமிடும் நூட்பமும் பன்மொழித்திறனும் அவரை இத்தாலி மாகான அங்கத்தவராக்கியது. இதன்மூலம் வேவையிலும் தொழிலிலும் ஒன்று பட்டவர்கள் வாழ்க்கையிலும் இணைந்து செயற்பட்டனர். இதனால் 26.04.2008ல் அவர்களுக்குத் திருமணம் இத்திலியில் இடம்பெற்றது. உடனே இது இதூலி தொலைக்காட்சியில் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றியத்தின் அமைப்பினர் பெரும் உறுதுணையாகவும் சிறப்பாகவும் இவர்களுடைய திருமணத்தினை நடாத்திவைத்தனர்.

இவர்களுடைய உறுதுணையாலும் விடாமுயற்சியினாலும் தம்முடைய அமைப்பின் அங்கத்தவரான திரு பு.செந்தூரன் அவர்களின் துணைவியாரின் விசாதொடர்பாக இரண்டே நாட்களில் விசாபத்திரத்தையும் எடுத்துக் கொடுத்ததும் சிறப்பாகச் சொல்லக்கூடியதொன்று. இச்செயற்பாட்டால் அலுவலகத்தில் பல்வேறு சிரமங்கள் எழுந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல், அமைப்பின் அங்கத்தவருக்கு உதவவேண்டும் என்று பாடுபட்டனர்.

ஒருமுறை இத்தாலிய அமைச்சுடன் நடைபெற்ற நிகழ்வில் தமிழாளையும் இத்தாலிஅரசுடன் இணைத்து செயற்பட வைத்தனர் இதிலும் தமது அமைப்பு முன்மூச்சாகச் செயற்பட்டதாகவும் அங்கத்தவர்கள் மக்களுக்காக தமது தொழிலைக்கூட இழந்தார்கள் என்றும் தெரிவித்தார். படத்தில் இத்தாலிய அமைச்சருடன் திரு அருகன் மற்றும் அவர் துணைவியார்.

சுனாமியால் உலகம் அல்லோலகல்லேல பட்டுக்கொண்டிருந்தது. அப்போது கூட்டோடு கூடாக அன்று இரவே ஒரு கட்டுரையினை எழுதினார். அதன் அனுப+தித்தனமான கருத்த பலமாதங்களின் பின்தான் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. ஆனால் அருகனின் கருத்து அச்சொட்டாக சேதங்களும் அதன் தகவல்களும் எதிர்காலத்தாக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டிருந்துது. “ இதுதானா மெல்லேனிய மாற்றம்” என்ற இந்த நூல் றெஜியோ கொமுனையாலும் சாந்திஇலாறியோ கொமுனையாலும் வௌ;வேறு வெளியீடுகளாக வெளியிடப்பட்டது.

இதன்பின்னர் அர்ச்சனை இதழ்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. இதில் தமிழர்களின் நிலையும் தமிழின் சிதைவும் இலங்கை அரசின் இத்தாலிய தூதராலயத்தில் இருக்கும் நிலைபற்றியும் எடுத்துக் காட்டப்பட்து.

இதன் பிரதியினை துணிச்சலாக அரச அதிகாரிகளை அழைத்து அவர்களிடமே அர்ப்பணித்தார். தமிழர்களின் விடிவிற்கு இரத்தம் சிந்தாது போராடும் தந்திரம் இது வென்று பெருமையுடன் எடுத்துரைத்தார். போராடுவோர் போராடட்டும் ஈழம் கிடைத்தால் கிடைக்கட்டும் இன்றிருப்போர் நலமாக இருந்தால் போதும் அதற்கு துளியேனும் நான் செய்தாகவேண்டும் என்று ஆதங்கித்தார். ஊண்மையினைச் சொல்வோருக்கு எப்போதுதான் பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது? நுன்மையைச் சொல்வோருக்கு எப்போதுதான் நன்மை நடந்திருக்கிறது? மாபெரும் மேதைகளின் அழிவுகள் மக்களாலேயே பெரிதும் இடம்பெற்றிருக்கிறது. இறப்பின் பின்தான் வருந்த நேரிடும் என்றார்.

கடந்த காலத்தில் பல்வேறு கருத்தரங்குகளை ஏற்படுத்தியிருந்தார் அதில் பல அங்கத்தவரை திறனுள்ளவர்களாக மாற்றுவதில் முன்னிலைவகித்தார். இவர்மூலம் பாடகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியறிவினைப்பெற்றோர், சேவைகளைப் பெற்றோர், நிதியுதவிபெற்றோர் கொஞ்சநெஞ்சமல்ல...

சேவையின் போது எவ்வளவுக்கெவ்வளவு கண்டிப்பானவரே அவ்வளவுக்கவ்வளவு அன்பானவர். சிறுவர்களுடனும் பண்பானவர். இவருடைய திட்டங்கள் மற்றவர்களால் உணரமுடியாத பிரம்மிப்புடையதாக இருக்கும் செய்யமுடியாத செயல் என்று கருதும் நிகழ்வினை அசாதாரணமாக நடத்திமுடிப்பார். நுpதிநிலமை பற்றாக்குறைவாக இருந்த போதிலும் சிக்கணத்துடனே அதிசயங்களை நடத்திவிடுவார். அப்பேற்பட்ட திறன் அவருடைய தனிப்பண்பு.

சோர்வுடையோரைக் கண்டால் இவருக்கு வெறுக்கத்தக்க எரிச்சல் உருவாகிவிடும். அதுபோல ஆர்வலரைக்கண்டால் துள்ளிக்குதித்துவிடுவார். எதையும் பின்போடும் பழக்கம் அறவேஅற்ற இவர்,

அஞ்சாது எதையும் சாதிக்கும் திறனும் பலமாக பாதங்களை ஊன்றும் தன்மையும் கூரிய அறிவும் பன்நிலைப் பார்வையும் மக்களுடன் அன்பாகப்பழகும் தன்மையும் மற்றவர்களுடைய துன்பத்தில் கலங்கும் முறையும் அநீதிக்குத் தலைவணங்காத்தன்மையும் ஒருங்கே காணும் ஒருமனிதன் என்றால் அது மிகையாகாது. இவருடைய திறனில் பொறாமை கொள்ளாதவரே இல்லை என்றால் அது அப்பட்டமான உண்மை. திறமையினைப்பாராட்டும் தன்மையும் பணிவுள்ள மனமும் இவருடைய தனிப்பண்பு.

சில வேளைகளில் இவருடைய பணிவே இவரை மற்றவர்கள் தவறாகப்புரிந்து கொள்ளக் காரணமாக இருந்ததாக இவருடைய துணைவியார் எடுத்துரைத்தார்.

இவருடைய செயற்பாடு இத்தாலிய அரசுடனும் இணைந்ததால் அங்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளèல் பங்குபற்றினார்.


சமுகப்பணி, மனித உரிமைச் செயற்பாடுகள், மற்றும் வறுமைக் போட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான உதவிவழங்கல் போன்ற செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதோடு 2022 ல் மே மாதம் 25ம் திகதி மேன்மதிப்பிற்குரிய மேல் நீதிபதி இளஞ்செளியன் அவர்கள் முன்நிலையில் அகில இலங்கை சமாதான (முழுத் தீவுக்குமான) நீதிவானாப் பதவியினைப் பெற்றுக்கொண்டார்

http://documents.gov.lk/ta/gazette.php 2278 ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 29 ஆந் திகதி வெள்ளிக்கிழமை Justice of the Peace Appointments - Government Gazette 29.04.2022

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arugan&oldid=3694756" இலிருந்து மீள்விக்கப்பட்டது