என் பெயர் செழியன்.

ஆங்கில விக்கிபீடியாவில் என் பக்கம்: http://en.wikipedia.org/wiki/User:Chezhiyan


--Eldiaar 15:02, 27 சனவரி 2011 (UTC)

தங்கள் கருத்து மிகச் சரியானதே! இருப்பினும் 'சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு பழக்கப்படுத்தும் முயற்சியே ஆகும். பழகிவிட்டால் இதுவும் எளிமையான ஒன்றாகி விடுமே! காட்டில் வாழும் விலங்குகளைக் கூடப் பயிற்சி அளித்துப் பழக்கப்படுத்தும் நம்மால், தொல்காப்பியத் தமிழைப் பழக்கப்படுத்த முடியாதா? அயற்சொல் கலப்பு கூட பழகிவிட்டதன் விளைவுதான்; தூய தமிழே நடைமுறையில் இருந்திருந்தால் அயற்சொல் கூடக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

தமிழனுக்கு இப் பாரெங்கும் தமிழே அடையாளம். அதுவும் அது தனித்தமிழாக இருப்பதால் மட்டுமே! தமிழில் புகுந்து, தமிழனுக்குப் பழகிவிட்ட சொற்களை அப்படியே விட்டுவிடலாம் என்றால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடும். பின்பு தமிழும் ஒரு சராசரி மொழியாகி விடும். எனவே தனித்தமிழ் இயக்கத்தை மீண்டும் தொடக்கி, தனித்தமிழை மீண்டும் நிறுவ நான் எடுக்கும் முயற்சியே இது.

இம்முறையை நான் கண்டிப்பாகக் கடைபிடித்தால் மட்டுமே, உயர் தனிச் செம்மொழி என்ற ஒரு நிலையைத் தக்கவைக்க முடியும் என்பதே என் கருத்து. எனவே, இது தங்களுக்குச் சரியெனப் படுகிறதா என தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும். தங்களுடைய கருத்துக்களுக்கு நான் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chezhiyan&oldid=677612" இலிருந்து மீள்விக்கப்பட்டது