கவிபாஸ்கர்

பிறப்பு கவிபாஸ்கர்
மார்ச்சு 17, 1984 (1984-03-17) (அகவை 36)
வடுவூர் நெய்வாசல் சமத்துவபுரம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,
தொழில் கவிஞர்
பாடலாசிரியர் இயக்குநர் எழுத்தாளர் பேச்சாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பத்திரிகையாளர் புத்தக வடிவமைப்பாளர் பதிப்பாளர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
2007 சூரியனை கொளுத்திய

தீக்குச்சி – தமிழக அரசு விருது

கவிபாஸ்கர் (Kavibaskar, மார்ச் 17, 1984), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். “வைகாசி பொறந்தாச்சு” திரைப்பட இயக்குநர் ராதாபாரதி அவர்கள் இவரை காற்றுள்ள வரை என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராக இவரை அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர் பரணி இசையமைத்த அந்தப்படத்தில் ”செவ்வந்தியே… செவ்வந்தியே.. சேதி ஒன்னு சொல்லு.. சொல்லு” என்ற இவரின் முதல் பாடல் பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமானது. இதுவரை 200 படங்களுக்கு 350 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வடுவூர் நெய்வாசல் சமத்துவபுரம் கு. சுப்பிரமணியன் – சு. மயிலம்பாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கதில் தமிழ் இலக்கியம் பயின்றார். 2003இல் "காற்றுள்ளவரை" திரைப்படத்தில் "செவ்வந்தியே.. செவ்வந்தியே..”" எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

இவர் 1988 முதல் 1995 வரை நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 1996 முதல் 1999 வரை வடுவூர் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 2000 முதல் 2003 வரை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பி.லிட்., (தமிழ் இலக்கியம்) பயின்றார். 2004 முதல் 2006 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி எம்.ஏ.,(தமிழ்) முதுகலை பட்டம் பெற்றார். 2008 முதல் 2009 வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாயிலாக (எம்ஃபில்) “கண்ணதாசன் பாடல்களில் சங்க இலக்கியச் சாரல்” தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

தன்வரலாறுதொகு

 • தனிப்பாடல்கள்: இவர் எழுதியதில், நாட்டுப்புறப்பாடல்கள் – சமூக விழிப்புணர்வு பாடல்கள் என 300க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய தனிப்பாடல்களில் தமிழீழம் சார்ந்த பாடல்களும், தமிழ் - தமிழர் உரிமைகள் குறித்தப் பாடல்களே அதிகமாகும்.

இலக்கியப்பயணம் : கவிதை – கட்டுரை – கவியரங்கம் என தமிழ் இலக்கிய வட்டாரத்தில் தெரிந்து முகமாக வலம் வருகிற படைப்பாளர். தமிழ்த்தேசிய விடுதலை இலக்கை முன் வைத்து, தனது இலக்கியப் பயணத்தை தொடர்கிறார். பெ. மணியரசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டம் மாத இதழில், இதழ் வடிவமைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கதின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் தலைவராக உள்ளார்.

படைப்புகள்தொகு

கவிதைத் தொகுப்புகள்தொகு

 • புதிய நிலா
 • தொட்டில் கனவு
 • சூரியனைக்கொளுத்திய தீக்குச்சி
 • பாதை தொலைத்த மாட்டு வண்டிகள்
 • கருவில் ஒரு தேசம்
 • துண்டறிக்கை
 • எழுத்துப்பிழை
 • தோழர் மணிவண்ணன் (இயக்குநர் மணிவண்ணன் வரலாறு)
 • ஊருக்குப் பெய்த ஊசித்தூறல்
 • போர்த்தொழில்
 • வணக்கம் தோழர்
 • கூட்டாஞ்சோறு"
 • காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன் (ஆய்வுக் கட்டுரைகள்)
 • அறச்சீற்றம்
 • அரசியல் பேசு, (அரசியல் கட்டுரைகள்)
 • கலகக்குரல்
 • தமிழர் சித்த மருத்துவம், (மருத்துவக் கட்டுரைகள்)
 • பெரு நெருப்பு
 • மேடையில் வெடித்த சொற்கள்
 • கீழடியில் கிளைவிட்ட வேர்
 • பெ. மணியரசனின் சொல் ஆயுதம்
 • தமிழ் இலக்கண வழிகாட்டி
 • காட்டுத்தெரு மயிலு (நாவல்)
 • தேன் கூடு (திரைக்கதை உருவான கதை)
 • சோழர்கால இசைக்கலைஞர்களும் இசைக்கருவிகளும் (ஆய்வுக் கட்டுரைகள்)

இயக்கிய குறும்படங்கள்தொகு

 • புயல் அடிச்சவலி
 • கொரோனா வலி
 • ஈழமனக்காயங்கள்

இயக்கிய ஆவணப்படம்தொகு

 • மண்ணின் கலைஞன் பாரதிராஜா

தனிப்பாடல் குறுந்தகடுகள் சிலதொகு

 • வீரமண், (தமிழ்த்தேசியப் பாடல்கள்)
 • பனைமரக்காற்று, (ஈழப்பாடல்கள்)
 • நெருப்பின் குரல், (ஈகியர் பாடல்கள்)
 • உயிரெழுத்து (குழந்தைப் பாடல்கள்)
 • விடுதலை நெருப்பு (ஈழப்பாடல்கள்)

விருதுகள்தொகு

திரைப்படப் பட்டியல்தொகு

 • கவிபாஸ்கர் திரை வரலாறு
 • காற்றுள்ளவரை - 2003
 • திருடிய இதயத்தில் - 2003
 • மனதில் - 2004
 • சார்ளி சாப்ளின் - 2003
 • சுந்தராடிராவல்ஸ் - 2003
 • வீரசேகரன் - 2005
 • நண்பர்கள் நற்பணி மன்றம் - 2011
 • ஸ்டைல் - 2006
 • சொகுசு பேருந்து - 2008
 • மாயாண்டி குடும்பத்தார் (பாகம்-2) - 2007
 • என்னம்மா கதவுடுறானுங்க - 2016
 • பட்டதாரி - 2017
 • ராமர் பாலம் - 2015
 • தேன்கூடு - 2013
 • புத்தன் இயேசு காந்தி - 2013
 • முந்திரிக்காடு - 2019
 • அடியே அழகே - 2020
 • காகிதப் பூ - 2020

மேற்கோள்கள்தொகு


வெளி இணைப்புகள்தொகு

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :கவிபாஸ்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kavibaskar&oldid=2978381" இருந்து மீள்விக்கப்பட்டது