பயனர்:Keerthi malar/மணல்தொட்டி

1. அங்கிதா ரெய்னாதொகு

அங்கிதா ரெய்னா
 
டென்னிசு வீராங்கனை
குடியுரிமைஇந்தியர்


அங்கிதா ரவீந்தர்கிருசன் ரெய்னா (Ankita Ravinderkrishan Raina) ஓர் இந்திய தொழில்முறை வலைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார்.[1] இவர் 1993 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாளில் பிறந்தார். [2] பெண்கள் வலைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் பெண்கள் வலைப்பந்தாட்ட சங்க 125கே இரட்டையர் போட்டியை இவர் வென்றுள்ளார். இதைத் தவிர பன்னாட்டு வலைப்பந்து கூட்டமைப்பு சுற்றுப் போட்டிகளில் 11 முறை ஒற்றையர் பிரிவு போட்டியையும் 18 முறை இரட்டையர் வலைப்பந்து பிரிவு போட்டிகளையும் இவர் வென்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கிதா முதல் முறையாக முதல் 200 ஒற்றையர் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தார். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். [3][4] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அங்கிதா பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியிலும் கலப்பு இரட்டையர் போட்டியிலும் விளையாடி தங்கப் பதக்கங்களை வென்றார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெட் கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய அங்கிதாவின் வெற்றி-தோல்வி விகிதம் 23–17 என்ற கணக்கில் உள்ளது. [5] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பெட் கோப்பை போட்டியில் அங்கிதா சீன வீராங்கனை சூ லின்னையும் கசக்கிசுதானின் யூலியா புடின்ட்சேவாவையும் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

அங்கிதா ரெய்னா மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் ஒரு காசுமீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்தார். இவரது நடுத்தர வர்க்க இந்து குடும்பம் காசுமீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரத்திலிருந்து வந்த குடும்பமாகும். சம்மு-காசுமீரில் நடந்துகொண்டிருந்த கிளர்ச்சியின் காரணமாக, 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காசுமீர் இந்துக்கள் வெளியேற்றத்தின் போது இவரது குடும்பமும் காசுமீரை விட்டு வெளியேறியது. [6] அங்கிதா இந்தி, குசராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசும் வல்லமை கொண்டவராவார். அங்கிதா ரெய்னா பிரிகான் மகாராட்டிரா என்ற நிறுவனத்தில் படித்தார்.

தேசிய அளவு போட்டிகளில் அங்கிதா ரெய்னா தனது சொந்த மாநிலமான குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ரோசர் பெடரர், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்சு மற்றும் சானியா மிர்சா ஆகியோர் இவரது முன்மாதிரிகளாவர்.

ரெய்னா நான்கு வயதிலேயே தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அகாடமியில் விளையாடத் தொடங்கினார். மூத்த சகோதரர் அங்கூர் ரெய்னா ஏற்கனவே வலைப்பந்து விளையாடகூடியவர். தாயாரும் விளையாட்டு ஆர்வலராகவும் மற்றும் வலைப்பந்தாட்டம் விளையாடியவராகவும் இருந்தார். இதனால் தன் ஆரம்பகாலத்திலேயே அங்கிதாவுக்கு உத்வேகம் கிடைத்தது. அகில இந்திய வலைபந்தாட்ட சங்கம் நடத்திய திறமை வேட்டை போட்டியில் மகாராட்டிராவைச் சேர்ந்த 14 வயது வீரரை தோற்கடித்தபோது 8 வயது அங்கிதா ரெய்னா பரபரப்பாகப் பேசப்பட்டார். 2007 ஆம் ஆண்டில் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல கூடுதல் பயிற்சியளிப்பது அவசியம் என்று முடிவு செய்த அங்கிதாவின் குடும்பம் புனேவுக்கு குடிபெயர்ந்தது. புனேவில் தனது பயிற்சியாளரான ஏமந்து பெந்துரேவை அங்கிதா சந்தித்தார். அவர் ரெய்னாவின் விளையாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

புனேவில் உள்ள பி.ஒய்.சி இந்து ஜிம்கானாவில் உள்ள ஏமந்து பெந்துரே டென்னிசு அகாடமியில் அங்கிதா பயிற்சி பெற்றார். இப்போது அர்ச்சுண் காதே பயிற்சியாளராக உள்ளார். பயிற்சியின் போது அவரே உடன் விளையாடும் ஆட்டக்காரருமாக உள்ளார். [7][8]

தொழில்முறை சாதனைகள்தொகு

 
பிரெஞ்சு திறந்தநிலை போட்டியில் முதன் முறையாக அங்கிதா ரெய்னா
  • 2011 ஆம் ஆண்டு பருவ போட்டிகளில் அங்கிதா இரட்டையர் பிரிவில் மூன்று போட்டிகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். ஐசுவர்யா அகர்வாலுடன் சேர்ந்து விளையாடிய ஓர் இரட்டையர் போட்டியை வென்றார்.
  • 2012ஆம் ஆண்டில் அங்கிதா தனது முதல் தொழில்முறை ஒற்றையர் பட்டத்தை புதுடெல்லியில் வென்றார். இதே ஆண்டில் இரட்டையர் பிரிவில் மேலும் மூன்று பட்டங்களை வென்றார்.
  • 2017 மும்பை திறந்தநிலை போட்டியில் இரண்டு போட்டிகளில் வென்று மிகப்பெரிய காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
  • ஏப்ரல் 2018 இல் உலக தரவரிசையில் 197 ஆவது இடத்தை எட்டினார். நிருபமா சஞ்சீவ், சானியா மிர்சா, சிகா உபெராய் மற்றும் சுனிதா ராவ் ஆகியோரைத் தொடர்ந்து தரவரிசையில் முதல் 200 பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இடம் பிடித்த ஐந்தாவது இந்திய தேசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே ஆண்டில் ஆகத்து மாதம் இந்தோனேசியாவின் தலைநகரம் சகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பதக்கம் வென்ற இந்தியப் பெண்கள் அங்கிதா ரெய்னா மற்றும் சானியா மிர்சா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அராண்ட்சா ரசை எதிர்த்து விளையாடி சிங்கப்பூரில் நடந்த ஐடிஎப் டபிள்யூ25 பட்டத்தை அங்கிதா வென்றார். 2019 குன்மிங் ஓபனில், முன்னாள் அமெரிக்க சாம்பியனும், முதல் 10 வீரருமான சமந்தா சுடோசூரை தோற்கடித்து தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். 2019 பிரெஞ்சு ஓபனில், ரெய்னா தனது முதல் தகுதிப் போட்டியை அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் உடன் இரண்டு இருக்கமான செட்களில் இழந்தார். அக்டோபர் 2019 இல் அங்கிதா ரெய்னா முதல் முறையாக இரட்டையர் தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் நுழைந்தார்.
  • ரோசாலாவுடன் 2020 தாய்லாந்து ஓபனில் ரெய்னா தனது முதல் பெண்கள் வலைப்பந்து சங்கத்தின் சுற்றுலா போட்டியிகளில் அரையிறுதிக்கு வந்தார். இது ரெய்னாவுக்கு இரட்டையர் பிரிவில் 119 ஆவது இடத்தைப் பெற்றுத்தந்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இரண்டு ஒற்றையர் பட்டங்களையும் வென்றார். பின்னர் இவர் 2020 பிரெஞ்சு ஓபனில் போட்டியிட்டார், அங்கு அவர் முதல் முறையாக இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறினார், ஆனால் குருமி நாராவிடம் தோற்றார்.

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

2. அனிதா தேவிதொகு

அனிதா தேவி
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு1984 ஏப்ரல் 16
அரியானா , பல்வல் மாவட்டம்

அனிதா தேவி (Anitha devi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி இவர் பிறந்தார். அரியானா மாநில காவல்துறையில் பணிபுரிந்து வரும் அனிதா தேவி தேசிய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

அனிதா தேவி அரியானா மாநிலத்திலுள்ள பல்வல் மாவட்டத்தில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். காவல்துறையில் சிறப்பு அனுமதி பெற்று, குருச்சேத்ரா நகரில் உள்ள குருகுல் என்ற பயிற்சி மையத்தில் அனிதா தேவி பயிற்சியை தொடங்கினார். அனிதாவின் தந்தை ஒரு மல்யுத்த வீர்ராவார். கணவர் தரம்பிர் குலியா அனிதா தேவியின் துப்பாக்கி சுடும் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.[1]

சாதனைகள்தொகு

2011 ஆம் ஆண்டு முதல் அனிதா தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறார்.[2]

  1. 2013 ஆம் ஆண்டு அனைத்திந்திய காவலர்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்ற பட்டம் கிடைத்தது.
  2. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனிதா துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  3. 2016 ஆம் ஆண்டு செருமனியின் அன்னோவர் நகரில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், இதே போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும், அனிதா தேவி அங்கம் வகித்தார்.[3] [4]

மேற்கோள்கள்தொகு

3.ஏக்தா பியான் (படம் கிடைக்கவில்லை https://en.wikipedia.org/wiki/Ekta_Bhyanதொகு

ஏக்தா பியான்
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
பிறப்பு7 ஜூன் 1985 (வயது 35)
வசிப்பிடம்இசார், அரியானா, இந்தியா
 
உருட்டுத்தடி எறிதல் விளையாட்டின், உருட்டுத்தடி அளவுகள்

ஏக்தா பியான் (Ektha bhyan) இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனையாவார். 1985 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். மகளிர் உருட்டுத்தடி எறிதல் மற்றும் தட்டெறிதல் நிகழ்வுகளில் இந்தியாவிற்காகக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.[1] [2].

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற, 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்காக உருட்டுத்தடி வீசுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டிகளுக்காக, 2017 ஆம் ஆண்டு இலண்டனிலும், 2019 ஆம் ஆண்டு துபாயிலும் கலந்து கொண்டார். எனவே, டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள, இவர் தகுதி பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில் பெர்லினிலும், 2017 ஆம் ஆண்டு துபாயிலும், 2018 ஆம் ஆண்டு துனிசியாவிலும் நடைபெற்ற, பல ஐபிசி கிராண்ட் பிரிக்சு போட்டிகளிலும், இவர் பதக்கங்களை வென்றுள்ளார். 2016, 2017, 2018 ஆகிய மூன்று தேசிய பாரா தடகள வாகைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளை மேம்பாட்டிற்கான, இந்திய தேசிய விருதையும், 2019 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று, அரியானாவின் ஆளுநரிடம், அம்மாநில விருதையும் பெற்றார். பாரா சாம்பியன்ஸ் திட்டத்தின் மூலம், கோசுபோர்ட்சு அறக்கட்டளையின் நல்கையையும் பெற்றுள்ளார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

1985ஆம் ஆண்டு, அரியானாவின் ஹிசாரில் ஓய்வுபெற்ற மாவட்ட தோட்டக்கலை அதிகாரி பால்ஜீத் பியானுக்கு, ஏக்தா பியான் பிறந்தார். அவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர்.[4]. 2003ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தால், இவரது முதுகெலும்பு சேதமடைந்தது. ஏக்தா. அதனால் ஒன்பது மாதங்களை மருத்துவமனையிலேயே, இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்விற்கான கடின உழைப்பைப்பிற்குப் பின்,தன்நம்பிக்கை பெற்றார். ஹிசாரில் பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டில், அவர் அரியானா குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி வேலைவாய்ப்பு அதிகாரியாக சேர்ந்தார். [5]. 2015ஆம் ஆண்டு, தடகள வீரர் அமித் சரோஹாவை சந்தித்தார். பியானைத் தன்னைப் போலவே, ஒரு பாரா-தடகள வீரராக உருவெடுக்க ஊக்கமளித்தார் அமித். தட்டெறிதலில், பியான் பயிற்சியைத் தொடங்கினார்.[6]

மேற்கோள்கள்தொகு

4 பரூல் பார்மர்தொகு

பரூல் பார்மர்
Parul Dalsukhbhai Parmar
 
29 ஆகஸ்டு 2009 ஆம் ஆண்டு, குடியரசு தலைவர் பிரதிபா பட்டேல் லிடமிருந்து பரூல் பார்மர், அர்சுனா விருதை வாங்கும் காட்சி
நேர்முக விவரம்
பிறந்த தேதி20 மார்ச்சு 1973 (1973-03-20) (அகவை 48)[1]
நாடு  இந்தியா

பாருல் தல்சுக்பாய் பார்மர்(Parul Dalsukhbhai Parmar) (பிறப்பு: 20 மார்ச், 1973) ஓர் இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். பாரா பேட்மிண்டனில், உலக சாம்பியன் பட்டம் பெற்றதோடு,[2] உலகத் தரவரிசையில் முதல் இடத்திலும் இடம் பெற்றுள்ளார். அவர் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கைப் பின்னணிதொகு

பார்மர் 20 மார்ச் 1973ஆம் ஆண்டு குஜராத்தின் காந்திநகரில் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது போலியோ இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு மூன்று வயதில் பார்மர் விளையாடும் போது ஊஞ்சலில் இருந்து கீழே விழ, அவரது கழுத்தெலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்தது. காயம் குணமடைய நீண்ட நாட்கள் சிகிச்சையும் ஓய்வும் தேவைப்பட்டது. அவரது கால்களை வலுப்படுத்தவும், நன்றாக குணமடையவும் உடற்பயிற்சி செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாநில அளவிலான பேட்மிண்டன் வீரரான அவரது தந்தை, உள்ளூர் பேட்மிண்டன் கிளப்புக்கு பயிற்சி பெற செல்வார். பார்மரும் தனது தந்தையுடன் கிளப்புக்குச் செல்லத் தொடங்க, விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அருகில் வசிக்கும் குழந்தைகளுடன் அவர் பேட்மிண்டன் விளையாட தொடங்கினார். உள்ளூர் பயிற்சியாளரான சுரேந்திர பரேக், பார்மரின் சிறப்பு திறமையைக் கவனித்து, அவர் மேலும் தீவிரமாக விளையாட ஊக்குவித்தார். பார்மர் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினாலும், பாரா பேட்மிண்டன் என்ற ஒரு விளையாட்டு இருப்பதை அவர் நீண்ட காலமாக அறிந்திருக்கவில்லை. பாரா பேட்மிண்டன் விளையாட்டில் அவர் போட்டியிடத் தொடங்கியதும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்தொகு

5. மனு பாக்கர்தொகு

மனு பாக்கர் (Manu Bhaker) துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற சிறப்பை மனுபாக்கர் பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். மனுவுக்கு வயது 16 ஆக.[1][2] இருந்தபோது இவர் கலந்துகொண்ட முதல் காமன்வெல்த் போட்டி இதுவாகும். 2020 ஆம் ஆண்டு மனுபாக்கருக்கு அர்ச்சுனா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

6.கொனேரு ஹம்பிதொகு

கொனேரு ஹம்பி ( Koneru humpy) (பிறப்பு: மார்ச் 31, 1987) ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த, ஓர் இந்திய சதுரங்க வீராங்கனை ஆவார். மேலும், இவ்விளையாட்டின் விரைவான ஆட்ட வாகையாளர் என்ற பிரிவில் உலக சாம்பியன் ஆவார். [1] 2002 ஆம் ஆண்டு, 15 வயதில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்து, உலக சதுரங்க வரலாற்றில், மிக இளம் வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கினார். ஆண்களின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த, முதல் இந்திய பெண்மணியும் இவரே ஆவார். [2] 2006 தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக, தனிப்பட்ட போட்டியில் தங்கத்தை வென்ற இவர், கலப்பு அணியிலும் இணைந்து விளையாடிபோது, அவரின் அணி தங்கம் வென்றது. [3] 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு, விளையாட்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக அர்ஜுனா விருது அளித்தது. மேலும், 2007ஆம் ஆண்டு, இந்திய அரசின் உயர்ந்த குடி விருதான, பத்மாஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பொழுது, அவருக்கு 20 வயது கூட இல்லை. [4]

மேற்கோள்கள்தொகு