பயனர்:Kurumban/தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும்

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும்

தமிழ் விக்கிப்பீடியாக்கு செப்டம்பர் 2013 வந்தால் பத்து வயது ஆகிறது. தற்போது இதில் 55,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2003ல் தொடங்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகப்பு செய்தவர் அமீரகத்தில் வசிக்கும் யாழ்பாணத்தவர் இ. மயூரநாதன் என்ற பயனர் ஆவார். தான் தமிழ் விக்கிப்பீடியாவில் நுழையக்காரணம் அகத்தியர் யாகூ குழுமத்தில் தமிழ் திறமூல கணினி முன்னோடியான விக்கியர் முகுந்தராஜின் மடல் என்று இவர் கூறுகிறார்.

தொடக்கம் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் இ. மயூரநாதனின் முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி இருந்தாலும் 6 நவம்பர், 2003 முதல் பங்களிக்க தொடங்கி இருந்த மயூரநாதன் நவம்பர் 20, 2003 ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டு வந்தவராவர்.

பங்களித்த குறிப்பிடத்தக்கோர் தொகு

மயூரநாதனுக்கு (இன்றும் பங்களிப்பவர்) அடுத்து பலர் இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் நற்கீரன், சிறீதரன், சுந்தர், இரவி, பேரா. செல்வா ஆகியோர் ஆவர். ஆரம்ப காலங்களில் அதிகம் உழைப்பை தந்து தற்போது அந்த அளவு தரமுடியாதவர்கள் நிரோஜன் சக்திவேல், டெரன்சு, கோபி போன்றோர். இவர்கள் தவிர செங்கை பொதுவன், புன்னியாமீன், மணியன், தேனி சுப்பிரமணி, சோடாபாட்டில் போன்றோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர, மற்ற ஏராளமானோரின் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா இன்று இந்திய மொழிகளில் குறிப்பிடத்தக்கதாக வளர்ந்துள்ளது. தற்போது மாணவர்களின் பங்களிப்பு கூடியுள்ளது.

பங்களிப்பு இல்லாத நாடுகள் தொகு

இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் இருந்து பயனர்கள் எழுதினாலும் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் இருந்து பயனர்கள் இல்லாதது குறையாக உள்ளது. மேலும் மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மட்டுமே சிறப்பாக பங்களிப்பவராக உள்ளார். அதிகளவான மலேசிய, சிங்கப்பூர் பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது இதன் வளர்ச்சிக்கு மேலும் துணைபுரியும்.

பரப்புரை தொகு

கடந்த சில ஆண்டுகளில் ஊடகங்கள் (நாள், வார இதழ்கள்), பட்டறைகள், விக்கி ஊடகப்போட்டி, கட்டுரைப் போட்டி மூலமாகவும் தமிழ் விக்கிப்பீடியா நிறைய மக்களை சென்றடைந்தது. இதன் மூலம் சிறப்பான பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கிடைத்தார்கள்.

வாய்ப்பு தொகு

பல்துறை வல்லுனர்கள் பங்களித்தாலும் தமிழ் விக்கிப்பீடியா மேலும் வளர்வதற்கு இன்னும் நிறைய துறை வல்லுனர்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. இவர்கள் எழுதுவதற்கான தலைப்புகளும் ஏராளமாக தமிழில் உள்ளன. தற்போதுள்ள கட்டுரைகளை இவர்கள் பிழை திருத்தி மெருகேற்றலாம் வளர்க்கலாம். தமிழர் தொடர்பான செய்திகளை தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே பதிவு செய்யும் என எதிர்பார்க்கலாம் மற்ற விக்கிகள் தமிழர் தொடர்பான செய்திகளுக்கு முன்னுருமை தராது. வரலாறு, அறிவியல் (மருத்துவவியல், தாவரவியல், விலங்கியல், தொழிற்நுட்பம்), கணிதம், இலக்கியம், மொழி, சார்ந்த கட்டுரைகள் நிறைய தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தேவைப்படுகின்றன.

தடை தொகு

பங்களிக்க நினைக்கும் தட்டச்சு தெரிந்த சிலருக்கு தகுந்த கலைச்சொல் கிடைப்பதில் சிக்கல் உள்ளது அதற்கு அவர்கள் விக்கிப்பீடியாவின் சகோதர திட்டமான தமிழ் விக்சனரியை நாடலாம், அதில் 280,000க்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. பலருக்கு இன்னும் கணினியை பயன்படுத்த தெரியவில்லை, கணினி பழக்கம் உள்ளோருக்கு தமிழ் தட்டச்சு தெரியவில்லை.

பங்களிப்போரும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை அடுத்தவர் திருத்தினால் அல்லது உரையாடலில் எதிர் கருத்து கூறினால் அது பற்றி விவாதிக்காமல் வருந்தி பங்களிப்பை குறைத்து விடுகிறார்கள் அல்லது நிறுத்தி விடுகிறார்கள்.