என் பெயர் மலர் அமுதன்.[1] பெற்றோர் ராஜமணி – செல்லத்தாய். தொழில்முறையில் தமிழ் இதழாளர். நாளிதழில் செய்தி உருவாக்கம், செம்மையாக்கம், பயிற்சி அளித்தல், வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் பெற்றவன். புத்தக தொகுப்பு மற்றும் செம்மையாக்கத்திலும் திறன் பெற்றவன். இயற்கையை விரும்பும் ஆர்வலன். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கொண்டவன். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்ற கருத்தாக்கத்தில் பணி செய்து வருகிறேன். புவி சார்ந்த வரலாற்று பின்புலத்துடன், இயற்கை வளம், உயிரினங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மொழியை எளிமையான தொடர்பியல் கருவி என்று நம்புகிறேன். மானுடவியல் துறையில் தீவிர ஈடுபாடு கொண்டவன். இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை நம்புகிறேன். பயணங்களில் தீவிர ஆர்வம் கொண்டு, வரம்பற்ற அனுபவங்களை பெற்றுள்ளேன். சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறைக்கும் முயற்சி தான் வாழ்க்கை என நம்புகிறேன். என்னை தொடர்பு கொள்ள: malaramuthan@gmail.com

  1. https://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/134131/4/04_acknowledgement.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Malaramuthan&oldid=2877691" இருந்து மீள்விக்கப்பட்டது