பயனர்:Muhamed~tawiki/மணல்தொட்டி
முஹம்மது யூனுஸ் (Mohammad Yunus : பிறப்பு 4 மே 1884 இறப்பு 13- மே 1952) பிரிட்டிஷ் இந்தியாவின் பீகார் மாகாணத்தின் முதல் பிரதமர் ஆவார். அவரது பணியின் போது, மாகாண அரசாங்கங்களின் தலைவர்கள் பிரதமர்கள் என்று அழைக்கப்பட்டனர், பின்னரே முதலமைச்சர் எனக் குரிப்பிடப்பட்டது. 1937 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் ஜனநாயகத் தேர்தலின் போது அவர் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுயூனுஸ், 4 மே 1884 இல் பீகாரின், பாட்னாவின் அருகில் அமைந்துள்ள பென்ஹாரா என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை மௌலவி அலி ஹசன், கிராமத்தின் ஜமீன்தாராகவும், பாட்னா நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்தார். யூணுஸின் மூத்த சகோதரர் யூஸுபும் பார் அட் லா பயின்றவர். இவருடைய தாத்தா முகமது ஆஸம், முங்கேர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.
யூனுஸ் உருது மற்றும் இஸ்லாமியப் படிப்பை ஜெஹனாபாத், அம்துவாவைச் சேர்ந்த ஷா சாஹேப்பிடம் இருந்து கற்கத் தொடங்கினார், பிற்காலத்தில் அம்துவாவில் கான்காவை நிறுவினார் (கான்கா சூஃபிகளின் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருந்தது). அவர் பாட்னா கல்லூரிப் பள்ளியில் தனது கல்வியைக் கற்றார், பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மிடில் டெம்பிளில் பார் அட் லா பட்டம் பெற்று மீண்டும் பாட்னாவுக்கு வந்தார்.
குடும்பம்
தொகுயூனுஸ் மிர்சாபூரின் - உத்தரப் பிரதேசம் ஜமீன்தாரும், முன்னணி வழக்கறிஞருமான மௌலவி அப்துல் ஜப்பாரின் மகள் ஜைபுன்னிசாவை மணந்தார், பாரிஸ்டரும் காங்கிரஸின் தலைவருமான யூசுப் இமாம், ஜைபுன்னிசாவின் சகோதரர் ஆவார். யூணுஸிர்க்கு யாசின் யூனூஸ் மற்றும் யாகூப் யூனூஸ் என இரு மகன்கள் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
தொகுயூனுஸ் இந்திய பாக்கித்தான் பிரிவினையின் போது, பிரிவினையை எதிர்த்தார், ஐக்கிய தேசியத்தினை வலியுறுத்தினார். இது முஸ்லீம் லீக்கின் இரு தேசக் கோட்பாட்டிற்கு முரணானது.
அவர் 1908 இல் லாகூர் மாநாட்டில் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார், ஆனால் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினார். 1909 இல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸின் 24வது அமர்வின் சப்ஜெக்ட் கமிட்டியில் உறுப்பினரானார். சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் ஹசன் இமாம், திரு தீப் நாராயண் சிங், டாக்டர் ஏ என் சின்ஹா, திரு கிஷன் சஹாய் மற்றும் திரு பரமேஸ்வர் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
யூனுஸ் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளராகவும் சிறிது காலம் பணியாற்றினார். 1916 ஆம் ஆண்டு தனது 32வது வயதில் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினரானார். 1921 இல் பீகார் மற்றும் ஒரிசா சட்ட மன்றத்தின் உறுப்பினரானார். 1917 இல் பாட்னா முனிசிபல் போர்டு உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1917 முதல் 1923 வரை அதன் குழுவில் இருந்தார்.