எல்லாவிதமான பிரச்சினைக்களுக்கும் மூலமாக இருப்பது திருப்தியின்மையாகும். நான் மீண்டும் அழுத்தமாக சொல்வது எல்லாவிதமான பிரச்சினைக்களுக்கும் மூலமாக இருப்பது எதிலும் திருப்தி அடையாமல் இருப்பது.பலவகையான உதாரணங்களை இங்கே கூறலாம்.

1.உணவுக்கு அடிமை : உணவு தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும். நீங்கள் வெளியே இருந்து வரும் சந்தோஷத்தை மட்டும்தான் தேடுகிறீர்கள்.ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள் சந்தோஷமாக இல்லை. உணவிலிருந்து வரும் சந்தோஷம் தற்காலிகமானது. அதனால் அவசரகதி உணவு மன அழுத்தத்தை கொடுக்கிறது, மேலும் உங்களை சந்தோஷமின்றி செய்கிறது, மேலும் உணவிலிருந்து வரும் சௌகரியத்தை தேடச் செய்கிறது.

2.புகை பிடித்தல், மருந்து,மது மற்றும் மாத்திரைகளுக்கு அடிமை: உணவுக்கு அடிமையாவது போலத்தான் இதுவும். அதே மாதிரியான சுற்றுதான் இதுவும். 3. இணையம், பாலியல் படங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் போன்றவைக்கு அடிமை. 4.கடன் , ஒழுங்கீனம் ; நீங்கள் வாங்கும் பொருள் எல்லாமே தற்காலிக சந்தோஷத்தை மட்டும்தான் அளிக்கும். நீங்கள் உங்களுக்குள் பயப்படுகிறீர்கள். 5.மற்றவர்களை சந்திக்க பயப்படுகிறீர்கள்: நீங்கள் மற்றவர்கள் உங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதினால் ஒரு பயம் ஏற்படுகிறது.நீங்கள் யார் என்ற நம்பிக்கை இல்லாததால் வருவது, சந்தோஷம் இல்லாததால் வருவது. 6. சுயமாக தொழில் செய்ய பயப்படுகிறீர்கள்: தோல்வி அடைந்து விடுவோம் என பயப்படுறீர்கள்.ஏனென்றால் உங்களிடத்தில் நீங்கள் யாரென உங்களுக்கே நம்பிக்கை இல்லை, அதனால் நீங்கள் யாரென என்று சந்தோஷம் அடைவதில்லை. 7.உங்கள் உடல் தோற்றத்தில் கவலை கொள்கிறீர்கள். உங்கள் உடல் ஒரு சீரிய தோற்றத்தை அடைய விரும்பி அதை அடையாமல் இருப்பது. இப்போது உள்ள உடல்தோற்றம் அழகானது என ஒப்புக் கொள்ள மறுப்பது ( உடல் தோற்றம் சிறப்பான நிலையில் இருப்பது உண்மையிலே நல்லது) மற்றவர்கள் நீங்கள் யார் என தெரிந்து கொள்ள விரும்புகிறார்களே ஒழிய உங்கள் வெளிதோற்றத்தையல்ல. 8.புதிய பழக்கத்தை தோற்றுவிக்க இயலாமை : உண்மையிலே நீங்கள் புதிய பழக்கத்தை கடைபிடிக்க நம்புவதில்லை,அதனால் அடிக்கடி தோல்வியடைகிறீர்கள்,அதனால் நீங்கள் அதற்கு முன்பு முழு முயற்சியை நீங்கள் கொடுப்பதில்லை.நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளாததால் நாணயமற்றவராய் , ஒழுங்கற்றவராய், நல்ல மனிதனாக இல்லாமல் இருப்பது. 9.உங்கள் நண்பன்/நண்பியிடம் பொறாமை , பாதுகாப்பின்மையுடன் இருப்பது. அதனால் அவர்களுடைய முகநூலில் அவர்கள் யாருடன் தொடர்புதான் உள்ளார்கள் என பார்ப்பது: உங்களுடைய சிறப்பம்சத்தை அறியாமல் இருப்பது, அதனால் அவர்கள் நம்மை கழற்றிவிடுவார்களோ என நினைப்பது.மறுபடியும் நீங்கள் நல்லவரில்லை என நினைப்பது. 10.மற்றவர்கள் instagramலும், facebookலும் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என நினைத்து பொறாமைப்படுவது, நமக்கு அது கிடைக்காமல் போகிறதே என ஏங்குவது : மற்றவர்கள் உங்களைவிட அதிக பொழுதுபோக்கில் ஈடுபடுவது போல நினைப்பது , அதனால் நீங்கள் இப்பொழுது செய்வது சந்தோஷத்தை அளிக்கவில்லை, அது போதுமானதாக இல்லை என்று எண்ணுகிறீர்கள். உங்கள் இதயம் சொல்கிறது நீங்கள் ஒரு மிகப்பெரிய ஆள் இல்லை என்று. 11.தள்ளிப்போடுதல், இணையப் பயன்பாட்டால் வரும் மனச்சிதறல்: எப்பொழுதுமே எளிதான, சௌகரியமான செயல்களை செய்ய ஆவல் கொள்ளல். கடினமான, சவாலான காரியங்களை செய்ய தயக்கம் காட்டுதல்.ஏனென்றால் கடினமானதால் , சுலபமாக இல்லாததால் தோல்வியடைந்துவிடுவோம் என எண்ணம் கொள்ளவது. சாவாலான காரியங்களை நம்மால் செய்ய இயலாது என நீங்களே நம்புவது. 12.ஒரு காரியத்தினால் வரும் விளைவு சிறப்பானதாக அமைய, செயல்பெற நீங்கள் விரும்பினாலும், பயத்தினால் வரும் பதற்றம் நீங்கள் விரும்பிய செயல் அமையவிடாமல் செய்கிறது. எது வந்தாலும் பரவாயில்லை என நீங்கள் நினைப்பதில்லை. ஏனென்றால் நம்மிடத்தில் நாம் நம்பிக்கை வைப்பதில்லை. 13.கோபம் :நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பான விளைவுகள் ஏற்படாமல் இருக்க யாராவது இடையூறாக இருந்தால் கோபப்படுவது. எதுநடந்தாலும் பரவாயில்லை என நினைக்காதது ,ஏனென்றால் உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லை. இன்னும் இதுபோன்று மேலும் பல உதாரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.எல்லாவித பிரச்சினைகளும் ஒரே மாதிரியானது,வெவ்வேறு வடிவுடையது. ஒரே வகையான எண்ணங்கள் திரும்ப திரும்ப இந்த எல்லாவித பிரச்சினைக்களும் இருப்பதை காண்பீர்கள்.

திருப்தியின்மைக்கு முக்கியமான பிரச்சினைகளாவது  :

1. கற்பனை அல்லது சாத்தியகூறற்றதனை பிடித்து நம்புவது. 2. நாம் யாரென சந்தோஷமின்றி இருப்பது 3. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது 4. வெள்ளிப்புற சந்தோஷங்களை தேடுவது. செயல்வடிவத்தின் படி: மேலே கூறப்பட்ட பிரச்சினைகள் அல்லாமல் வேறு எது வேண்டுமென்றாலும் இருக்கலாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள். வாழ்க்கையில் திருப்தியின்றி இருப்பதுக்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம் இல்லையா?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muralipollachi&oldid=2036477" இலிருந்து மீள்விக்கப்பட்டது