முனைவர் நா.இளங்கோ

தொகு
  • முனைவர் நா. இளங்கோ (பிறப்பு: ஏப்ரல் 29, 1959)புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்,
  • புதுச்சேரியில் பிறந்த இவர், இவர் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
  • புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய மன்றப் பொதுச் செயலாளராக இருந்தவர்.
  • தமிழ்க் கவிதை உலகில் மலையருவி என்ற பெயரால் அறியப்படும் கவிஞர்.
  • புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்.
  • மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழ் மொழி, இன நலம் பேணும் பல்வேறு போராட்டங்களில் தம்மை முழுமுனைப்போடு ஈடுபடுத்திக்கொள்பவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு
  • தந்தையார்: ப.நாகமுத்து தாய்: வர்ணமுத்து
  • புதுச்சேரி அரசின் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர் (1964-1975).
  • 1975 முதல் 1979 வரை தென்னாற்காடு மாவட்டம் மயிலம், சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப்புலவர் படிப்பிற்கு இணையான பி. லிட் பட்டப்படிப்பை முடித்து,
  • புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும்(1979-1981)
  • பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் (1981-1982) இளம் முனைவர் பட்டமும் பெற்றவர்.
  • தமது முனைவர்ப்பட்ட ஆய்வைச் (1983-1987) சென்னைப் பல்கலைக் கழகத் தமிழிலக்கியத்துறையில்
  • முனைவர் ந.சஞ்சீவி அவர்களின் ஆதரவுடன் முனைவர் கு.மோகனராசு அவர்களில் மேற்பார்வையில் செய்து முடித்தவர்

ஆய்வுகள்

தொகு

இளம் முனைவர் பட்டத்திற்காக முனைவர் இரா.கு.நாகு அவர்களின் மேற்பார்வையில் முதற்குறள் ஆய்வு எனும் பொருளில் ஆய்வேட்டை வழங்கியுள்ளார். இரண்டடியில் அமைந்த ஒரு திருக்குறளை ஆய்வுப் பொருளாக்கி நூற்றைம்பது பக்கத்தில் ஒரு ஆய்வேட்டை (1982) வழங்கிய தனிச் சிறப்பு இவ் ஆய்வேட்டுக்கு உண்டு.

தம் முனைவர்பட்ட ஆய்வின் போது பகுதிநேரப் படிப்பாக இரண்டாண்டு நாட்டுப்புறவியல் பட்டயப்படிப்பை படித்தவர். பட்டயப்படிப்பின் ஒரு பகுதியாக நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய மதிப்பீடுகளும் குழந்தைபேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும் என்ற தலைப்பில் ஆய்வேடு ஒன்றனையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்பித்து நாட்டுப்புறவியல் பட்டயம் பெற்றவர். நாட்டுப்புறவியல் பட்டயத்திற்காக சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் ஆய்வேடு என்ற சிறப்பிற்குரியது இவ் ஆய்வேடு.

முனைவர் பட்ட ஆய்வுக்கான தலைப்பு நாட்டுப்பறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும் என்பதாகும். தமிழ் ஆய்வுலகில் ஏட்டிலக்கிய மரபுகளோடு நாட்டுப்புற இலக்கிய இலக்கிய மரபுகளை ஒப்பிட்டு ஆய்ந்த முதல் ஆய்வு என்று இவ் ஆய்வினைக் குறிப்பிடலாம்.

எழுதியுள்ள நூல்கள்

தொகு
  • காலடியில் தலை (புதுக் கவிதை)
  • மலடியும் மழலையும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
  • நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
  • மொழிபெயர்ப்பும் மொழிப் பயிற்சியும் (மொழித்திறன்)
  • இணர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு (தொகுப்பாசிரியர்)
  • தமிழ் இணர் (இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்)
  • படர்க்கை (தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள்)
  • பொருநராற்றுப்படை மூலமும் உரையும்
  • மலர் நீட்டம் (செம்மொழி இலக்கிய ஆய்வுகள்)
  • ஊடகங்களின் ஊடாக (உடகவியல் கட்டுரைகள்)

விருதுகள்

தொகு
  • நண்பர்கள் தோட்டம் வழங்கிய மண்ணுரிமைக் கல்வியாளர் விருது - 2006
  • புதுவைத் தமிழ்க்கலை மன்றம் வழங்கிய செந்தமிழ் ஞானச் செம்மல் விருது - 2007
  • கிங்பிஷர் இளைஞர் விளையாட்டு மன்றம் வழங்கிய தமிழ்ப்பணிச் செம்மல் விருது 2007
  • தமிழ்ப் பொழில் இலக்கியக் கழகம் வழங்கிய ஆய்வுரைச் செல்வர் விருது - 2007
  • தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகம் வழங்கிய தமிழ் மாமணி விருது - 2008
  • நண்பர்கள் தோட்டம் வழங்கிய நற்றமிழ் நாவலர் விருது - 2009
  • சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் பேரவை வழங்கிய இலக்கியச் செம்மல் விருது - 2009
  • புதுச்சேரி பாத்திர வியாபாரிகள் சங்கம் வழங்கிய செம்மொழிச் செம்மல் விருது - 200
  • சிங்கப்பூர் தமிழிலக்கியக் களம் வழங்கிய இலக்கிய மாமணி விருது - 2011
  • தமிழ்த் தொண்டன் பாரதி கழகம் வழங்கிய தமிழ்ச் செவ்வி அறிந்தோர் விருது - 2011
  • குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் வழங்கிய பேரறிஞர் அண்ணா விருது -2011
  • மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் வழங்கிய சிங்கார வேலர் சுடர் விருது - 2012

வெளி இணைப்புகள்

தொகு

முனைவர் நா.இளங்கோ வலைப்பதிவுகள்

http://nailango.blogspot.in/

http://munaivarilango.blogspot.in/

http://malaiaruvikavithai.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nagailango&oldid=1103278" இலிருந்து மீள்விக்கப்பட்டது