REAL GOD IN YOU
என்னுடைய பெயர் சிலுவை விஜயன் நான் 1962 ஜூலை மாதம் மூன்றாம் தேதி தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரைப்பகுதியில் அமைந்த அமலிநகர் என்ற மீனவ கிராமத்தில் திருமிகு சிலுவை பீரிஸ் - பெர்பெத்துவா பீரிஸ் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தேன் என் தம்பி ஜான்லின் பாபு சின்ன வயதிலேயே இறந்துவிட்டான் என் தாயும் என்னுடைய 7 ஆவது வயதில் இறந்துவிட்டார்கள் சின்ன வயதிலிருந்தே நான் பல திறமைகளை எளிதாக கற்றுக்கொள்பவனாக இருந்தேன்.ஏனெனில் என் தந்தை மிகவும் சிறந்த என் முதல் குரு.அவரிடம் நான் இன்றும்கூட கற்றுக்கொண்டே இருக்கிறேன்.என் தந்தையின் பெயர் சிலுவை பீரிஸ் ஆம் பீரிஸ் என்பது எங்கள் குடும்ப அடையாள பெயர் 1970 ல் எங்கள் அமலினகரில் அமலிஅன்னை தேவாலயத்தில் புதுநன்மை பெரும்போதே நான் சாமியாராக போக தூண்டப்பட்டேன் காரணம் அந்த நாட்களில் எங்கள் பங்கு ஆலயத்தில் டி ஜி எஸ் அவர்களின் பாடல்கள் ஒலிபரப்புவார்கள் அவரைப்ப் போலவே நான் பேசிப் பழகினேன் ஆம் நான் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்சியடைந்ததால் என் அன்புள்ள தகப்பனார் திரு சிலுவை பீரிஸ் அவர்கள் தான் சிறுக சிறுக சேர்த்துவைத்த பணத்திலிருந்து 300 ரூபாய்க்கு எச் எம் டி வாச் வாங்கித் தந்து என்னைப் பெருமைப் படுத்தியதை இன்று நினைத்தாலும் ஆனந்தமடைகிறேன் வெறும் 210 மார்க்குகள் பெற்றிருந்தாலும் என்னை அலட்சியப் படுத்தாமல் உற்சாகமூட்டிய என் தந்தை இன்றும் என்னில் உயிரோடு வாழ்கிறார் என்னை கப்புசின் துறவியர் மடத்தில் என் தந்தை ஆசையோடு சேர்த்தார்கள் ஆனால் நான் அவர்களால் தேர்வு செய்யப் படவில்லை அழுகையோடு திருச்செந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் என் படிப்பு தொடர்ந்தது இளமையின் இடரலில் நானும் வீழ்ந்தேன் எனவே என்னைத் தேர்வு செய்த துரவர சபையில் நான் சேரவில்லை அதன் பின் எனது தேர்வு முடிவில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தேன்.