பயனர்:Shiva1411989/மணல்தொட்டி
சோழர்களின் தோற்றம்
தொகுசோழப் பேரரசு சோழ நாடு | |
---|---|
கி.மு. 300கள் | |
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் |
• தொடக்கம் | கி.மு. 300கள் |
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
முற்காலச் சோழர்களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூவருலாவில் அடங்கியுள்ள விக்கிரம சோழன் உலா நூலில் அந்த நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுக்கு முன்னர் ஆண்டதாகச் சோழர் பரம்பரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். அவர்களில் பழங்கதைகளாகத் தெரியவரும் சோழர்களைத் தொன்மச் சோழர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களில் வரலாற்றுச் சோழர்களாகத் தெரியவரும் சோழர்களும் உள்ளனர்.
சோழ அரசர்கள்
தொகுபிரமன், உலகம் படைத்தவன் காசிபன், பிரமன் மகன் மரீசி, மேதக்க மையறு காட்சியன் சூரியன், எல்லாளன் எல்லாளன், ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன் மனுச்சோழன், பசுவுக்கு நீதி வழங்கியவன் ஆடுதுறை அறனாளன், புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன் வானூர்தி அரசன் தேவருலகைக் காத்தவன் வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன், முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன் தூங்கும் எயில் எறிந்த சோழன் மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன் நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன் சிபிச் சக்கரவர்த்தி சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன் காவிரி தந்தவன், குடகு மலையைப் பிளந்து காவிரியாற்றைச் சோழநாட்டில் பாயச் செய்தவன் இமயத்தில் தன் ஆண்-புலிச-சின்னத்தைப் பொறித்தவன் காவிரியாற்றுக்குக் கரை கட்டியவன். களவழி நாற்பது பாடலைக் கேட்டுக் கணைக்காலிரும்பொறையின் கால் விலங்கை நீக்கியவன் தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்ட சோழன் தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்.
ஒரே பகலில் 18 பாலைநிலங்களையும், மலைநாட்டையும் (சேரநாட்டையும்) வென்றவன் கங்கையையும், கடாரத்தையும் தன் படையை அனுப்பி வென்றவன் வங்கநாட்டுக் கல்யாணபுரத்தை மூன்று முறை தாக்கி அழித்தவன் கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன். திருவரங்கப் பெருமானுக்கு மணிகளாலான பாம்புப்படுக்கை அமைத்துக் கொடுத்தவன் கூடல் சங்கமப் போரில் 1000 யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன் இவர்களுக்குப் பின்னர் அரியணை ஏறியவன் விக்கிரம சோழன் விக்கிரம சோழன்.