சி.மகேந்திரன், வயது 67. தந்தை சிங்காரம். தாய் வேதாம்பாள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையார் சுதந்திர போராட்ட வீரர். நேத்தாஜி சுபாஷ் சுதந்திரப் போராட்டத்தில் சிங்கபூரில் இணைந்து அவரது மெய் காவல் படையில் செயல்பட்டவர். அக்கா மூன்று பேர், தம்பி ஒருவர், தொழிற்சங்கத் தலைவர். மனைவி பங்கஜம், மாணவர் பருவத்தில் கம்யூனிஸ்டு கட்சி செயல்பாட்டில் அமைந்த திருமணம். மகன் புகழ் திரைத்துறையின் நடிப்புதுறையில் இயங்குகிறார், மகள் சங்கமித்திரை ஆஸ்ரேலியாவில் பணியில் இருக்கிறார்.

இளமைப் பருவம் தொகு

பள்ளி பருவத்தில் கம்யூனிஸ்டு கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தில் 14 வயதில் இணைந்தார். ஆரம்ப கல்வி கீழவன்னிப்பட்டு பாடசலை, மன்னார்குடி பள்ளி மன்னார் பின்லே ஆரம்ப பள்ளி. உயர்நிலை பள்ளி ஒக்கநாடு கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தஞ்சை செல்வராஜ் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி படிப்பு மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி, திருவாருர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி.

பேச்சார்வமும், எழுத்து ஆர்வமும் பள்ளி பருவத்திலேயே வந்துவிட்டது, பள்ளி கல்லூரி பேச்சு போட்டிகளில் பல பரிசுகளை பெற்றவர். பத்தாம் வகுப்பில் ஆனந்த விகடன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் பரிசை பெற்றார். தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக அசைட், இந்தியா டூடே பத்திரிக்கையால் தேர்வு பெற்றவர்.

எழுதிய நூல்கள் தொகு

சிகாகோ நகரத்தில் நடைபெற்ற 10 வது உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை அளித்த 84 தமிழ் அறிஞர்களில் இவரும் ஒருவர், இவரது ஆய்வு கட்டுரை தமிழின் தொன்மை அறிவை பற்றியது. வீரயுகத்தின் பண்புகளான காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம் என்பதை மறுத்த ஆய்வு இது.

  • தீக்குள் விரலை வைத்தேன்,
  • ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்,
  • வீழ்வேன் என நினைத்தாயோ,
  • தமிழக நதிகளின் மரணசாசனம் - ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • தமிழ்நாடு பிறந்தது என்ற நூலின் தொகுப்பாசிரியர்.

அரசியல், இலக்கியம், சமுதாய இயல் என்று 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் 1971 ஆண்டில் இணைந்தார். தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்டு கட்சியில் 7 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 1979 ஆம் ஆண்டு சென்னை மாநில தலைமையில் பொறுப்பேற்று அனைத்திந்திய மாபெருமன்றம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் பொதுச் செயலாளலாளராக பணியாற்றினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று செயல்பட்டவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்ட வருகிறார்.

தாமரை இலக்கிய இதழ் ப-ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராக் கொண்டு 1959 ஆண்டில் தொடங்கப்பட்டது. இலக்கியம், தமிழ் ஆய்வு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தனித்த ஆய்வுகளை தாமரை வெளியிட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக தாமரையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து செயலாற்றி வருகிறார். தேர்தலில் ஒரே ஒருமுறை தான் போட்டியிட்டுள்ளார். 2015 ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். வேறு எதிர்கட்சிகள் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Singaram.mahendran&oldid=2976001" இலிருந்து மீள்விக்கப்பட்டது