பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

விக்சனரி தானியங்கித்திட்டம் என்பது தன்னியக்கமாக சொல்-பொருள் விளக்கங்களை தமிழ் விக்சனரியில் சேர்க்கும் திட்டமாகும். நானும் ரவியும் இணைந்து துவக்கிய இந்தத் திட்டத்தின்வழி இதுவரை ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான கலைச்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கு விளக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.[1] இன்னமும் பல பணிகள் இதைத்தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளன. இதில் பங்களிக்க விரும்புபவர்கள் தங்கள் பெயரைப் பங்களிப்பாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளவும்.

வரலாறு

தொகு

2004-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவில் மயூரநாதன் மட்டுமே தொடர்ச்சியாக பங்களித்து வந்தார். அந்த நேரம் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு தமிழ் கற்கும் செருமன் பயனர் ஒருவர் சொல்லக்கேட்டு நானும், வேறு வழிகளில் ரவி, நற்கீரன், சிவகுமார் மற்றும் சிலரும் வந்து இணைந்தோம். அப்போது எங்களுக்கிருந்த சிக்கல்களில் தலையானவை தமிழில் உள்ளீடு செய்வதிலிருந்த இடர்களும் தமிழ் கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவதும்தான். கட்டுரை ஆக்கம் தொடர்பான எங்கள் உரையாடல்கள் கலைச்சொற்கள் தொடர்பிலேயே இருந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலிகள்[2] ஒருங்குறியில் இல்லாமலும் எளிதில் தேடுபொறிகளைக் கொண்டு தேட முடியாத நிலையிலும் இருந்தன. சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் தொகுத்து வெளியிட்ட தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகளைப்[3] பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பின்னர் சில திங்கள்கள் கழிந்து ரவி தமிழ் விக்சனரியைத் துவக்குவதில்/உயிர்ப்பிப்பதில் முனைந்தார். அப்போது இந்தக் கலைச்சொற்களை அங்கு ஒருங்குறியில் பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியது. இதற்காக பெர்ள் நிரலாக்கமொழியில் சில செய்நிரல்கள் எழுதினேன். அவற்றைக் கொண்டு த.இ.ப. அகரமுதலி ஒன்றை பதிவிறக்கி நிரல்வழியாகவே ஒருங்குறிக்கு மாற்ற முயன்றேன். ரவி அவற்றை மெய்ப்பார்க்கையில் பல வழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார். பின்னர் இந்தத் திட்டத்தில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சில மாதங்கள் முன்பு இதை மீண்டும் தூசி தட்டி புதிப்பித்தோம். புதிதாக நிரல்கள் எழுதினேன். ரவி குறிமாற்றத்திற்கென ஒரு திறந்தநிலைக் கருவியை[4] எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படியும் எஞ்சியிருந்த வழுக்களை நிரல் கொண்டும், மெய்ப்பார்த்தல் மூலமும் திருத்தினோம். இன்னமும் மிஞ்சியிருப்பவற்றை பங்களிப்பாளர்களே திருத்த வேண்டும். முதல் கட்டமாக காதலர் நாளன்று வெள்ளோட்டம் விடப்பட்டு மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்றோம்.[5] என் கணினியிலிருந்து விக்சனரிக்குப் பதிவேற்றத் துவங்கினோம். ஆனால், தொடர்ச்சியான இணைய அணுக்கம் இல்லாமையால் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணியை ரவி தனது கணினியிலிருந்து செலுத்த முன்வந்தார். தேவையான நிரல்களைப் பொறுமையாக நிறுவி பின் ஒரு இலட்சம் சொற்றொடர்களையும் பதிவேற்றி முடிக்கும்வரை நிரல்களைச் செலுத்தினார்.

தானியங்கிப் பணிகள்

தொகு
  • த.இ.ப. தளத்திலிருந்து மீயுரை வடிவில் தரவிறக்கம்
  • இலக்கணப் பகுப்பாய்வு செய்து சொல்-பொருள் விளக்கத்தைப் பிரித்தெடுத்தல்
  • ஒருங்குறிக்கு மாற்றுதல்
  • விக்சனரி நடைக்கு மாற்றுதல்
  • விக்சனரி வழங்கிகளை அணுகி போதிய இடைவெளி விட்டு ஒவ்வொரு பக்கமாகப் பதிவேற்றுதல்
பணி பொறுப்பாளர்(கள்) தற்போதைய நிலை
இப்பணிக்காகப் பயன்படுத்திய சொற்பட்டியலை txt , .pdf , தரவுத்தள வடிவங்களில் வெளியிடுதல் சுந்தர் உரை வடிவில் உள்ள கோப்பை வாசிப்பிற்கேற்றவாறு வடிவமைக்க வேண்டும்
மேலே குறிப்பிட்ட சொற்பட்டியலைக் கொண்டு எழுத்துப்பிழை திருத்திக் கருவி செய்தல் சுந்தர், ரவி பாலச்சந்தர் ரவி வழியாக அணுகி சொற்பட்டியலைப் பெற்று ஃபயர் ஃபாக்சுக்கான எழுத்துப்பிழை திருத்தியில்[6] 50,000 சொற்களைச் சேர்த்துள்ளார்.
ஏற்கெனவே விக்சனரியில் உருவாக்கப்பட்டிருந்த தலைப்புகளில் த.இ.ப. விளக்கத்தைச் சேர்த்தல்
இணைய இணைப்பில்லாமலேயே கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க தமிழ் அகரமுதலிச் செயலி
வேறு தமிழ் விக்கி தானியங்கிகள் உருவாக்குவதற்கு வசதியாக நிரல்களைப் பொதி செய்யல்
சிக்காகோ பல்கலைக்கழக அகரமுதலிகளைப் பதிவேற்றல்
ஆங்கில விக்சனரி முதலான மூலங்களிலிருந்து இலக்கணக் குறிப்புகளைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்தல்
தற்போது பதிவேற்றப்பட்டுள்ளவற்றிலுள்ள குறிமாற்றப் பிழைகளையும் பொருள் தவறுகளையும் களைதல் அனைத்து பங்களிப்பாளர்
விக்சனரி பக்கங்களுக்கு தேடுபொறிகள் வழியாக வரக்கூடிய பயனர்களை விக்கிப்பீடியாவிற்கு வரச்செய்யும் இணைப்புகளைச் சேர்க்க வேண்டும்
தமிழ் விக்சனரியைக் கொண்டு வேர்டுநெட் போன்ற தரவை காப்புரிமை விலக்குடன் வெளியிடுதல்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் (குறிப்பாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட அரசியல் வழக்குகள்) தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற்று என்ரான் மின்னஞ்சல் தரவு[7] போன்று ஆய்விற்காக வெளியிடல்
இத்திட்டத்துக்காக எழுதிய நிரலைப்பகிர்தல் சுந்தர் https://github.com/oligoglot/wiki  Y ஆயிற்று

பங்களிப்பாளர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. http://tamilwiktionary.blogspot.com/2008/03/blog-post.html
  2. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All
  3. http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil
  4. http://software.nhm.in/converter.html
  5. விக்கிபீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு10#விக்சனரி தானியங்கி
  6. ஃயர் ஃபாக்சு நீட்சி
  7. "The Enron Corpus: A New Dataset for Email Classification Research", ECML 2004 : 15th European Conference on Machine Learning, pp. 217–226, retrieved 2008-04-06 {{citation}}: |first= missing |last= (help); Cite has empty unknown parameters: |coeditors= and |coauthors= (help)CS1 maint: multiple names: authors list (link)