பயனர்:TNSEspsTUT/மணல்தொட்டி5

டேனியல் மின்கலம், 1836.

டேனியல் மின்கலம் 1836 ஆம் ஆண்டில் ஜான் ஃபிரடெரிக் டேனியல், எனும் பிரிட்டிஷ் வேதியியலாளர் மற்றும் வானிலை ஆய்வு ஆய்வாளர் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மின்வேதியல் செல் வகையைச் சார்ந்தது. இம்மின்கலத்தில் தாமிரப்பாத்திரத்தில் தெவிட்டிய தாமிரசல்பேட் கரைசல் எடுத்துக்கொள்ளபடுகிறது. நுண்துளைப் பாண்டம் ஒன்றினுள் நீர்த்த கந்தக அமிலத்தில் துத்தநாகத்தண்டு வைக்கப்பட்டிருக்கும். நுண்துளைப்பாண்டம் தாமிரசல்பேட் கரைசலினுள் வைக்கப்பட்டிருக்கும். துத்தநாகத்தண்டு கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து Zn++ அயணிகளையும் இரு எலக்ரான்களையும் தரும். Zn++ அயணிகள் நுண்துளைப் பாண்டத்தில் உள்ள துளைகளின் வழியே சென்று தாமிரசல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து Cu++ அயணிகளை உருவாக்கும். இந்த Cu++ அயணிகள் நேர்மின்வாயான தாமிரப்பாத்திரத்தில் படியும். டேனியல் மின்கலம் மின்சுற்றில் இணைக்கப்படும்போது துத்தநாகத்தண்டிலிருந்து இரு எலக்ரான்கள் சுற்றின் வழியே சென்று தாமிரத்தில் உள்ள தாமிர அயணிகளை நடுநிலையாக்கும். இதனால் தாமிரத்தில் இருந்து துத்தநாகத்திற்கு மின்சாரம் பாயும். டேனியல் மின்கலம் 1.08 வோ மின்னியக்கு விசையைத்தரும். [1][2] நிகழ்கால வரையரைப்படி, டேனியல் மின்கலத்தின் செந்தர மின்னிலை 25° செ வெப்பநிலையில் 1.10 வோ ஆகும். [3]


மேற்கோள்கள் தொகு

  1. Borvon, Gérard (September 10, 2012). "History of the electrical units". Association S-EAU-S.
  2. Hamer, Walter J. (January 15, 1965). Standard Cells: Their Construction, Maintenance, and Characteristics. National Bureau of Standards Monograph #84. US National Bureau of Standards. http://www.nist.gov/calibrations/upload/mn84.pdf. 
  3. Spencer, James N.; Bodner, George M.; Rickard, Lyman H. (2010). Chemistry: Structure and Dynamics (Fifth Edition). John Wiley & Sons. பக். 564. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470587119. https://books.google.com/books?id=FRfcVwFr17IC&pg=PA564. 

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEspsTUT/மணல்தொட்டி5&oldid=2698864" இலிருந்து மீள்விக்கப்பட்டது