Thamizhavel nalapathy
Joined 16 மே 2010
சுய குறிப்பு....
இறை வழி மருத்துவர் தமிழவேள் அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருந்து வருகிறார். மருத்துவரை பற்றிய குறிப்பை படிப்பதை விட அவரிடம் மருத்துவம் பெற்ற அன்பர்களின் அனுபவத்தை படித்தால் அவரை நன்கு அறியலாம்....மருத்துவரின் கூற்றுப்படி நமக்கு தேவையற்ற மன உபாதைகளை ஏற்படுத்தும் , நேற்று, நாளை - என்பதை விட " இன்று", "இப்பொழுது" - என்றிருப்பதே நலம்...அதுவே நமது உடல்-மன நலத்திற்கும், நம்மை சுற்றியிருப்போர் நலனிற்கும் நன்மை பயக்கும்.
எனினும் உலக வழக்கிற்காக சில குறிப்புகள்....
தந்தை தமிழியம் பறம்பை அறிவன் தமிழ் எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாய் அவர்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர். சில ஆண்டுகள் சுற்றுப்புற சூழல் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர். 1997 -ல் இருந்து சித்த வைத்தியத்தில் இருப்புவர் . மதுரை சித்த வைத்திய சங்கத்தில் பதிவு பெற்றவர்.. பாரம்பரிய முறையில் சித்த வைத்தியம் பயின்றவர். இவரது அப்பாவின் அம்மாவும் இறை வழி மருத்துவராக இருந்துள்ளார். அவர்களின் நண்பர்கள் மூலமாக சித்த வைத்திய நுணுக்கங்களை அறிந்துள்ளார். பரமக்குடி அருகில் உள்ள பாண்டியூரில், (மச்சமுனி சித்த ஞான சபை) குருநாதர் பார்த்தசாரதியிடம் தீட்சை பெற்றவர். ராமநாதபுரம் புலவர் அப்துல் மஜீதிடம் அவரது குடும்ப முறைகள், மற்றும் அவரது அன்பில், முழு மருத்துவ ஞானமும் பெற்றுள்ளார். அவரும் இறை வழி மருத்துவரே. புலவர் அப்துல் மஜீத் அவர்கள் முறையான கல்வி பெராவிடிலும், தானே முயன்று பல சித்த இலக்கியங்களை கற்றுணர்ந்தவர். அது தவிர அரபியும், சமஸ்க்ரிதமும் பயின்றவர். நண்பர் சேது ராமன் அழகப்பனிடம் அக்குபங்க்சர் பயின்றார். அவரும் அவருடைய தாத்தா வழியில் சித்த மருத்துவம் பயின்றவரே. கடந்த ஆறு ஏழு வருடங்களாக இறை வழி மருத்துவம் மூலம் பலரை குணபடுத்தி வருகிறார். நண்பர் வேல்முருகன், மேடவாக்கம் அவர்களின் "பதஞ்சலி உடல் நல மையத்தில்" தற்பொழுது புதன், சனி , (10 -7 ) ஞாயிறுகளில் (10 - 1 ) சிகிச்சை அளித்து வருகிறார். வேல்முருகனின் இல்லாள் மருத்துவர் ரத்னா அவர்களும் அக்குபங்க்சர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் (திங்கள் - சனி 10 - 1 ) . மேலும் ஆவடியில் "மரபு வழி நல வாழ்வு மையத்தில்" வாரத்தின் - திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிகிச்சை அளித்து வருகிறார். சித்த மருத்துவத்தில் பல அற்புத மருந்துகள் இருந்தாலும், இக்கால மக்கள் வாழ்க்கை முறைக்கும், மன நிலைக்கும் ஒத்து வரும் வகையில், எளிய , இனிய மருந்துகளையே (தாமரை, ஆவாரை, அமுக்கரா போன்ற), தனது கைப்பட (நோயாளியை பார்த்த பின்னர்) செய்து தருகிறார். வேறெந்த நிறுவனத்தின் மருந்துகளையும் பயன்படுத்துவதில்லை. அவற்றில் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இல்ல மருத்துவர்களின் அஞ்சரை பெட்டியில் உள்ளவையே...
தொடர்பு கொள்ள
பதஞ்சலி நல வாழ்வு மையம் மரபு வழி நல வாழ்வு மையம் செந்தமிழ் நகர் தாம்பரம் - வேளச்சேரி சாலை மேடவாக்கம் சென்னை 600 100
கை பேசி : 93425 12080