Wctamiluniversity
Joined 25 ஏப்பிரல் 2015
உலக செம்மொழித் தமிழ்ப் பல்கலைக்கழகம்:
அறிமுகம்:
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும். பெருமை மிக்க நம் தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், புதிய தலைமுறையினர்க்கும் தமிழ்க்கல்வி வாயிலாக அளித்திட உலக செம்மொழித் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.இப்பல்கலைக்கழகம் முற்றிலும் சேவை நோக்குடன் செயல்படும் சுயாட்சி தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.
நோக்கம்:
இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, தாய்லாந்து, மொரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழ் கல்வியை மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் அளித்தல். பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழி மேல் பற்று கொண்ட பிறநாட்டவர்களுக்கும் அடிப்படைத் தமிழ், எழுத்துப் பயிற்சி, இலக்கண முறைப்படி பேசும் பயிற்சியளித்தல், சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம், தமிழ் ஆராய்ச்சி படிப்புகள் நடத்துதல்.
சேவைகள்:
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்தல், இலவச பாட புத்தகங்கள் வழங்குதல் , பிற நாடுகளில் தமிழ் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்களை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்குதல்.
== # தலைப்பு
- தலைப்பு எழுத்துக்கள் ==