பயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1

வாருங்கள்!

வாருங்கள், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரவி (பேச்சு) 17:53, 25 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 17:31, 27 மார்ச் 2013 (UTC)

கட்டுரைத் தொகுப்பு தொகு

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும் கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். தாங்கள் விக்கிப்பீடியாவுக்குப் புதியவர் என்பதால் விக்கியின் நடை பற்றி மேலே கட்டத்திலுள்ள நீலவண்ண இணைப்புகளைச் சொடுக்கி அறிந்துகொள்ளுங்கள். அதில் தங்கள் உதவிக்கான குறிப்புகள் உள்ளன. அதன்படி தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:06, 30 மார்ச் 2013 (UTC)


வணக்கம் கிருஷ்ண மூர்த்தி. கட்டுரையில் இடப்பக்கம் இடம் விட்டு நீங்கள் பத்தியைத் தொடங்கினால் அவை காட்சிக்குத் தெரியாமல் போகலாம். தாளில் எழுதுவது போன்றோ வலைப்பதிவில் எழுதுவது போன்றோ நீங்கள் விக்கியில் இடம் விட்டு எழுத முடியாது. நீங்கள் தொகுக்கும் பக்கத்தில் மேலுள்ள பட்டையில் குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டால் கட்டுரை பார்க்க அழகாக இருக்கும். மேலும் கட்டுரையில் அதிகமாக சமற்கிருத சொற்களையும் இணைக்க வெண்டாம். இது தமிழ் விக்கிப்பீடியா ஆகையால் முடிந்த அளவு நல்ல தமிழில் கட்டுரையைத் தொகுத்தல் நலம். ஏதேனும் உதவிக்கு எனது பேச்சுப்பக்கத்தில் கேட்கலாம். அல்லது இப்பக்கத்திலேயே கேட்டால் பிற விக்கிப்பீடியர்கள் உதவுவார்கள். ஏதேனும் ஒரு கட்டுரையில் தொகு பொத்தானை அழுத்தி அவை எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன என கவனித்து பின் தொடங்குங்கள் அது தங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:19, 31 மார்ச் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 02:09, 1 ஏப்ரல் 2013 (UTC)

வாழ்த்துக்கள் தொகு

மனுதரும சாத்திரம் கட்டுரையில் நீங்கள் தொகுத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். உங்களுக்குத் தெரிந்த சமற்கிருதம், இந்து சமயம், பண்பாடு போன்ற அனைத்து தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 4 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி தொகு

நான் இன்று ”ஈசா வாஸ்ய உபநிடதம்” என்ற முழு கட்டுரையை “என் மணல் தொட்டியில்” எழுதி சேமித்த பின்பு அதனை மீண்டும் திருப்பி பார்க்கும் போது பாதி கட்டுரை சேமிக்கப்பட்டு மீதி கட்டுரை காணாமல் போய் விட்டது.இந்த குறையை எவ்வாறு நீக்குவது குறித்து எனக்கு ஆலோசனை சொல்ல கேட்டுக்கொள்கிறேன்.நேற்று நான் எழுதிய ”முண்டக உபநிடதம்” என்ற கட்டுரை கூட இதே போன்று ஆகி எனது நேரம்,உழைப்பு வீண் போயிற்று.இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.

உங்கள் மணல்தொட்டி திருத்த வரலாறு. உங்கள் மணல்தொட்டியில் யார் யார் திருத்தினார்கள் என்பதை இப்பக்கத்தில் பார்க்கலாம். நீங்கள் தான் தெரியாமல் அழித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். மீளமைத்தல் என்ற வசதி உள்ளது.
சில நேரங்களில் இணையப் பிரச்சனையாலோ, புகுபதிகை பிரச்சனையாலோ தனித் தொகுப்புகள் அழிந்து போகவும் வாய்ப்பு உண்டு. உங்களுக்குத் தேவையானால் இவற்றை மீட்டுக் கொள்ளலாம். நன்றி! கேள்விகளை அடிக்கடி தொகுப்பவரின் பேச்சுப் பக்கத்தில் கேட்டால் உடனே பதில் கூறுவர். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:07, 10 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரைத் தலைப்பு மாற்ற தொகு

கட்டுரையைத் தலைப்பை மாற்ற மேலே ”வரலாற்றைக் காட்டவும்” இணைப்புக்கு அடுத்து “நகர்த்தவும்” என்றொரு இணைப்பு உள்ளது. அதனை சொடுக்கி மாற்றலாம். இல்லையெனில் எந்த கட்டுரை, எத்தலைப்புக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னால் நான் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:09, 26 ஏப்ரல் 2013 (UTC)

சௌராட்டிரர் தொகு

சௌராட்டிரர் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்துவதற்கு நன்றி. ஆனாலும் கட்டுரைகளுக்குத் தேவையில்லாதவற்றை சேர்க்க வேண்டாம். எடுத்துக்காட்டாக, சௌராட்டிர நபர் ஒருவரின் கட்டுரையில் ஏனைய சௌராட்டிரர்களின் பக்கங்களுக்கு இணைப்புத் தருவது வழக்கமல்ல. அந்த நபரைப் பற்றிய தகவல்களை மட்டுமே தாருங்கள்.--Kanags \உரையாடுக 23:06, 27 ஏப்ரல் 2013 (UTC)

சௌராட்டிர சமூக சிற்பிகள் என்ற தலைப்பில் உள்ள நபர்கள் பற்றித் தனிக் கட்டுரைகள் எழுதுங்கள். இது குறித்தான உரையாடல் பகுதியைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:37, 1 மே 2013 (UTC)Reply

வணக்கம். நீங்கள் உருவாக்கிய சுவாமி குருபரானந்தர் கட்டுரையில் நான் செய்திருக்கும் சிறுசிறு மாற்றங்களைச் சற்று பாருங்கள். கட்டுரைக்குள் சிறு தலைப்புகள் உருவாக்கும்விதம் அறிந்து கொள்வீர்கள். விக்கிப்பீடியா கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்; மேலும் நடுநிலையானவை. ஆதலால் நபர்களின் பெயருக்குப் பின் ’அவர்கள்’ சேர்க்க வேண்டாம். ’பூர்ணாலயம்’ இணையபக்கம் உங்கள் கட்டுரை தரும் அனைத்து விவரங்களுக்கும் சான்றுகளைத் தரவில்லை, அதுவும் முக்கியமாக அவர் வழங்கும் செய்திக்கு ஆதாரம் இல்லை. அதற்கான சான்று இல்லையெனில் அப்பகுதி நீக்கப்படலாம். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்.--Booradleyp (பேச்சு) 15:59, 7 மே 2013 (UTC)Reply

சான்றினை சுட்டியதற்கு நன்றி. கட்டுரையில் இணைத்துள்ளேன்.--Booradleyp (பேச்சு) 04:59, 8 மே 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
தங்களுடைய ரிக்வேத கால முனிவர்கள் கட்டுரையைக் கண்டேன். இந்து சமயக் கட்டுரைகளில் மிகவும் அரிய கட்டுரையாக அதனை கருதுகிறேன். தங்களுடைய பணி சிறக்கவும், இதுபோல அரிய கட்டுரைகளை தொடர்ந்து இயற்றவும் வாழ்த்துகள். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:41, 9 மே 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கம் வழங்கியமைக்கு நன்றி ஜெகதீஸ்வரன். பயனர் பேச்சு: கிருஷ்ணமூர்த்தி1952

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:34, 9 மே 2013 (UTC)Reply

பயனர் பக்கம் தொகு

தங்களைப் பற்றிய விவரங்களை பயனர் பக்கத்தில் தருமாறு வேண்டுகிறேன். தங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் உங்களுடனான நட்பினை எங்களால் மேலும் வளர்க்க இயலும்; உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவமுடியும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:14, 10 மே 2013 (UTC)Reply
பயனர் பக்க அறிமுகம் கண்டேன். நீங்கள் சௌராட்டிர சமுகத்தைச் சேர்ந்தவரா? இந்த மொழியைப் பேசுகிறீர்களா? ஆம் எனில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சௌராட்டிர விக்கிப்பீடியாவிலும் கட்டுரை எழுதி உதவலாம். அந்த விக்கிப்பீடியாவில் சௌராட்டிர எழுத்து, குஜராத்தி எழுத்து, தமிழ் எழுத்து, தேவநாகரி எழுத்து இவற்றில் ஏதாவது ஒன்றில் கட்டுரை எழுதலாம். ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள். உதவுகிறேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:15, 11 மே 2013 (UTC)Reply
பயனர் பக்கத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை தந்தமைக்கு மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி அவர்களே! தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து தாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 11 மே 2013 (UTC)Reply


ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் மொழியிலும் அடங்கியிருக்கிறது. மொழி என்பதை வெறும் எழுத்துகளும், சொற்களும் அல்ல. அதுவே அவர்களின் உணர்வின் வெளிப்பாடாகவும், பண்பாட்டு வேராகவும் உள்ளது. அந்த வகையில், சௌராட்டிர மொழியின் வலர்ச்சிக்கு விக்கிப்பீடியா உதவும். :)

விக்கிமீடியா நிறுவனம், அடைக்காப்பகம் என்ற இன்னொரு திட்டத்தைக் கொண்டுள்ளது. அதில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளன. அங்கே சௌராட்டிர விக்கிப்பீடியாவும் உள்ளது. சிலர் இணைந்து கட்டுரைகள் எழுதி வந்தால், விரைவில் தமிழ் விக்கிப்பீடியாவைப் போலவே, அதுவும் முதன்மை தளத்தில் வெளிவரும். அதற்கு தொடர்ச்சியான உழைப்பு தேவை. அங்கே தமிழ், குசராத்தி, தேவநாகரி, சௌராட்டிர எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுத முடியும். (சௌராட்டிர எழுத்துகளும் உள்ளன.) நான்கில் எந்த எழுத்தை விரும்பினாலும் பயன்படுத்தலாம். முதலில், இடைமுகச் செய்திகளை சௌராட்டிர மொழிக்கு மொழிபெயர்க்கவும். அடிப்படையான சொற்களுக்கு முன்னுரிமை தந்து மொழிபெயர்க்கவும். பின்னர், ஒரு மாநிலம் பற்றி நான்கு வரிக் கட்டுரை எழுதிவிட்டு, அதை நகலெடுத்து பிற மாநிலக் கட்டுரைகளையும் உருவாக்கலாம். தொடக்கத்தில், நூறு கட்டுரைகள் வந்த பின், பொறுமையாக, ஒவ்வொரு கட்டுரையும் பத்தியாக எழுதலாம். எந்தெந்த பக்கங்களை மொழிபெயர்க்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு என்னால் உதவ முடியும், அடுத்த வாரம், தேர்வு முடிந்த பின் சும்மா தான் இருப்பேன். மேலே உள்ள இணைப்பில் சென்று பாருங்கள். தங்கள் விருப்பத்தைப் பெற்ற பின் தொடர்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:10, 16 மே 2013 (UTC) தாங்கள் சௌராட்டிர விக்கிபீடியாவை சுட்டி காட்டியமைக்கு நன்றி தமிழ்க்குரிசில். அதில் சௌராட்டிர மொழி தொடர்பான எழுத்துகள் மற்றும் தேவையான இணைய தளங்கள் தெரிந்து கொண்டேன். இனி சௌராடடிர விக்கி பீடியாவில் எழுத முயற்சிக்கிறேன்.:)-சோ.பெ.கிருஷ்ணமூர்த்தி (பயனர் பேச்சு:krishnamoorthy1952]])Reply

சௌராட்டிர விக்கிப்பீடியா அறிவிப்புகளுக்கு பேஸ்புக்கில் ஒரு பக்கம் தொடங்கி உள்ளேன். சௌராட்டிர மொழி தொடர்பான செய்திகளைத் தந்தால் விக்கி கட்டுரைகளுடன் வெளியிடுவேன். விரைவில் மொழிபெயர்ப்பு பணியை தொடங்குங்கள். சௌராட்டிர மொழி எழுத்துக்கு இணையான தமிழ் எழுத்துகளைச் சுட்டினால் நான் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். பணி சிறக்க வாழ்த்துகள் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 16 மே 2013 (UTC)Reply

தொகுத்தல் மாற்றங்கள் தொகு

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தங்கள் கட்டுரைகளில் பிற பயனர்கள் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்கிறார்கள் எனக் கவனியுங்கள். நீங்கள் வோர்டு டாகுமெண்டில் தொகுத்து பின்பு பதிகிறீர்கள் என நினைக்கிறேன். அதுவேறு விக்கிப்பக்கங்கள் வேறு. சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்‎ என்ற பக்கத்தில் நான் விக்கிப்பீடியாவிற்கேற்ப மாற்றினாலும் நீங்கள் திரும்பத் திரும்ப தங்களின் எண்ணப்படியே தொகுத்து வருகிறீர்கள். பலமுறை தஙகளுக்குச் சொன்ன போதும் நீங்கள் கவனிப்பதே இல்லை. அக்கட்டுரையில் மத்தியப் பகுதியில் உள்ள கோத்திரங்களை நான் செய்வது போல வரிசைமுறைக்கு ஏற்ப மாற்றவும் இல்லை. அதை விடுத்து கட்டுரையில் தேவையற்ற குறியீடுகளை இட்டு வருகிறீர்கள். இது சற்று சிரமமாக உள்ளது. மாற்றங்களைக் கவனித்து விக்கிப்பீடியாவிற்கேற்ப தொகுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 01:27, 14 மே 2013 (UTC)Reply

வணக்கம் பார்வதிஸ்ரீ.எனது தவற்றை சுட்டிக் காட்டியதற்கு, இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் விக்கி பீடியாவிற்கு ஏற்ப தொகுக்கிறேன். தாங்கள் தொடர்ந்து எனது கட்டுரைகளில் உள்ள தவற்றை சுட்டிக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

வணக்கம் பார்வதிஸ்ரீ, “சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெய்ர்களும்” என்ற கட்டுரையில் விட்டுப்போன ”உதங்க கோத்திரம் மற்றும் அதன் குடும்பப் பெயர்கள்” இறுதியில் தற்போது சேர்த்திருக்கிறேன். தாங்கள் அதனை சரிபார்த்து தொகுக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன் கிருஷ்ணமூர்த்தி.--கிருஷ்ணமூர்த்தி1952 (பேச்சு)

வணக்கம் S_M_Ganesh, தாங்கள் ”சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்” என்ற கட்டுரையை தொகுத்து மேம்படுத்தியதற்கு நன்றி பல.--கிருஷ்ணமூர்த்தி1952 (பேச்சு)

படங்கள் இணைப்பது தொடர்பாக தொகு

 
எடுத்துக்காட்டு
 
விபரிப்பு

[[File:Map of Vedic India.png|thumb|350px|வலது| எடுத்துக்காட்டு]] [[File:Map of Vedic India.png|thumb|350px|இடது|விபரிப்பு]]

படம் பொதுமத்தில் அல்லது இந்த விக்கியில் தரவேற்றப்பட்டு இருக்க வேண்டும். தர வேற்ற, பார்க்க. --Natkeeran (பேச்சு) 00:12, 24 மே 2013 (UTC)Reply

வணக்கம் நற்கீரன். படங்கள் பதிவேற்ற தங்களின் படிமப் பயிற்சி எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. உங்கள் ஆலோசனைப்படி நேற்று எனது கட்டுரையில் ஐந்து படங்கள் இணைத்து விட்டேன். எனக்கு அடிப்படை கணிப்பொறி பயிற்சி இல்லாதபடியாலும், வயதின் காரணமாகவும் எனக்கு சொல்லப்படும் யோசனைகள் உடன் செயல்படுத்த இயலவில்லை. [பயனர்:krishnamoorthy1952]


மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:16, 2 சூன் 2013 (UTC)Reply

பதக்கம் வழங்கி பாரட்டியமைக்கு நன்றி ரவி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)


வாழ்த்துக்கள். படங்கள் தொடர்பான உங்கள் மின்னஞ்சல் எனது நினைவில் இருந்து விடுபட்டுப் போய் விட்டது. விரைவில் இணைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:25, 24 சூன் 2013 (UTC)Reply

நீங்கள் கேட்டுக் கொண்ட படங்கள் தொகு

நீங்கள் கேட்டுக் கொண்ட படங்கள் இந்த இணைப்பில் உள்ளன பயனர்:Krishnamoorthy1952/படங்கள். அப் பக்கத்தின் மேற் பகுதியில் உள்ளதை படியெடுத்து நீங்கள் விரும்பிய இடத்தில் ஒட்டினால் அங்கு இப் படங்கள் சேர்க்கப்படும். --Natkeeran (பேச்சு) 00:36, 25 சூன் 2013 (UTC)Reply

தங்களின் மேலான உதவிக்கு நன்றி நற்கீரன். --எஸ். பி. கிருஷ்ணமூர்தி (பேச்சு)

விளக்கம் தொகு

விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு என்று சற்று தனித்துவமான நடையும் முறையும் உண்டு. தமிழ் விக்கியை விட ஆங்கில விக்கியில் இது சற்று இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக முறைப்படி மேற்கோள்கள் சேர்ப்பது முக்கியம் ஆகும்.

நீங்கள் சேர்த்த நபரை அவர்கள் குறிப்பிடத்தக்கவரா என்று அறியமுடியவில்லை என்று கூறி நீக்கி உள்ளார்கள். இவர் முக்கியமான ஒரு நபரே என்று நிரூபிக்கும் வண்ணம் தரமான வலைத்தளங்கள், நூல்கள், இதழ்களில் இருந்து மேற்கோள்கள் பெற்று முறைப்படி சேர்த்தால் கட்டுரையை மீண்டும் சேர்க்க முடியும்.

தமிழ் விக்கியில் கூட உங்கள் கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும், நடையும் ஒழுங்கமைப்பும் மேம்பட வேண்டு. இதற்கு நான் உதவ முடியும். ஒரு குறிப்பிட்ட கட்டுரையை நீங்கள் சுட்டினால் அதை ஒழுங்குபடுத்தித் தர முடியும். தமிழ் விக்கியில் மேற்கோள்கள் எப்படி சேர்ப்பது என்பதை நீங்கள் அறிந்து ஆங்கில விக்கியில் பயன்படுத்த முடியும்.

விக்கி நன்கு பரிச்சியம் ஆனவுடன் நீங்கள் திறனாகப் பங்களிக்க முடியும். நானும் தொடங்கும் போது உங்களைப் போன்றே தொடங்கினே.

சௌராட்டிரர்கள் தொடர்பான உங்கள் கட்டுரைகள் மிகவும் ஆர்வம் தூண்டுபவையாக அமைக்கின்றன. அவற்றை சீர்படித்தினால் சிறந்த கட்டுரைகளாக அமையும். நன்றி.

--Natkeeran (பேச்சு) 02:32, 27 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:58, 2 சூலை 2013 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

 

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton (பேச்சு) 03:50, 2 செப்டம்பர் 2013 (UTC)

பதிப்புரிமை உள்ள படிமங்களை பதிவேற்ற முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton (பேச்சு) 04:26, 2 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் தொகு

காண்க: பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல்--இரவி (பேச்சு) 18:07, 5 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்! நீங்கள் வருந்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கட்டுரைகள் சிறப்புற வேண்டும், சக பங்களிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் எனும் கருத்துகளை மனதிற் கொண்டே இங்கு உரையாடல்கள் நடக்கும். இதனை நீங்கள் ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து தங்களின் சீரிய பங்களிப்பினைத் தாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 6 செப்டம்பர் 2013 (UTC)
தங்களின் கட்டுரை... இப்போது, தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் எனும் பெயரில் இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 6 செப்டம்பர் 2013 (UTC)


வணக்கம், செல்வசிவகுருநான். தங்கள் கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பேன்.

--பயனர்:krishnamoorthy1952 (பேச்சு)


இக்கட்டுரையின் உள்ளடக்கங்களை நீங்கள் நீக்கி உள்ளீர்கள்..இது விக்கிச் செயற்பாட்டுக்கு புறம்பானது. Vandalism எனக் கருதப்படும். உங்களது ஆக்கங்கள் அனைத்தும் விக்கிக்குப் பங்களித்தப் பிறகு அதனை நீக்க விக்கி சமூகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்களுக்கான உரிமையைத் துறந்துள்ளீர்கள் ! எந்த மனத்தாபத்தையும் இங்கு உரையாடித் தீர்த்துக் கொள்ளுங்கள். விக்கி சமூகம் விக்கிப் பயனர்களின் ஒருமித்த கருத்தை ஒட்டியே இயங்குகிறது. வலைப்பத்திவு என்பது தனிநபரின் உரிமையை இழக்காமல் அவரது விருப்பப்படி வடிவமைத்த பக்கங்களில் அவர்களுக்கு விருப்பமான மொழி நடையில் எழுதப்படுவது. விக்கிக்கொள்கைகள் உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனில் வலைப்பதிவு ஒன்றைத் துவங்கி உங்கள் கருத்துகளுடன் கூடிய கட்டுரைகளை இடலாம். வாழ்த்துகள் !--மணியன் (பேச்சு) 12:01, 6 செப்டம்பர் 2013 (UTC)


கிருஷ்ணமூர்த்தி, எது வேணாலும் உரையாடித்தீர்க்கலாம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை மற்றவர்கள் நீக்க வேண்டவில்லை. நீங்கள் ஏன் வேண்டுகிறீர்கள் என உரையாடுங்கள். தேவையாயின் நீக்கப்படலாம். ஏதும் தேவையெனில் கேளுங்கள். உதவத் தயாராக உள்ளோம். மேலும் அக்கட்டுரை நீக்க வேண்டுமெனில் நீக்கல் வார்ப்புரு இட்டு உரையாடல் பக்கத்தில் காரணம் கூறினால் நீக்கப்படும். அக்கட்டுரையில் இட்டுள்ளேன். தங்கள் சீரிய, சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குங்கள். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:56, 7 செப்டம்பர் 2013 (UTC)


வணக்கம் மணியன், வலைப்பதிவு துவக்குவது பற்றிய தங்களின் அரிய மேலான ஆலோசனனைக்கு நன்றி.

--பயனர்:krishnamoorthy1952 பயனர்பேச்சு:krishnamoorthy1952

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி, விக்கியில் தங்கள் சீரிய பங்களிப்பைத் தொடர்ந்து தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:18, 6 செப்டம்பர் 2013 (UTC)


வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களை வருந்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட நான், இப்போது மனம் வருந்துகிறேன்...ஆம்; உங்களின் இன்னொரு செயல், நிலைமையை மேலும் சிக்கல்படுத்துகிறது.

  • மணியன் இட்ட கருத்துகளில் அவர் எழுதாத ஒரு சொல்லை நீங்கள் புகுத்தியுள்ளீர்கள். இது மிகத் தவறான ஒரு நடவடிக்கை. விக்கியில் மட்டுமல்ல...இம்மாதிரியான செயலை எங்கும் எவரும் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
  • Vandalism என்பதற்குரிய தமிழ் அர்த்தத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னிடமுள்ள 'English - தமிழ்' அகராதியில் உள்ளபடிக்கு ... Vandalism என்றால் 'கலை அல்லது இலக்கியப் படைப்புகளை வேண்டுமென்றே அழித்தல்' என்பதே.
  • ஒரு கலையாக்கத்தை நீங்கள் தெரிந்தே அழித்ததினாலேயே Vandalism எனும் ஆங்கில வார்த்தையினை (ஆங்கில விக்கியில் குறிப்பிடப்படும் சொல்) மணியன் தனது கருத்தில் குறிப்பிட்டார்.
  • மணியன் ஆங்கிலத்தில் குறிப்பிட்ட சொல்லிற்கு அருகில் அடைப்புக் குறிக்குள் நீங்களாக ஒரு பொருத்தமற்ற தமிழ் சொல்லினை இடுதல் எவ்வகையில் நியாயம்?
  • எனது இரண்டு வருட கால விக்கி அனுபவத்தில்... மணியன் என்பவர் உயர்ந்த பண்புடைய, அனைவரையும் அணைத்துச் செல்லும் அனைத்துத்துறை நிபுணர். அவர் இம்மாதிரியான தமிழ் வார்த்தையினை பயன்படுத்த வாய்ப்பில்லை என உறுதியாகக் கருதியதால், இந்தப் பேச்சுப் பக்கத்தின் வரலாற்றினைப் புரட்டினேன். அப்போதுதான் அனைத்தும் புரிந்தது. மற்றவர் மீது அறிந்தே வீண்பழி போடுதல் முறையா?
  • தயவுசெய்து அவர் எழுதாத தமிழ் வார்த்தையினை இங்கு நீக்கி விடுங்கள்.
  • அவரின் பேச்சுப் பக்கத்தில் உங்களின் தவறான செயலுக்கு வருத்தம் தெரிவியுங்கள். அதுவரை உங்களின் பேச்சுப் பக்கத்திற்கு நான் வரப் போவதில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 7 செப்டம்பர் 2013 (UTC)
இது தான் நடந்ததா? , நான் சிந்தித்திருந்தும் எனக்கு அப்படி யோசனை தோன்றவில்லை, நான் முதலில் மனியனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். ஏனென்றால் நான் முதலில் மனியனைத் தவறாக எண்ணிவிட்டேன். மீண்டும் மான்னிக்கவும் மணியன் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:59, 8 செப்டம்பர் 2013 (UTC)
ஆம் , அந்த தமிழாக்கம் தான் கூகிளிலும் வந்தது.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:00, 8 செப்டம்பர் 2013 (UTC)


நான் நண்பர் கிருஷ்ணமூர்த்தி அறியாது தமது ஆக்கங்களை நீக்கிக் கொண்டார் என எண்ணியே இதனை விக்கிக் கொள்கைகளுக்குப் புறம்பானது எனச் சுட்டிக்காட்ட விரும்பினேன். ஆங்கில விக்கியில் பயன்படுத்தும் vandalism என்ற சொல்லை அதனாலேயே ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டேன். இருப்பினும் நண்பர் வேறுவிதத்தில் பொருள்கொண்டு மனம் புண்பட்டார் என அறிந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். en:Wikipedia: Vandalism எனத் தெளிவாகக் குறிப்பிட்டாதது எனது தவறுதான்.
நண்பர் செல்வகுருநாதன் எனது சார்பில் விளக்கமளித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி! அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் தலை வணங்குகிறேன்.
ஆதவன், எண்ணியதற்கே மன்னிப்பா :) இந்தச் சிறுவயதில் உங்களுக்கிருக்கும் பக்குவம் பாராட்டுக்குரியது. விடாது பழகிக்கொள்ளுங்கள் !! வாழ்த்துகள் !
--மணியன் (பேச்சு) 11:47, 8 செப்டம்பர் 2013 (UTC)
நான் அதை கிருஷ்ணமூர்த்திக்கு கூறியிருப்பேன். எனினும் கூறவில்லை ??!!, அதனால் தான் கூறினேன் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:34, 8 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியர்கள் பற்றிய மேம்பட்ட புரிதலும் நட்பும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

மற்ற கட்டுரைகளின் பக்கத்திற்கு உள்ளிணைப்பு தருவது குறித்து... தொகு

ஐயா, வணக்கம்! ஒரு கட்டுரையிலிருந்து மற்ற கட்டுரைகளின் பக்கத்திற்கு உள்ளிணைப்பு தரும்போது ஒருமுறை தந்தால் போதுமானது. உதாரணமாக ஒரு கட்டுரையில் பாண்டவர்கள் என வரும்போது முதல்முறை உள்ளிணைப்பு தந்தால் போதுமானது. அதே கட்டுரையில் ஒவ்வொரு முறையும் பாண்டவர்கள் எனும் பக்கத்திற்கு இணைப்பு தர வேண்டியதில்லை. இதன்மூலம் உங்களின் நேரத்தை பெருமளவு சேமிக்க இயலும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 17 நவம்பர் 2013 (UTC)Reply

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)--கிருஷ்ணமூர்த்தி 16:33, 17 நவம்பர் 2013 (UTC)Reply

தேவயானி... தொகு

தேவயானி கோபர்கடே எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளதால், உங்களின் விரிவாக்கத்தை இக்கட்டுரையில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:59, 22 திசம்பர் 2013 (UTC)Reply

நீங்கள் ஆரம்பித்த கட்டுரையின் பகுதிகளையும் ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:02, 22 திசம்பர் 2013 (UTC)Reply
தங்களின் ஆலோசனைப்படி செய்து விட்டேன். நன்றி... கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 19.15, 22 திசம்பர் 2013 (UTC)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தொகு

 

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 04:47, 25 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  விடாமுயற்சியாளர் பதக்கம்
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 28 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி! எஸ். பி.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:30, 29 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம் உங்கள் பங்களிப்புக்கள் என்னை வியக்க வைக்கின்றன.-- 

வெளி இணைப்புகள், மேற்கோள் சுட்டுதல் தொகு

ஞான யோகம், உத்தவ கீதை, பிரம்ம ஞானம் அடைய வழிகள், பிரம்ம ஞானம் ஆகிய கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு பிரதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுரையினை வாசிப்பவருக்கு என்ன வேறுபாட்டினை ஏற்படுத்த முடியும்? உசாத்துணையும், வெளியிணைப்புக்களும் கட்டுரைக்கு பொருத்தமற்றுள்ளனவே. விவேகம், பிரம்ம ஞானம் ஆகிய கட்டுரைகளை பொதுவாக எழுதி, சமயப் பார்வையையும் எழுதுங்கள். இல்லாவிட்டால் கட்டுரைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டு அழிக்கப்படலாம். இவற்றைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். மேலும், வலைத்தளங்களிலிருந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை பிரதி செய்யாதீர்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:52, 15 சனவரி 2014 (UTC)Reply

திரைப்படங்கள் தொகு

திரைப்படங்கள் அனைத்துக்கும் திரைப்படம் என்ற பின்னொட்டு தேவைப்படாது. அதே பெயரில் வேறு பொருளுடைய கட்டுரை தொடங்கலாம் என அறிந்தால் மட்டுமே பின்னொட்டுத் தேவை.--Kanags \உரையாடுக 10:26, 19 சனவரி 2014 (UTC)Reply

புரிந்து கொண்டேன். நன்றி கனகரத்தினம் சிறீதரன். எஸ். பி.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:30, 21 சனவரி 2014(UTC)
சாகர் தீவு எனும் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வரைபடம் தவறாக உள்ளது என நினைக்கிறேன். எஸ். பி.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:30, 21 சனவரி 2014(UTC)

தலைப்பு மாற்றம் தொகு

பொருத்தமில்லாமல் தலைப்புக்களை நகர்த்த வேண்டாம். நகர்த்துவதாயின் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேற்கோள் வெறுமனே இணைக்க முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntonTalk 11:33, 15 பெப்ரவரி 2014 (UTC)

ஜார்வா தொகு

ஜார்வா கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கியிருக்கிறீகள். அக் கட்டுரை ஒன்றிணைக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை நிர்வாகிகள் யாராவது செய்வார்கள். அதற்கு முன் உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரை சிறிய அளவில் இருந்தாலும் நீக்கப்படும் போது அதில் ஏற்கனவே பங்களித்தவர்களின் பணியின் வரலாறு காக்கப்படாமல் போய் விடும். இனி இவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:35, 8 மார்ச் 2014 (UTC)

--இனி அவ்வாறே செய்கிறேன், நன்றி.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 00:35, 9 மார்ச் 2014 (UTC)

நன்றி...! தொகு

வணக்கம்! தங்களின் கட்டுரைகளோடு, மற்றவர்களின் கட்டுரைகளிலும் உரிய திருத்தங்களை அண்மைக்காலமாக நீங்கள் செய்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! தொடரட்டும் உங்களின் பணி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:20, 13 மார்ச் 2014 (UTC)

வெளி இணைப்புகளும் பகுப்புகளும் தொகு

ஜோஷி மடம் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். குறிப்பாக வெளி இணைப்புகள் எழுதப்படும் முறை பற்றிக் கவனியுங்கள். பாடல் பெற்ற தலங்கள் என்னும் போது, பொதுவாக சைவசமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலங்களையே குறிக்கும். ஜோஷி மடம் கட்டுரையில் அதுபற்றி எத்தகவலும் இல்லை. இந்து சமயம், கோயில்கள் போன்ற தாய்ப்பகுப்புகளைக் கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். அவற்றின் உப பகுப்புகளையே சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:37, 22 மார்ச் 2014 (UTC)

--நன்றி கனக்ஸ். இனி தங்களின் ஆலோசனையின்படி நடந்து கொள்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 4.12, 22 மார்ச் 2014 (UTC)

கட்டுரை சிறப்பாக உள்ளது. ஒருசில எழுத்துப்பிழைகளை சரிசெய்துள்ளேன். ஒரு பக்கத்தைச் சுட்டும் இணைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தன. (எ.கா) ஆதிசங்கரர், பத்ரிநாத் கோயில் போன்றவை. அவற்றினையும் நீக்கியுள்ளேன். வடக்கிலுள்ள மேலும் தலங்கள் பற்றி எழுதுங்கள். உத்தராகண்ட் போகும் எண்ணத்துடனேயே இருக்கிறேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 14:04, 23 மார்ச் 2014 (UTC)

படிம பதிப்புரிமை தொகு

சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிமங்களின் பதிப்புரிமை என்ன? இவை நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. முறையான பதிப்புரிமை இல்லாவிட்டால் இவை நீக்கப்படும். --AntonTalk 08:05, 9 ஏப்ரல் 2014 (UTC)

--கட்டுரையில் உள்ள படிமங்கள், இப்பள்ளியின் நூற்றாண்டு மலரிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. மேலும் பள்ளியின் நிர்வாகம் நூற்றாண்டு மலரின் பதிப்புரிமை பதிவு செய்யப்படாததால் படிமங்கள் என்னால் கையாளப்பட்டுள்ளது. நான் செய்தது தவறு என நினைத்தால் படிமங்களை கட்டுரையிலிருந்து நீக்கி விடுங்கள். மறுப்பு இல்லை. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18.05, 09 ஏப்ரல் 2014 (UTC)

--வணக்கம் அண்டன். இக்கட்டுரையில் உள்ள பல படிமங்களை நீக்கியதன் மூலம் உங்கள் மனம் நிறைவடைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)16.04, 10 ஏப்ரல் 2014 (UTC)

மிக தேவைப்பட்டால் மாத்திரம் நியாயமான பயன்பாட்டின் கீழ் ஒரு படிமத்தை பயன்படுத்த முடியும். தற்போது அவ்வாறே ஓர் படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தை எவ்வுரிமத்தின் கீழ் பயன்படுத்துவீர்கள். பரிப்புரிமை மீறல் பற்றி 3 முறைகள் உங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீங்களே மறுப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளீர்கள். அவ்வாறு இருக்க மனம் நிறைவடைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி என்ற கேலிப்பேச்சு எதற்கு? நான் இங்கு துப்புரவுப் பணியை விக்கி நியமங்களுக்கேற்ப செய்கிறேன். இல்லையென்றால் நீங்கள் எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து கிண்டல் வேண்டாம். அல்லது குறைந்தது துப்புரவுப் பணியைச் செய்யலாம். இவ்வாறான கிண்டலை என்னுடன் தவிர்த்துவிடுமாறு வலியுறுத்துகிறேன். --AntonTalk 11:19, 10 ஏப்ரல் 2014 (UTC)
"படிம பதிப்புரிமை" தொடர்பான விதிகளை நாம் சரியே பின்பற்றுவது சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க அவசியம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அவர்களைத் தொடர்பு கொண்டு, அனுமதி பெற முடிந்தால் அவற்றை நிச்சியம் மீண்டும் சேர்க்க14லா. நன்றி. --Natkeeran (பேச்சு) 13:40, 10 ஏப்ரல் 20 (UTC)

--வணக்கம் அண்டன். இதில் பதிப்புரிமை மீறல் எதுவும் இல்லை. மேற்படி பள்ளியின் நூற்றாண்டு மலர் பதிப்புரிமையோ அல்லது காப்புரிமையோ பதிவு செய்யப்படாத ஒன்று என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தும், நீங்களே பதிப்புரிமை உள்ள ஆக்கம் என்று நினைத்து படிமங்களை நீக்கியுள்ளீர்கள். ஏற்கனவே நீங்கள் மூன்று முறை பதிப்புரிமை உள்ள ஆக்கங்கள் கட்டுரையில் இணைக்க வேண்டாம் என்று கூறிய பின்பு எந்த பதிப்புரிமை உள்ள் படிமங்களையும் கட்டுரையில் இணைப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் உள்ள படிமங்கள் பதிப்புரிமை & காப்புரிமை பெற்றவை அல்ல. நான் ஏற்கனவே இவைகள் பதிப்புரிமை அற்ற படிமங்கள் என்று எடுத்துரைத்தும், படிமங்களை கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளீர்கள். எனவே நீங்களே எதனையும் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள்.

மேலும் நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே நான் சில வாரங்களாக துப்புரவு பணி தொடங்கிய பின்பு தான், இப்படிமங்கள் ஒராண்டு கழித்து இக்கட்டுரையிலிருந்து நேற்று நீக்கப்ப்பட்டுள்ளது. உங்கள் செயல் எனது துப்புரவு பணிககு கிடைத்த ஒரு நல்ல பரிசாக கருதுகிறேன். வாழ்க வளமுடன். ---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21.04, 10 ஏப்ரல் 2014 (UTC)


வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. காப்புரிமைச் சட்டத்தின் படி காப்புரிமை குறிப்பிடப்படாவிட்டால், அந்த உரிமை ஆக்கியவர், வெளியிட்டவருக்கே சேரும். விக்கியில் தெளிவாக காப்புரிமை அற்ற படங்களையே சேர்க்கலாம். இவை "பதிப்புரிமை அற்ற படிமங்கள்" என்று நீங்கள் கருதினால், அதற்கான எழுத்துமூலமான ஆதாரத்தை அவர்களிடம் இருந்து பெறவேண்டும். அப்படிப் பெற்றால், மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் இராது.

--Natkeeran (பேச்சு) 16:07, 10 ஏப்ரல் 2014 (UTC)

:The copyright in a work of authorship immediately becomes the property of the author who created it at the moment it is put into fixed form. No one but the author can claim copyright to the work, unless the author grants rights to others in a written agreement (such as to the author's publisher or record company). Usually, you can tell who the author of a work is -- the person who created it. But sometimes, it is not quite that easy." [1]--Natkeeran (பேச்சு) 16:09, 10 ஏப்ரல் 2014 (UTC)
நீங்களா நூற்றாண்டு மலரைத் தயாரித்தீர்கள்? உங்களிடம் பதிப்புரிமம் உள்ளதா? அங்குள்ள நபர்களின் படங்களுக்கு பதிப்புரிமங்களுக்கு உட்பட்டா மீள் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன? கட்டுரை கட்டாயம் இப்படிமங்களைக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா? இவை பதிப்புரிமம் கொண்டவை அற்றவை என்றால் ஏன் இங்கு பதிவேற்றுகிறீர்கள்? பொதுவில் பதிவேற்றுங்கள். அங்கு என் கருத்துக்களை இடுகிறேன். நியாயமான பயன்பாட்டின் பயன்படுத்துவதென்றால், எதற்குப் பல படிமங்கள்? மேலும், இது பற்றிய பல விடயங்களுக்கு இவற்றைப் பாருங்கள்: en:Wikipedia:File copyright tags, en:Wikipedia:Image use policy. இன்னும் நுணுக்கமான கொள்கைளை உள்ளன. தேவையென்றால் குறிப்பிடுங்கள். தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்: ஒரு விடயம் தொடர்பாக உரையாடுவதாயின் அவ்விடயம் தொடர்பாக மட்டும் உரையாடுங்கள். வாழ்க வளமுடன் என்றது எதற்கு? வஞ்சப் புகழ்ச்சியா? தனிநபர்சார் உரையாடலைத் தவிருங்கள். விடயம் தொடர்பாக மட்டும் உரையாடுங்கள். --AntonTalk 16:31, 10 ஏப்ரல் 2014 (UTC)
எனக்கு துப்பரவு பணி செய்ய நீங்கள் ஆலோசனை கூறத் தேவையில்லை. அது எனது விருப்பம்---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 22.04, 10 ஏப்ரல் 2014 (UTC)
நல்லது. என் துப்பரவு பணியில் இடையூறு செய்யவும் வேண்டாம். --AntonTalk 16:40, 10 ஏப்ரல் 2014 (UTC)

பேச்சுப் பக்க உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம் தொகு

வணக்கங்க, பேச்சுப் பக்க உரையாடல்கள் ஒரு வரலாற்று ஆவணமாக கருதப்படும் என்பதால் அவற்றை நீக்குவது வழமை இல்லை. உங்கள் பயனர் பக்க உள்ளடக்கத்தை நீக்கும் உரிமை மட்டுமே உங்களுக்கு உண்டு. நன்றி.--இரவி (பேச்சு) 09:46, 14 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம்! இக்கட்டுரையின் வெளியிணைப்புகள் பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். இதுபோன்று அமைத்தால், சிறப்பாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:31, 28 ஏப்ரல் 2014 (UTC)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி மா. செல்வசிவகுருநான்.-- பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 17:21, 28 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு தொகு

பேச்சு:ராஜாத்தி அம்மாள் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 13:22, 6 மே 2014 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு... தொகு

பயனர்:Dhakshnamohan என்பது பயனர் பக்கம்தானே?! விசமத் தொகுப்பாக இல்லாதபட்சத்தில் எதற்காக அப்பக்கத்தை நீக்கவேண்டும்? சரியாக கவனியாது நீக்கல் வார்ப்புரு இட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 8 மே 2014 (UTC)Reply

வேண்டுகோள்...! தொகு

வணக்கம்! இந்தியத் தேர்தல் குறித்த உங்களின் இற்றைகள் நன்று! கீழ்க்காணும் கட்டுரைகளில் அட்டவணைகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. முடிவுகள் வெளியாகும்போதும், அதற்குப் பிறகும்... உங்களுக்கு ஆர்வமும், நேரமும் இருப்பின்... இற்றை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:40, 15 மே 2014 (UTC)Reply

பொருத்தமற்ற மேற்கோள்களும் வெளியிணைப்புகளும் நீக்கம் தொகு

வணக்கம்! விசிறி சாமியார் (நூல்) என்னும் பக்கத்தில் தாங்கள் சுட்டியிருந்த மேற்கோள்கள் அக்கட்டுரைக்கானவை அல்ல; எனவே அவை நீக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பாலகுமாரன் விசிறிசாமியாரைப் பற்றி எழுதிய கட்டுரை என்பதால் அது வெளியிணைப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழங்கியிருந்த வெளியிணைப்புகள் இரண்டும் அந்நூலுக்கான விமர்சனமோ நூலுக்குத் தொடர்புடையனவோ அல்ல; அவை விசிறி சாமியாரைப் பற்றியவை. எனவே அவை நீக்கப்பட்டுப்பட்டு இருக்கின்றன. தாங்கள் விரும்பினால் யோகி ராம்சுரத் குமார் என்னும் பக்கத்தை உருவாக்கி அதில் அந்த இணைப்புகளை வழங்கினால் பொருத்தமாக இருக்கும். மேலும் பொருத்தமற்ற மேற்கோள்களையும் வெளியிணைப்புகளையும் வழங்க வேண்டா எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --பொன்னிலவன் (பேச்சு) 14:28, 15 மே 2014 (UTC)Reply

உதவி... தொகு

பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2014 இங்குள்ள பெயர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 16 மே 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள் தொகு

 

வணக்கம் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:28, 17 மே 2014 (UTC)Reply

செய்தி தொகு

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி! உங்களுக்கு இங்கு செய்தி உள்ளது. பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 18:33, 18 மே 2014 (UTC)Reply

வேண்டுகோள்... தொகு

வணக்கம்! முடிந்தால் en:Prime Minister's Office (India) எனும் கட்டுரையினை தமிழில் தாருங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:31, 29 மே 2014 (UTC)Reply

 Y ஆயிற்று இந்தியப் பிரதமரின் அலுவலகம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 30 மே 2014 (UTC)Reply

நீக்கல் தொகு

எளிய மகாபாரதம் கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 13:20, 4 சூன் 2014 (UTC)Reply

--இந்த கட்டுரையை விக்கியாக்க நடையில் மாற்றி எழுத பத்து நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். அது வரை இக் கட்டுரையை நீக்க வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி 1952 (பேச்சு) 16:00, 4 சூன் 2014 (UTC

இது விக்கிக்கு உகந்த கட்டுரையல்ல. கதைகள் எல்லாம் விக்கியில் எழுத முடியாது.--Kanags \உரையாடுக 22:00, 4 சூன் 2014 (UTC)Reply

16.06.2014 அன்று நீங்கள் எழுதியுள்ள லவன் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. பார்க்க இலவன் (Lava (Ramayana)) முடிந்தால் நீக்கி விடவும். உங்கள் மேலான கருத்தை வரவேற்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:29, 17 சூன் 2014 (UTC)Reply

சந்தேகம் தொகு

அஷ்ட வக்கிரன் கட்டுரை மகாபாரத கதை மாந்தர்கள் பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது; கட்டுரையினுள் வரும் ஜனகர் என்ற பெயர் இராமாயணக் கதை மாந்தர் கட்டுரையுடன் உள்ளிணைப்பு செய்யப்பட்டுள்ளது. இரு இதிகாசங்களின் கதாபாத்திரங்களுக்கிடையே இணைப்புள்ளதா, இரண்டும் ஒரே காலத்தியவையா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. தெளிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:01, 13 சூன் 2014 (UTC)Reply

--ஜனகர், அகத்தியர், விசுவாமித்திரர் போன்ற பெயர்கள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல இடத்தில் வருகிறது. இப்பெயர்கள் மாபெரும் ஞானிகளை குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். புராண இதிகாசங்களில் வரும் கதைகளுக்கு காலம் கணிக்க இயலாது. நன்றி.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21.41:01, 13 சூன் 2014 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

பேச்சு:பதினெண் புராணங்கள் (நூல்) பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:37, 15 சூன் 2014 (UTC)Reply

நீக்கல் தொகு

சூலை 2014 இல் நான் செய்திருந்த தொகுப்புகளை எதற்காக நீக்கினீர்கள்? --Kanags \உரையாடுக 10:17, 22 சூன் 2014 (UTC)Reply


சூலை 2014 தொகுப்புகள் நான் முதலில் தொடங்கியதால் நீக்கினேன். மேலும் அதில் சூன் 2014 தொடர்பான விஷயங்கள் இருந்தது. --கிருஷ்ணமூர்த்தி \உரையாடுக 10:17, 22 சூன் 2014 (UTC)Reply
User Contributions  : பயனர் Krishnamoorthy1952

• 15:32, 23 June 2014 (diff | hist) . . (+38)‎ . . சத்தியவான் சாவித்திரி கதை ‎ (current) கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் அக்கட்டுரை தொடர்பான விவரம் New pages-புதியன பகுதியில் காணப்படவில்லை. இதற்கான காரணம் அறியலாமா?. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) -- 22:17, 23 சூன் 2014 (UTC)Reply

சத்தியவான் சாவித்திரி கதை என்ற புதிய தலைப்பிற்கு அக்கட்டுரையை நகர்த்தியுள்ளேன், பேச்சுப்பக்கத்தில் குறிப்படவில்லை, மன்னிக்கவும். உங்களுடைய தொகுப்புகள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:59, 23 சூன் 2014 (UTC)Reply
வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி, நான் எழுதிய சத்தியவான் சாவித்திரி கட்டுரையை மீண்டும், விக்கிபீடியாவின் முகப்பு பக்கத்தில் புதியன பகுதியிலும், எனது Watch List-இலும் சேர்க்க கேட்டுக் கொள்கிறேன். --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 17:20, 24 சூன் 2014 (UTC)

நகர்த்தல் தொகு

பக்கங்களை நகர்த்த முன் உரையாடவும். --AntonTalk 16:59, 7 சூலை 2014 (UTC)Reply

கிருஷ்ணமூர்த்தி, இக்கட்டுரை பயனர் ஒருவர் தன்னைப் பற்றி எழுதியது. அது பயனர் பக்கத்தில் இருப்பதே சரியானது.--Kanags \உரையாடுக 09:50, 8 சூலை 2014 (UTC)Reply

--உங்கள் கருத்தை ஏற்கிறேன். --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:20, 8 சூலை 2014 (UTC)

வேறு பயனர் பக்கங்களில் தேவையில்லாமல் எழுதுவதைத் தவிர்க்கவும். விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கான பகுப்புகள் பயனர் பக்கங்களில் சேர்ப்பதில்லை.--Kanags \உரையாடுக 21:00, 10 சூலை 2014 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

பார்க்கவும்:பேச்சு:மூத்தகுடி மக்கள். --Booradleyp1 (பேச்சு) 05:08, 8 சூலை 2014 (UTC)Reply

வணக்கம். மடங்கள் என்ற இணைப்பில் தற்போது இடப்பட்டுள்ள ஆதீனங்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவை அல்ல. ஆகவே, அதனை அன்புகூர்ந்து நீக்குவது பற்றி யோசிக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 15:46, 7 ஆகத்து 2014 (UTC)

--நீக்கி விட்டேன். நன்றி. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 1:20, 8 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். விவரம் அறிந்தேன். நன்றி. சங்கர மடம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சங்கரமடம் கும்பகோணம் மடத்துத் தெருவில் அரசு கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ளது. அதனைச் சேர்ப்பது குறித்து கருதிப்பார்க்கும்படி வேண்டுகிறேன். இன்னும் சில மடங்கள் உள்ளன. நேரில் பார்த்து உறுதி செய்தபின் அவை பற்றி எழுதுவேன். தங்களின் அன்பிற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 08:06, 8 ஆகத்து 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல் தொகு

வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கிருஷ்ணமூர்த்தி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)Reply

வணக்கங்க. ஒரு சின்ன நினைவூட்டல் :)--இரவி (பேச்சு) 07:34, 2 பெப்ரவரி 2015 (UTC)
மீண்டும் ஒரு நினைவூட்டல் :)--இரவி (பேச்சு) 18:52, 23 ஆகத்து 2015 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

பேச்சு:விருப்ப ஓய்வூதியம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 04:55, 10 ஆகத்து 2014 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நாள்தோறும் தங்களின் பங்களிப்பு இருக்கிறது! இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 8 அக்டோபர் 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:25, 8 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 10:29, 12 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 03:19, 13 அக்டோபர் 2014 (UTC)Reply

பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் தொகு

பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டாம். பதிப்புரிமை மீறல் பற்றி தங்களுக்கு பலமுறை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்ந்தால் தாங்கள் தடை செய்யப்படலாம். மேலும், மேற்கோள் சுட்டும்போது பொதுவாக இணையத்தளத்திற்கு இணைக்காதது உள்ளடக்கத்திற்கு இணைக்கவும். நம்பகத்தன்மையற்ற இணைப்புக்களை இணைக்கவும் வேண்டாம். நன்றி. --AntonTalk 04:39, 13 அக்டோபர் 2014 (UTC)Reply

தடை தொகு

 
நீங்கள் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை இணைத்ததால் ஒரு வாரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் நீண்ட தடைக்கு உட்படலாம். தடை நீங்கியதும், பயனுள்ள பங்களிப்புக்களை வழங்க அழைக்கப்படுகிறீர்கள்.

--AntonTalk 23:48, 21 அக்டோபர் 2014 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

நீங்கள் கட்டுரைகளில் பல பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடங்கங்களைச் சேர்த்துள்ளீர்கள் அல்லது சிறு மாற்றத்துடன் நகல் எடுத்துள்ளீர்கள். எ.கா: அரக்கு மாளிகை. இவை விக்கிப்பீடியா கொள்கைக்குப் புறப்பானவை. காண்க: விக்கிப்பீடியா:பதிப்புரிமை, விக்கிப்பீடியா:பொழிப்புரை (paraphrasing). எனவே, ஏற்கெனவே நீங்கள் சேர்த்த பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடங்கங்களை நீக்கி உதவி செய்யுங்கள் அல்லது அவ்வுள்ளடக்கங்கள்/கட்டுரைகள் நீக்கப்படலாம். நன்றி. --AntonTalk 09:52, 29 அக்டோபர் 2014 (UTC)Reply

திருத்தம் தேவை தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க சிறப்புப்படம்/சிறப்பு படத்தில் ஆண்டு 1944 என்று குறிப்பதற்கு பதிலாக 1994 என உள்ளது.

1994 இல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசின் விடுவிப்பு எனப்படுகிறது. பாரிசுக்குள் நுழையும் விடுதலை பிரெஞ்சுப் படைகளை பாரிசு மக்கள் ஆரவாரித்து வரவேற்பதைக் காணலாம். -பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 03:19, 29 நவம்பர் 2014 (UTC)Reply

 Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:20, 29 நவம்பர் 2014 (UTC)Reply

வார்ப்புரு நீக்கல் தொகு

அருட்செல்வப்பேரரசன் கட்டுரையில் இடப்பட்டிருந்த வார்ப்புருக்கள் இரண்டும் கட்டுரையில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்படாமல் நீக்கப்பட்டுள்ளது. கட்டுரை குறிப்பிடத்தக்கது என நிறுவாமலும், போதிய உள்ளடக்கம் இல்லாமலும் இருந்தால் அக்கட்டுரை நீக்கப்படும். --AntonTalk 17:06, 9 திசம்பர் 2014 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

பேச்சு:டேவிட் கொரேஷ் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 14:29, 14 திசம்பர் 2014 (UTC)Reply

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் இந்த பக்கத்திற்கு சரியான மேற்கோள் கொடுத்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 13:33, 27 சூன் 2015 (UTC)Reply

மன்னராட்சி அரசு தொகு

இந்திய மன்னராட்சி அரசுகள் என்ற தலைப்பில் வேறொரு கட்டுரை இருப்பதால் நீங்கள் எழுதிய கட்டுரையை இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 20:57, 20 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:23, 30 திசம்பர் 2014 (UTC)Reply

அடுத்த குற்றால வருகை தொகு

அடுத்தமுறை குற்றால வருகையின் போது கூறவும் இன்னும் சில பழமையான இடங்களைச் சுட்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:37, 2 சனவரி 2015 (UTC)Reply

மணல்தொட்டி தொகு

மணல்தொட்டி அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மணல்தொட்டியைப் பயன்படுத்தும் போதோ அல்லது அதனைச் சுத்தமாக்கும் போது மணல்தொட்டியின் மேலுள்ள அறிவிப்பை அழிக்காதீர்கள். அவ்வறிவிப்பு புதிய பயனர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். மணல்தொட்டியை முற்றாக அழித்துப் பயன்படுத்த வேண்டுமென்றால் உங்கள் சொந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:14, 22 சனவரி 2015 (UTC)Reply

பாராட்டு தொகு

அதியமான் நெடுமான் அஞ்சி கட்டுரையில் யானை குளிக்கும் மிகப் பொருத்தமான ஆவணப்படம் இணைத்தமையைப் பாராட்டி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:15, 10 பெப்ரவரி 2015 (UTC)

நன்றி-- பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 22:15, 17 பெப்ரவரி 2015 (UTC)

பயனர் பெயரில் கட்டுரைகள் தொகு

வணக்கம், பயனர் பெயர்களில் கட்டுரைகள் இருக்க முடியாது. சில புதிய பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்தோ அறியாமலோ தமது பயனர் பக்கத்தில் அல்லாமல், தமது பெயர்களிலேயே கட்டுரைகளை உருவாக்கி விடுகிறார்கள். அக்கட்டுரைகளை இனம் காணும் போது அவற்றை அவர்களின் பயனர் பெயர்வெளிக்கு வழிமாற்ற வேண்டும். கட்டுரைத் தலைப்பில் நீக்கல் வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:17, 16 பெப்ரவரி 2015 (UTC)

---பி. ராமராஜ் என்ற கட்டுரை தடுப்பணை என்ற கட்டுரையுடன் இணைக்கப்பட்டது.--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:37, 24 மார்ச் 2015 (UTC)

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் கட்டுரை தொகு

வணக்கம் நண்பரே, முனியாண்டி கோயில் என்று தாங்கள் தொடங்கிய கட்டுரையை மதுரை முனியாண்டி விலாஸ் கட்டுரையுடன் இணைத்துள்ளேன். அக்கட்டுரையில் முனியாண்டி விலாஸ் தொடங்கப்பட்டமையும், அவர்கள் நடத்தும் திருவிழாவுமே பிரதானமாக இருந்தது. இவ்விணைப்பு தங்களது கவனத்திற்கு வந்ததா என்று தெரியவில்லை. எனவே இங்கு பதிக்கிறேன். தாங்கள் அக்கோவிலைப் பற்றி வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் என்ற தலைப்பில் எழுதுங்கள். அதில் கோவிலின் இடம், மூலவர், பிரகாரத் தெய்வங்கள், கோயிலின் வரலாறு, பூசை முறைகள், விழாக்கள் போன்ற தகவல்களை உள்ளிடுங்கள். உடன் முனியாண்டி விலாஸ் பற்றியும் சிறு குறிப்பு இடலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:04, 27 மார்ச் 2015 (UTC)

இந்து சமயம், தொன்மவியல் பகுப்பு இணைத்தல் தொகு

இந்து சமயம் பகுப்பானது ஒரு தாய்ப் பகுப்பாகும். ஒரு கட்டுரை இந்து சமயத்தில் இருக்கும் எந்த துணைப் பகுப்பினையும் சாராது இருக்கும் பொழுது மட்டுமே இந்து சமயம் என்ற பகுப்பினை இணையுங்கள். மற்ற படி இந்து சமயம் என்ற பகுப்பினை அனைத்துக் கட்டுரைகளிலும் இணைக்க வேண்டியதில்லை. அடுத்து இந்து தொன்மவியல் என்ற பகுப்பு புராணங்களையும், புராணக் கதை சார்ந்தவைகளையும் குறிப்பிடுவதாகும். உதாரணமாக காமதேனு என்பது இந்து புராணங்களில் வருகின்ற உயிரினம். இதற்கு இந்து தொன்மவியல் உயிரினங்கள் என்ற பகுப்பினை இணைக்கலாம். மற்றபடி அனைத்து இந்து சமயம் சார்ந்த கட்டுகளிலும் இணைப்பது சரியானது அல்ல. பகுப்புகளை இணைப்பதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:25, 29 மார்ச் 2015 (UTC)

இதனை கவனிக்க வேண்டுகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:14, 10 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி-- பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 20:15, 10 ஏப்ரல் 2015 (UTC)

பதக்கம் தொகு

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தாங்கள் விக்கியின் பல்துறைக் கட்டுரைகளையும் மேம்படுத்தி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. களைப்படையாமல் தங்களுடையப் பங்களிப்பினை தொடருங்கள் நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:07, 12 ஏப்ரல் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி-- பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 13.48, 12 ஏப்ரல் 2015 (UTC)

எனது பாராட்டுகளும் உரித்தாகுகின்றன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:45, 12 ஏப்ரல் 2015 (UTC)

வாழ்த்துக்கள்!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:41, 13 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help தொகு

Hello எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 7 மே 2015 (UTC)Reply

--தானியங்கி வரவேற்பை வரவேற்கிறேன். எனது வாக்கு தானியங்கி வரவேற்புக்கே-பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 7 மே 2015

அகரமுதலி தொகு

அகரமுதலிகள் பட்டியலில் உள்ள மேலதிக தகவல்களை தமிழ் அகராதிகளின் பட்டியல் கட்டுரைக்கு மாற்றினால் உதவியாக இருக்கும். பின்னர் இரண்டையும் இணைத்து விடலாம், அல்லது வழிமாற்று இடலாம். நன்றி.--Kanags \உரையாடுக


இந்து புனிதநூல்கள் தொகு

இந்து புனிதநூலகள் என்ற வார்ப்புருவில் வேதாந்தங்கள் என்று உள்ளதை வேதாங்கங்கள் என தலைப்பிட வேண்டும். அதில் சீக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என பகுதிகள் கொண்டிருப்பது சரியானது என நினைக்கிறேன்.

அத்துடன் உப வேதங்கள் என புதிய தலைப்பில், ஆயுர் வேதம், அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், காந்தர்வ வேதம் என பகுதிகள் கொண்டிருப்பது சரியானது என நினைக்கிறேன். நன்றி.--பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 20 சூன் 2015

திருக்கோகர்ணத்தில் உள்ளது கோகர்ணேஸ்வரர் கோயில், திருக்கோகர்ணம் வேறு, கோயில் வேறு தொகு

வணக்கம். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி கட்டுரையில் திருக்கோகர்ணம் என்ற பெயருக்கு முன்பாக திருக்கோகர்ணம் என்றவாறு கோகர்னேஸ்வரர் கோயிலைக் குறிக்கும் வகையில் இணைப்பு தரப்பட்டுள்ளது. கோகர்ணேஸ்வரர் கோயில் என்பது புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருக்கோகர்ணம் என்ற பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒரு கோயிலாகும். இதே திருக்கோர்ணம் பகுதியில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோகர்ணேஸ்வரர் கோயில் என்ற பெயரை நீக்குவது பற்றி கருதிப்பார்க்கவேண்டுகிறேன். அவ்வாறே இருந்தால் கோகர்னேஸ்வரர் கோயில் என்பதும் திருக்கோகர்ணம் என்பதும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லோ என்று நினைக்கத் தோன்றும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:31, 4 சூலை 2015 (UTC)Reply

மேற்கோள் தொகு

கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தேர்வுகளில் புரூவு இட்டைச் செயற்படுத்தினீர்களென்றால் சரியான வடிவத்தில் மேற்கோள்களை இட உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 15:50, 5 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 7 சூலை 2015 (UTC)Reply

கவனிக்க தொகு

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி! கட்டுரைகளில் {{ }} அடைப்புக் குறிகளுக்குள், வார்புருவிற்கான தலைப்பையிட வேண்டும். வார்புருவில் உள்ளதை படியெடுத்து ஓட்ட வேண்டியதில்லை. உதாரணத்திற்கு தற்பொழுது மாற்றியமைத்துள்ள கோவில் கட்டுரைகளைப் பார்க்கவும். நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 22:04, 14 சூலை 2015 (UTC)Reply


{{கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்}} எனும் வார்ப்புருவை தொகுக்க இயலவில்லை. -- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15 சூலை 2015

கனக்ஸ் உதவியுள்ளார். தற்பொழுது இந்த வார்புருவைத் தொகுக்க முடியும்.--நந்தகுமார் (பேச்சு) 12:21, 15 சூலை 2015 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா? திட்டம் தொகு


உளங்கனிந்த நன்றி! தொகு

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வு நடந்த நாளில், தாங்கள் செய்த தொகுப்புகளுக்கு நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:04, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள் தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

படிமங்கள் தொகு

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமேயன்றி படத்தொகுப்பு அல்ல. பார்க்க: en:Wikipedia:Image dos and don'ts. படம் எடுத்துவிட்டோமே என்பதற்காக விக்கியில் பதிவேற்றவோ, இணைக்கவோ கூடாது. அதேவேளை பொருத்தமான (Don't add images that don't relate to the subject.), கட்டுரைக்குத் தேவையான (Don't overload articles with images.), தரமான படங்களை (Quality image) கட்டுரைகளில் இணைப்பது சிறப்பு. அல்லது இணைக்கத்தான் வேண்டும் என்றால் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். புரிதலுக்கு நன்றி. --AntanO 03:18, 30 சூலை 2015 (UTC)Reply

தேவையின்றி படிமங்களை இணைக்க வேண்டாம். இது இறுதி அறிவிப்பு. --AntanO 10:04, 24 ஆகத்து 2015 (UTC)Reply

வார்ப்புரு தொகு

வார்ப்புரு:இந்திய ஆணையங்கள் என்ற புதிய வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். இவ்வார்ப்புருவை இங்குள்ளது போன்று ஏனைய கட்டுரைகளிலும் இணையுங்கள்.--Kanags \உரையாடுக 11:18, 6 ஆகத்து 2015 (UTC)Reply

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல் தொகு

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.

Return to the user page of "எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1".