பயனர் பேச்சு:Balurbala/தொகுப்பு 1

குறிப்புகள்

உங்கள் பங்களிப்பைக் காண மகிழ்ச்சி. தமிழ்த் தலைப்புகளில் மட்டும் கட்டுரை எழுதுவது போதும். தயவுசெய்து ஒரே கட்டுரையை ஆங்கிலத்தலைப்பிலும் இட வேண்டாம். நன்றி--ரவி 13:05, 24 டிசம்பர் 2008 (UTC) விக்கி முறைமைகள்

பாலா,

1) விக்கியில் எக்கட்டுரையில் யார் எழுதியெதென்று கையெழுத்துடுவது கிடையாது. அவ்வாறு செய்தல் விக்கியின் வழமைகளுக்குக் புறம்பானது. யார் பங்களித்தார் என்ற விவரம் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் தானாகப் பதிவாகி விடும்.

2) “பிறர் சேர்க்கலாம், ஆனால் நீக்காதீர்கள்” என்று கட்டுரையில் எழுதுவதைத் தவிருங்கள். விக்கி ஒரு கூட்டு முயற்சி, ஒருவரது ஆக்கங்கள் பிறரால் மாற்றப்படும் என்பதே விக்கியின் அடிப்படைத் தத்துவம். எனவே நீங்கள் எழுதியதை, விக்கியின் நடை/முறைமைகளுக்கேறபவும் கலைக்களஞ்சியக் கட்டுரை நடைகளுக்கேற்பவும் பிறர் மாற்றத் தான் செய்வார்கள். நிகழும் மாற்றங்களோடு உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனில் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பிறருடன் உரையாடி முடிவெடுக்கலாம்.

--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 1 மார்ச் 2011 (UTC) வேண்டுகோள்

வணக்கம் பாலா. நீங்கள் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருவது கண்டு மகிழ்கிறேன். தங்கள் கட்டுரைகளை இன்னும் சற்று விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, பள்ளிகொண்டபுரம் கட்டுரையில் உள்ள மேம்பாடுகளைக் காணலாம். கிழவனும் கடலும் போன்ற கட்டுரைகளுக்கு அவற்றுக்கு ஈடான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் ( http://en.wikipedia.org/wiki/The_Old_Man_and_the_Sea ) இருந்து மொழிபெயர்த்தும் எழுதும். நன்றி--இரவி (பேச்சு) 05:30, 24 சூலை 2012 (UTC) தலைப்பு தமிழில்தான் இருக்கவேண்டும்!

வணக்கம்! Colégio Dom Amando எனும் கட்டுரையை எழுதியுள்ளீர்கள்; தமிழ் விக்கிப்பீடியாவில் தலைப்புகள் தமிழில்தான் இருக்கவேண்டும்; உள்ளடக்கமும் தமிழே! எனவே இக்கட்டுரையை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதவி தேவையிருப்பின் கேளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 4 மே 2013 (UTC)

   புரிந்து கொண்டேன். இனிமேல் தலைப்புகளையும் தமிழிலேயே எழுதுகிறேன். சில வெளிநாட்டுப் பெயர்களை சரியான உச்சரிப்போடு தமிழில் எழுதமுடியாததின் காரனமாகவே ஆங்கிலத் தலைப்புகளைப் பயன்படுத்தினேன். இனிமேல் கவனமாக தமிழிலேயே தலைப்புகளையும் எழுதுகிறேன். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. BALA.R,Sankaranputhoor. (பேச்சு)

பகத் சிங்கின் தூக்கு தண்டனை

நீங்கள் இப்பகுதியில் சுட்டிய மேற்கோள் பிரண்ட் லைனின் முகப்புப் பக்கத்துக்கு கொண்டு செல்கிறது. சரியான இணைப்பைத் தரவும். இல்லை எனில் அந்த உள்ளடக்கங்கள் நீக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 17 ஆகத்து 2013 (UTC) எந்த மேற்கோள் எனக் குறிப்பிட இயலுமா? BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 12:43, 17 ஆகத்து 2013 (UTC)

ஏற்கனவே இருந்த மேற்கோளுக்கு முன்னர் உங்கள் செய்திகளை நீங்கள் இட்டிருந்தீர்கள். அதாவது ஏற்கனவே இருந்த மேற்கோள் [8] ஆகும். அதற்கு முன்னர் உங்களது செய்திகளை பின்வருவது போல் இட்டிருந்தீர்கள்.

//பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிறர் உயிர் பிழைத்தமைக்கு காந்தியே காரணம்.[8]//

ஆனால் உங்கள் செய்திகள் மேற்கோளுக்கு பின்னால் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அது நீங்கள் எழுதியதோ என்று நினைத்தேன். அந்த பிரண்டு லைன் மேற்கோளை இப்போது திருத்தி இட்டிருக்கிறேன். பார்க்கவும்.

மற்றவையை காந்தியின் பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:33, 17 ஆகத்து 2013 (UTC) வழிமாற்றுகள்

வணக்கம், ஏற்கனவே இருக்கும் கட்டுரைத் தலைப்புகளுக்கு, வேறு பரவலாக அறியப்படும் தலைப்புகளை வழிமாற்றுகளாகத் தரலாம். இதற்கு இணைப்புத் தராமல் வழிமாற்று வார்ப்புருவை இட வேண்டும். எடுத்துக்காட்டாக என்.எஸ். கிருஷ்ணன் என்ற வழிமாற்றை ஏற்படுத்துவதற்கு #வழிமாற்று என். எஸ். கிருஷ்ணன் என எழுதிச் சேமிக்க வேண்டும். அல்லது தொகுப்புப் பெட்டியில் உள்ள திருப்பிவிடு என்ற பொத்தானை அழுத்தி முதன்மைக் கட்டுரைத் தலைப்பை இட்டு சேமிக்கலாம். இந்த மாற்றத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 01:24, 24 ஆகத்து 2013 (UTC) பதக்கம் SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம் பாலா, உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போதுமிக்க மகிழ்ச்சியடைகிறேன். நிறைய புதுக் கட்டுரைகளை நல்ல எழுத்துநடையில் எழுதுகின்றீர் ! அன்புடன், அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:54, 16 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம், பாலா! அண்மையில் நீங்கள் தரும் தொடர் பங்களிப்பு அருமை; பத்தாண்டுகள் கொண்டாடும் வேளையில்... தங்களின் பங்களிப்பு, தமிழை மகிழ்ச்சிப்படுத்தட்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:35, 20 செப்டம்பர் 2013 (UTC) நன்றி

எனக்கு சிறப்புப் பதக்கம் அளித்து என்னை ஊக்குவித்த பயனர்:தமிழ்க்குரிசில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்பதக்கம் எனக்கு தமிழ் விக்கியில் நான் இன்னும் முனைப்புடன் செயல்பட ஓர் உந்து சக்தியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 16:32, 16 செப்டம்பர் 2013 (UTC)

       வணக்கம் அண்ணே! கட்டுரை எழுதுவதில் உங்களுக்கு எந்த சிக்கல் இருந்தாலும் என்னைக் கேட்கலாம். போன முறை, வேற்று மொழி பெயர்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது பற்றி சொல்லியிருந்தீர்கள். அதற்கு IPA படிக்க வேண்டும். தவறான தலைப்பாய் இருந்தாலும் பரவாய் இல்லை, தொடர்ந்து செய்யுங்கள். திருத்திக் கொள்ளலாம். இன்னும் நிறைய கருவிகள் உள்ளன. உங்கள் வேலையை இவை எளிதாக்கக் கூடும். நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:17, 17 செப்டம்பர் 2013 (UTC)

உங்களது ஒத்துழைப்பிற்கு ரெம்ப நன்றி . சில சந்தேகங்கள் இருக்கின்றன. நேரம் வரும் போது உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 05:00, 18 செப்டம்பர் 2013 (UTC) மேற்கோள்கள்

உங்கள் பக்கங்களில் மேற்கோள்களுக்கான உரலியைத் தந்தாலும் அவை கட்டுரையின் கீழ்ப்பகுதியில் தெரியாது பிழைச்செய்தி வருவதைக் கவனித்திருக்கலாம். இதை தவிர்க்க மேற்சான்றுகள் என்ற தனிப்பகுதி துவங்கி அதில்

என இடவேண்டும். அண்மையில் நீங்கள் துவங்கிய ஹான்ஸ் பிலிக்ஸ்‎‎ கட்டுரையில் நான் செய்த மாற்றங்களைக் காணவும்.--மணியன் (பேச்சு) 12:57, 17 செப்டம்பர் 2013 (UTC)

கிலோவாட் மணி

பேச்சு:கிலோவாட் மணி பார்த்து எனது சந்தேகத்தைத் தெளிவு படுத்த வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 04:20, 18 செப்டம்பர் 2013 (UTC)

ஆனால் ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையில், கிலோவாட் மணி என்பது சக்தியின் அலகு என்றும், இது பொதுவாக மின்சக்தியின் பயன்பாட்டு அளவிற்கு பணம் கணக்கிடப் பயன்படுகிறது என்றுதானே உள்ளது.(The kilowatt hour, or kilowatt-hour, (symbol kW·h, kW h or kWh) is a unit of energy.....The kilowatt hour is most commonly known as a billing unit for energy delivered to consumers by electric utilities.). உங்கள் விளக்கத்தை இங்கேயே தரலாம்.--Booradleyp1 (பேச்சு) 05:11, 18 செப்டம்பர் 2013 (UTC) மின் சக்தி தவிர்து வேறு எங்கும் இந்தச் சொல் பயன்படுத்துவதாய் தெரியவில்லை . மின்பயன்பாட்டைக் கணக்கிடும் 1 யூனிட் 1 கிலோவாட் மணி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 05:21, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேறு எங்கும் பயன்படுத்தப் படாததால் இது சக்திக்கான பொது அலகில்லை என்று சொல்ல முடியாது தானே. அதுவுமில்லாமல் கட்டுரையிலுள்ள அட்டவணை இந்த அலகினை சக்தியின் பிற அலகுகளுக்கு (ஜூல், வாட்டு) மாற்றும் வாய்ப்பாட்டினைத் தருவதால் இது மின்சக்திக்கான தனிப்பட்ட அலகல்ல, இது சக்திகளுக்கான பொதுஅலகு என்பது சரியென்றுதான் படுகிறது. இந்த உரையாடல்களை பேச்சு:கிலோவாட் மணி பக்கத்தில் இட்டுவிடுகிறேன். அங்கு தொடரலாம். பிற பயனர்களும் கருத்தளிக்கக் கூடும்.--Booradleyp1 (பேச்சு) 05:36, 18 செப்டம்பர் 2013 (UTC) மால்வா

உங்களின் மால்வா கட்டுரையிலுள்ள தகவல்களை மால்வா (மத்தியப் பிரதேசம்) எனும் கட்டுரையில் சேர்க்கவும்; அதன்பிறகு மால்வா கட்டுரையை நீக்கி உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:55, 20 செப்டம்பர் 2013 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Balurbala! நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

   ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.
   உங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.
   தமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.
   விக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 13:15, 22 செப்டம்பர் 2013 (UTC) பெயர்+கட்டுரை ஒருங்கிணைப்பு

எருமை என்பதில் அது குறித்தவைகளைத் தொகுத்து வருகிறேன். நீங்கள் உருவாக்கிய நீர் எருமை கட்டுரையைக் கண்டேன். பொதுவாக எருமை என்ற சொல்லானது, கால்நடைத்துறையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை (கால்நடை)யையேக் குறிக்கும். எனவே, அப்பொது பெயருக்கு நீங்கள் உருவாக்கிய கட்டுரையின் இத்தரவுகளை மாற்றலாமா?--≈ த♥உழவன் ( கூறுக ) 08:09, 25 செப்டம்பர் 2013 (UTC)

   நண்பருக்கு , எனக்கு சரியாகத் தெரியவில்லை. நீர் எருமை( Water buffalo) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இருந்தது சிறிது மொழிபெயர்தேன்.அவ்வளவே...நன்றிஆர்.பாலா (பேச்சு) 10:17, 25 செப்டம்பர் 2013 (UTC)

(மேற்கூறியவைகளை எனது பக்கத்தில் தெரிவித்திருந்தீர்கள். நன்றி. கேள்வி இங்கு தொடங்கியதால், இங்கேயே முடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தங்களது பதிலை இப்பக்கத்திற்கே மாற்றினேன். மீண்டும் சந்திப்போம் வணக்கம்.)--≈ த♥உழவன் ( கூறுக ) 10:22, 25 செப்டம்பர் 2013 (UTC) பதக்கம் Peace Barnstar 6.png செயல்நயம் மிக்கவர் பதக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் குறைவாக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு கட்டுரைகள் என்று இலக்கு வைத்து எழுதுவதாக முகநூலில் கூறி இருந்தீர்கள். அதனைக் கண்டு நெகிழ்ந்தேன். சொன்னபடி செய்து காட்டி வருவதற்காக இந்தப் பதக்கம் ! இரவி (பேச்சு) 06:32, 2 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

   நம்பிக்கைத் தரும் விண்மீன், மீண்டும் தமிழ் விக்கியின் வானத்தில்...!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:48, 2 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம், Balurbala! 250 Raketna Brigada.png

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:36, 2 அக்டோபர் 2013 (UTC) திருத்தம்

   தவறு: சத்யா(உணவு)
   சரி: சத்யா (உணவு)

இது தலைப்புக்கு மட்டுமல்ல, கட்டுரையில் எங்கும் பொருந்தும். நன்றி.--Kanags \உரையாடுக 11:06, 6 அக்டோபர் 2013 (UTC) நன்றிஆர்.பாலா (பேச்சு) 11:15, 6 அக்டோபர் 2013 (UTC) காற்புள்ளியும் முற்றுப்புள்ளியும்

வணக்கம் பாலா, உங்கள் கட்டுரைகளில் கீழுள்ள திருத்தங்களைக் கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன். காற்புள்ளியிடும் போது:

   கால், அரை-சரி.
   கால் , அரை-தவறு.

முற்றுப்புள்ளியிடும்போது:

   அது மிகவும் நன்று. இங்கு உள்ளது-சரி.
   அது மிகவும் நன்று.இங்கு உள்ளது-தவறு.

மற்றொமொரு வேண்டுகோள்: கட்டுரைக்குள் வரும் தலைப்புச் சொல்லுக்குரிய ஆங்கிலச் சொல்லை அடைப்புக் குறிக்குள் தருவது நல்லது. (‎புர்ஹான்பூர் பார்க்கவும்) ஆங்கிலத்திலிருந்துதான் நாம் பெரும்பாலும் தமிழாக்கம் செய்கிறோம். அப்போது அது வெவ்வேறு விதங்களில் (!) அமையலாம். அத்தலைப்பு குறித்து இணையத்தில் தேடும்போது த.வியில் ஆங்கிலப் பெயரும் இருந்தால் அக்கட்டுரை எளிதல் சிக்க வாய்ப்புள்ளது.

உங்களது பங்களிப்புகள் தொடர பாராட்டுக்களுடன்--Booradleyp1 (பேச்சு) 06:32, 7 அக்டோபர் 2013 (UTC) உங்களுக்குத் தெரியுமா? திட்டம்... உங்களுக்குத் தெரியுமா நீங்கள் பங்களித்த குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 9, 2013 அன்று வெளியானது.


உங்களுக்குத் தெரியுமா நீங்கள் பங்களித்த விண்வெளிக் கழிவுகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 30, 2013 அன்று வெளியானது.


       பாலா அண்ணணுக்கு வாழ்த்துகள்! இனும் நிறைய தகவல்களை இத்திட்டத்தில் சேர்க்குமாறு வேண்டுகிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:04, 10 அக்டோபர் 2013 (UTC)
           மிக்க நன்றி ஆர்.பாலா (பேச்சு) 12:22, 10 அக்டோபர் 2013 (UTC)


உங்களுக்குத் தெரியுமா நீங்கள் பங்களித்த தடமறியும் கழுத்துப் பட்டை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 15, 2015 அன்று வெளியானது.


உங்களுக்குத் தெரியுமா நீங்கள் பங்களித்த கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 13, 2015 அன்று வெளியானது.


கிரந்த எழுத்துகள்

வணக்கம் அண்ணே! கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ்ரீ, ஸ) பற்றி கேட்டிருந்தீர்கள். விஜயராஜ் என்பதை விசயராசு என்று தாராளமாக எழுதலாம். இது தவறல்ல. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! எந்த மொழியிலும் பிற மொழிப் பெயர்களை அப்படியே எழுத முடியாது. கிரந்த எழுத்துகள் இடைக்காலத்தில் தமிழில் செருகப்பட்டன. இவை சமசுகிருதத்தை தமிழ் எழுத்துகளில் எழுதப் பயன்பட்டன். பிற்காலத்தில், சமசுகிருத ஆதரவாளர்கள் தமிழர்களுக்கு சமசுகிருதப் பெயர்களை வலிந்து திணித்தனர். இதன் காலமாகவே, இவை தமிழில் பயன்பாட்டில் உள்ளன. --எந்த மொழியிலும் பிற பெயர்கள் அப்படியே எழுதப்படுவதில்லை.-- எஸ்பானியா என்பதை ஆங்கிலேயர்கள் ஸ்பெயின் என்கிறார்கள். ஜாகார்த்தாவை ஜகார்த்தா என்றார்கள். கோழிக்கோட்டை கேலிக்கட் என்றார்கள். இந்திக்காரர்கள் தமிழை தமிள் என்றனர், பாலக்காடு, பால்காட் ஆனது. யாழ்ப்பாணத்தை ஜாஃப்னா என்றனர். இப்படி உலகம் முழுவதும் தங்கள் மொழியில் இல்லாததை வலிந்து திணிப்பதில்லை. தங்கள் மொழிக்கு ஏற்றவாறு தான் எழுதுகிறார்கள். எனவே, இந்த எழுத்துகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவற்றால் தமிழில் இன்னும் அதிகளவிலான சமசுகிருதச் சொற்கள் உள்ளே வரும். இந்த எழுத்துகளைக் கொண்டு மொழியின் வளர்ச்சி இல்லை. தமிழ் மொழி பலமான கட்டமைப்பைக் கொண்டது. எனவே, இவற்றை எழுத வேண்டியதில்லை.

   தமிழக அரசும், இலங்கை அரசும் இந்த எழுத்துகளை தமிழ்ப் பாடதிட்டத்தில் சேர்க்கவில்லை. தமிழ் எழுத்துகள் 247 தான்!
   சீனப் பெயர்களையும் அரபுப் பெயர்களையும் பல மொழிகளில் எழுத முடியாது. ஆனாலும், அவற்றை தத்தமது மொழிகளுக்கு ஏற்பவே எழுதுகிறார்கள்.
   இந்த எழுத்துகளை நாம் தமிழில் பயன்படுத்துவதில்லை. புதிய சொற்கள் தமிழ் எழுத்துகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. எனவே, இவை காலந்தோறும் அப்படியே தான் இருக்கும். தமிழுடன் ஒட்டவேயில்லை.
   ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி எழுத்துகளும் ஒலிகளும் உண்டு. நமக்காக, இந்திக்காரர்கள் ”ழ” வை சேர்த்துக்கொள்ளப் போவதில்லை.
   இவற்றைத் தவிர்ப்பதால் தமிழில் ஒலித் திரிபு இருக்கலாம். அவற்றையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டே நிறைவு செய்யலாம். அ”ஸ்”வதி - அ”சு”வதி, பிரான்ஸ் - பிரான்சு என்பது போன்று செய்யலாம்.

இது குறித்து நிறைய உரையாடல்கள் ஆங்காங்கே இருக்கும். படித்தறிக. நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 12 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:42, 12 அக்டோபர் 2013 (UTC)

   👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:52, 12 அக்டோபர் 2013 (UTC)
       கிரந்த எழுத்துகள் தமிழ்ப் பாடங்களில் காணப்பட்டாலும், அவை தமிழ் எழுத்துக்கணக்கில் சேர்க்கப்படவில்லை. அப்படியென்றால், வலிந்து திணிக்கப்படுகின்றன என்று தான் அர்த்தம்?? மேலும், தமிழர் பெயர்கள் கிரந்த எழுத்துகளைக் கொண்டவாறு எழுதப்படுவதும் சமசுகிருத ஆதரவாளர்களின் திணிப்பு தான்! வரும் காலங்களில் இவ்வெழுத்துகள் இல்லாமலேயே தமிழ் பெரும்வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள். :) (பரவலாக புழக்கத்தில் காணப்பட்டாலும், தமிழக அரசின் ஆவணங்கள், தமிழ்த் துறை, வெளியூர்வாழ் தமிழ்ச் சங்களங்களும், தமிழறிஞர்களும் இவற்றை புறக்கணித்துவிட்டனர்.) புரிந்துகொண்டமைக்கு நன்றி அண்ணே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:28, 13 அக்டோபர் 2013 (UTC)

வாசனை

வாசனை (சிறுகதைத் தொகுப்பு) கட்டுரையில் தகவற்பெட்டியில் தலைப்பு ’பள்ளியில் ஒரு நாய்க்குட்டி’ என்று உள்ளதே? இரண்டில் எது சரியானது? பின்னட்டைக் குறிப்புகள் துணைத்தலைப்பில் பின்னட்டை குறித்த விளக்கம் இக்கட்டுரையில் வேண்டாம் என நினைக்கிறேன். இக்கட்டுரையின் பின்னட்டைக் குறிப்பினை மட்டும் தந்தால் போதுமே. --Booradleyp1 (பேச்சு) 16:14, 12 அக்டோபர் 2013 (UTC) மின்னணுவியல் வலைவாசல்

வணக்கம்! வலைவாசல்:மின்னணுவியல் என்பதை பாருங்கள். அந்த வலைவாசலின் முன்னேற்றத்திற்கு நீங்கள் உதவலாம். உதாரணத்திற்கு வலைவாசல்:தமிழிலக்கியம் என்பதனைப் பார்க்கலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 13 அக்டோபர் 2013 (UTC) சகாடை

Chagatai language - இதனை நீங்கள் சகாடை என தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பாபர் நாமா, தமிழ் நூல் பற்றிய குறிப்புகளில் சாகதேய மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாகடை கட்டுரை பேச்சுப்பக்கத்தில் இந்த விவரத்தை இடுகிறேன். பயனர்கள் கருத்துக்காக.

எனக்கு ஒரு உதவி வேண்டும். நீங்கள் உருவாக்கும் நூல் பற்றிய அனைத்துக் கட்டுரைகளிலும் அதன் ISBN குறிப்பிடுகிறீர்கள். எனக்குத் தேவையான புத்தகங்களுக்கு ISBN ஐ கண்டுபிடிப்பதற்கு எனக்கு வழிகாட்டி உதவ வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 16:37, 14 அக்டோபர் 2013 (UTC)

நன்றி பாலா, ஆனாலும் இணையத்தில் அதனைத் தேடுவது எனக்குத் தெரியவில்லை. --Booradleyp1 (பேச்சு) 17:01, 14 அக்டோபர் 2013 (UTC) இணைப்பும் பகுப்பும்

பாலா, நல்ல கட்டுரை - சீன செயற்கைக்கோள் தகர்ப்பு பற்றி. அதில் ஆங்கிலக் கட்டுரையை இணைக்க இடப்பக்கக் கருவிப்பட்டையில் இருக்கும் Add links எனும் தேர்வைப் பயன்படுத்தி வரும் உரையாடல் பெட்டியின் மூலம் சேர்க்கலாம். பகுப்பினைச் சேர்க்க விரைவுப்பகுப்பியைப் பயன்படுத்தவும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 04:40, 16 அக்டோபர் 2013 (UTC) மணல்தொட்டி

உங்கள் பயனர் பக்கத்தின் மேற்பகுதியில் மணல்தொட்டி என்றுள்ள இணைப்பைத் தேர்ந்தெடுத்தால் திறக்கும் பக்கத்தில் நீங்கள் உருவாக்கும் கட்டுரையின் உள்ளடக்கங்களை எழுதி முடித்து சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு அதனைத் தேவையான பக்கத்தில் cut&paste செய்து கட்டுரையை உருவாக்கலாம்.

நம்முடைய மணல்தொட்டியை வேறுபயனர்கள் தொகுக்க மாட்டார்கள். அதனால் ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையை இருவர் தொகுத்து அதனால் எழும் ’முரண்பாடுகளைத் தொகுக்கவும்’ என்ற சிக்கல் வராது. நீங்கள் இருமுறை சேமித்தும் சேமிக்கப்படதாதற்குக் காரணம் நீங்கள் தொகுத்ததை சேமிக்கும் அதே நேரம் அக்கட்டுரையை வேறு ஒருவர் தொகுத்து சேமித்ததுதான் என நினைக்கிறேன்.

இதனால்தான் நான் எப்பொழுதுமே எனது மணல்தொட்டியைப் பயன்படுத்தி கட்டுரை முழுவடிவம் பெற்ற பிறகே பொதுவெளியில் சேமிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:37, 16 அக்டோபர் 2013 (UTC)

   இடையே தொகுத்ததற்கு மன்னிக்கவும் பாலா. மேற்கூறிய பயனர் கூறியது போல மணல்தொட்டியிலிட்டு சேமித்துக் கொள்ளுங்கள். பின்னர் வெட்டி ஒட்டவும். மேலும், தொகுத்தல் முரண்பாடுகளின்போது சில வேளைகளில் (மிகச் சில வேளைகளில்) உங்கள் உரை என்று ஒரு தேர்வு காட்டப்பட்டு நீங்கள் தொகுத்தவை அனைத்தும் இருக்கும். அதனையும் நகலெடுத்து ஒட்டிக் கொள்ளலாம். ஆனால், மணல்தொட்டியே சிறந்த தேர்வு பாலா. மணல்தொட்டிக்கு இங்கு சொடுக்குக. மணல்தொட்டி
    சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:11, 16 அக்டோபர் 2013 (UTC)

நிகழ்வுகள்

வணக்கம் பாலா, வரலாற்றில் குறிப்பிடக்கூடிய நிகழ்வுகளுக்குக் கட்டுரைகள் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சி. இவ்வாறான நிகழ்வுகளை அந்தந்த நாளுக்குரிய பட்டியலிலும் நீங்கள் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, இங்குள்ள பதிகையைப் பாருங்கள்: [1]. இதே செய்தியை நீங்கள் இங்கும் தரலாம். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 09:38, 16 அக்டோபர் 2013 (UTC) டைம் ஆப் லவ் (திரைப்படம்)...

இக்கட்டுரையில் உள்ள 'கதை' எனும் தலைப்பின்கீழ் //இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் குஸால் இந்த இரு இளைஞர்களில் ஒருவரை மணக்கிறார்.// எனும் உரை தெளிவற்று இருக்கிறது. திருத்த வேண்டுகிறேன். இத்திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாததால், உங்களையே திருத்த வேண்டுகிறேன்.

   உங்களின் கட்டுரைகளை பதிவேற்றியபிறகு, எழுத்துப்பிழைகளுக்காக ஒருமுறை படித்துப் பார்த்து, சரிசெய்ய வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 20 அக்டோபர் 2013 (UTC)

பக்கத்தை மணற்தொட்டியிலிருந்து நகர்த்துதல்

மணற்தொட்டியிலிருப்பதை அப்படியே cut paste செய்து புதிய கட்டுரை எழுதாதீர்கள். தாங்கள் மணற்தொட்டி பக்கத்தினை வழிமாற்று இல்லாமல் நகர்த்தினால் போதுமானது. மேலும் படிக்க பார்க்கவும் (ஆங்கிலத்தில் உள்ளது) --அஸ்வின் (பேச்சு) 10:29, 21 அக்டோபர் 2013 (UTC)

   தங்களை குழப்புவதற்காக கூறவில்லை அன்பரே. தாங்கள் விருப்பபடும் வகையில் எழுதலாம். மேலும் பக்கத்தை (முதன்மை/Main) என்ற பெயர்வெளியிற்கு நகர்த்துதல் வேண்டும். நீங்கள் நகர்த்துதல் பக்கத்தில் கீழே உள்ள ஒரு வழிமாற்றை விட்டுச்செல்(Leave a redirect behind) என்ற checkboxஐ uncheck செய்யவும். இவ்வாறு தங்கள் மணற்தொட்டி புதிய பக்கத்துடன் இணைக்கப்படாது. --அஸ்வின் (பேச்சு) 08:43, 22 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம் பாலா, இந்த நகர்த்துதல் என்ற முறை பற்றி நான் அறிந்திராமையால்தான் எனது டெஸ்ட் பக்கத்தில் கட்டுரைகளை எழுதிப் பின் காப்பி& பேஸ்ட் செய்வது போல உங்களுக்கும் அப்படிச் செய்யலாம் என்று கூறினேன். இரண்டு முறைகளில் நகர்த்துதல் முறை ஏன் காப்பி&பேஸ்ட் முறையைவிட பரிந்துரைக்கப்படுகிறது என்று எனக்கும் தெரியவில்லை. காரணத்தை முடிந்தால் விளக்கும்படி அஸ்வினிடம் இங்கு கேட்டுக் கொள்கிறேன்.

குழப்பங்களைக் கண்டு அயராதீர்கள், சிறப்பான உங்களது பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்களுடன்--Booradleyp1 (பேச்சு) 11:42, 22 அக்டோபர் 2013 (UTC) பிகு:காப்பி&பேஸ்ட் செய்யச் சொன்னது ஒரு நிர்வாகி என நீங்கள் குறிப்பிட்டது நானாக இருப்பின் ஒரு சிறு தன்விளக்கம்: நான் ஒரு சாதாரணப் பயனர்தான்; நிர்வாகி அல்ல. நன்றி.

   அன்பரே, நகர்த்துதல் முறைப்படி தங்களின் தொகுப்புகளின் தொடர்ச்சி அக்கட்டுரையின் வரலாற்றில் இருக்கும். நகர்த்தப்பட்ட கட்டுரையின் வரலாற்றை பார்க்க. நகர்த்தாமல் சுட் பேஸ்ட் செய்யப்பட்ட கட்டுரையின் வரலாற்றை பார்க்க(பாலா அவர்கள் முதலிலிருந்தே இம்முறையை பயன்படுத்தினார் எனின் வரலாற்றில் அக்கட்டுரையின் தொகுப்புகள் மட்டும் தெரிந்திருக்கும்). இரண்டிற்கும் மாற்றங்கள் உண்டள்ளவா. மேலும் தாங்கள் மணற்தொட்டியில் கட்டுரைக்காக செய்த திருத்தங்கள் உங்கள் பயனர்வெளி தொகுப்புகளாக கருதப்படும். நகர்த்துதல் முறையில் செய்தால் கட்டுரை தொகுப்புகளாக கருதப்படும். --அஸ்வின் (பேச்சு) 14:51, 22 அக்டோபர் 2013 (UTC)
   உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி அஸ்வின். இனிமேல் நானும் நகர்த்தல் முறையினை பயன்படுத்த முயற்சிக்கிறேன். (பூங்கோதை)--Booradleyp1 (பேச்சு) 04:43, 23 அக்டோபர் 2013 (UTC)
       பாலா அவர்களே, தங்களின் சித்திக் பார்மாக் கட்டுரை தாங்கள் தொடங்கியக் கட்டுரைபட்டியலில் தெரிகின்றதே! தாங்கள் மணற்தொட்டியை முன்னமே உருவாக்கியதால் அக்கட்டுரை அவ்வாறே கருதப்படுகிறது, ஆதலால் அது பட்டியலில் கீழே உள்ளதை கவனிக்கவும்(நான் பார்த்ததில் 46 ஆம் எண்ணில் இருந்தது). மேலும் தாங்கள் இதற்கு பதிலளிக்க எனது பேச்சுப்பக்கத்தில் தான் பதிவிட வேண்டும் என்றில்லை. இங்கேயே, உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே, நீங்கள் பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் எனது கவனிப்புப்பட்டியலில் உள்ளதால் எனக்கு மாற்றங்கள் தெரியவரும். இவ்வாறு பின்பற்றுவதால் கலந்துரையாடலில் தொடர்ச்சி இருக்கும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 01:19, 23 அக்டோபர் 2013 (UTC)
           நன்றி அஸ்வின். உங்களின் அலோசனைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னும் சில சந்தேகங்களைக் கேட்கலாம் என நினைக்கிறேன். சில வேளைகளில் சில படிமங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது தமிழில் நான் இணைக்கும் போது படம் தெரியாமல் பிழைச் செய்தி (அறுபட்ட வார்ப்புரு) வருகிறது. பின்னர் சில நேரம் கழித்து மற்றுமொருவர் சில மாற்றங்களைச் செய்தபின் அப்படம் தோன்றுகிறது. உதாரணம் ஒசாமா (திரைப்படம்) . ஒருவேளை அப்புகைப்படம் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டும் தான் பயன்படுத்த இயலுமா? நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள். நன்றி :)--ஆர்.பாலா (பேச்சு) 03:14, 23 அக்டோபர் 2013 (UTC)

பக்கத்தை நகர்த்து என்பதை சொடுக்கிய பின் வரும் பக்கத்தில் கீழே உள்ள ஒரு வழிமாற்றை விட்டுச்செல்(Leave a redirect behind) என்ற checkboxஐ uncheck செய்யவும். இதனை செய்தால் தங்கள் மணற்தொட்டி கட்டுரையுடன் இணைக்கப்படாது! --அஸ்வின் (பேச்சு) 15:33, 23 அக்டோபர் 2013 (UTC) படிமம்

பாலா, மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள சந்தேகத்திற்கு எனக்குப் புரிந்தவரையில் நான் அளிக்கும் விளக்கம்: எந்தவொரு படிமமும் விக்கி பொதுவகத்தில் பதிவேற்றப்பட்டிருந்தால் தான் அதனை எந்த மொழி விக்கியிலும் பயன்படுத்த முடியும். அந்தந்த மொழி விக்கியில் மட்டும் பதிவேற்றப்பட்ட படிமங்கள் அந்தந்த குறிப்பிட்ட மொழி விக்கிகளில் மட்டுமே தெரியும். பொதுவாக திரைப்படச் சுவரொட்டிகள், நூல் அட்டைகளின் படிமங்களைப் பொதுவகத்தில் பதிவேற்ற அனுமதியில்லை. ஆனால் அவற்றை ஆங்கில விக்கி, தமிழ் விக்கி ஆகியவற்றில் பதிவேற்ற முடிகிறது. (இதற்கான சரியான காரணம் எனக்குத் தரத் தெரியவில்லை!) அதனால் உங்கள் கட்டுரைகளில் அறுந்த கோப்புகளாக உள்ள படிமங்களை நான் ஆ.வி (அல்லது இணையம்) இருந்து டவுன்லோடு செய்து மீண்டும் த.வி இல் பதிவேற்றுகிறேன். அதன் பின் அப்படிமம் கட்டுரையில் தோன்றுகிறது. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:43, 23 அக்டோபர் 2013 (UTC)

   தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. ஆனால் யாரோலோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் கிடைக்கிறது என்பதற்காகவே சரியான உரிமம் பெறாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்வதால் பதிப்புரிமை மீறல் பிரச்சனைகள் வராதா? விக்கிக்குப் புதியவன் நான், விதிமுறைகளும் பதிப்புரிமை தொடர்பான நடைமுறைகளும் எனக்குச் சரியாகத் தெரியாது அதனால்தான் கேட்கிறேன். நன்றி.---ஆர்.பாலா (பேச்சு) 05:24, 23 அக்டோபர் 2013 (UTC)

நீங்கள் நினைப்பது சரிதான். இணையத்தில் கிடைக்கும் எல்லாப் படிமங்களையும் நாம் கையாள முடியாது. கண்டிப்பாக அது பதிப்புரிமை மீறலாகும். ஆனால் திரைப்படச் சுவரொட்டிகளும் நூலட்டைகளும் logo க்களும் நியமப்பயன்பாடு என்ற வகையில் இங்கு விக்கியில் பதிவேற்ற அனுமதியுள்ளது. கோப்பைப் பதிவேற்றும் போது அனுமதியைத் தேர்ந்தெடுக்கும் போது வரும் option களில் இவை இரண்டும் உள்ளன. படிமங்களைப் பதிவேற்றும் பதிப்புரிமை குறித்து மேலதிகத் தகவலுக்கு இங்கு விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 06:13, 23 அக்டோபர் 2013 (UTC)

   நன்றி இனிமேல் நானும் அவ்வாறே செய்கிறேன்.--ஆர்.பாலா (பேச்சு) 07:04, 23 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

   வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
   விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)

பதக்கம் SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம் தாங்கள் தொடங்கி எழுதிய விண்வெளிக் கழிவுகள் கட்டுரையைப் படித்தேன். தெளிவாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்து நடையை மெச்சுகிறேன். தொடர்ந்து சீரிய பங்களிப்பு செய்ய மனமார்ந்த வாழ்த்துகள் பாலா :) சூர்யபிரகாஷ் உரையாடுக 03:02, 31 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

       👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:07, 5 திசம்பர் 2013 (UTC)

நடிகைகள்

நடிகைகளின் கட்டுரைகளில் உள்ள தகவல் சட்டத்தில் ஏன் முழுமையான தகவல்களை நீக்கியிருக்கிறீர்கள்? அவற்றையும் ஆங்கில விக்கியில் இருந்து எடுத்து வெளியிடலாமே? தகவல்களை நீக்குவதால் தேவையற்ற சிவப்புப் பகுப்பு கட்டுரையின் அடியில் (ஆங்கிலத்தில்) உருவாகிறது.--Kanags \உரையாடுக 10:28, 5 திசம்பர் 2013 (UTC) மேற்கோள்கள்

வணக்கம். நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் அனைத்திலும் முக்கியமான தகவல்களுக்கு மேற்கோள்களை அவசியம் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:38, 7 திசம்பர் 2013 (UTC)

ஆப்கான் பெண் கட்டுரையில் மேற்கோள்கள் இணைத்தமைக்கு நன்றி பாலா. மற்றுமொரு வேண்டுகோள், நபர்கள் குறித்த கட்டுரைகளில்

   அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் தரப்படுதல் வேண்டும்.
   ஒரு குறுங்கட்டுரை என்பது குறைந்தது மூன்று வரிகளாவது கொண்டிருக்க வேண்டும்.

எனவே கட்டுரைக்குள் பிறப்பு, இறப்பு மற்றும் அவரது தொழில் குறித்த விவரங்கள் மட்டும் கொண்ட வரிகள் மட்டுமல்லாது, மேலும் சில விவரங்களையும் (மேற்கோள்கள் கிடைக்குமானால் அவற்றையும்) சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:06, 8 திசம்பர் 2013 (UTC) காணொளி

புதிய கட்டுரை எப்படி எழுதுவது என்ற காணொளி-நல்ல முயற்சி. பாராட்டுக்கள். நன்றாக உள்ளது. புதுப்பயனர்களுக்குப் பயனுள்ளதா இருக்கும். பார்ப்பதற்குத் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நல்லது என தோன்றுகிறது. மற்றபடி டெக்னிக்கலா (அதில் நான் பூஜ்யம் என்பதால்!) கருத்து எதுவும் சொல்லத் தெரியவில்லை. --Booradleyp1 (பேச்சு) 12:36, 8 திசம்பர் 2013 (UTC) கட்டுரைப் பெயர்கள்

வணக்கம் பாலா! வேற்று நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் பெயர்களைப் படிப்பதில் குழப்பம் வரலாம். ஆனால், இந்திய மொழிப் பெயர்கள் உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, இந்திய மொழிப் பெயர்களைக் கொண்ட கட்டுரைகளைத் தமிழில் எழுதும்போது அதன் பெயரை சரியான மாற்ற வேண்டும். அதற்கு, அட்சரமுக என்ற கருவி உதவும். ஆங்கிலத்தில் படித்து தவறாக குழம்ப வேண்டாம். இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள சொல்லை இந்த கருவியில் இட்டால் இணையான தமிழ்த் தலைப்பை தரும். அதைப் பயன்படுத்துக. சில வேளைகளில், தமிழில் வேறு உச்சரிப்பில் அந்த சொல் வழங்கப்படலாம். (எ.கா: புனே/புணே). இவற்றை கூகுளில் இட்டு தேடுப் பாருங்கள். எதற்கு அதிக முடிவுகள் கிடைக்கிறதோ, அந்த தலைப்பிலேயே கட்டுரை எழுதுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 11 திசம்பர் 2013 (UTC) பெயரிடல் மரபு

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:பெயரிடல் மரபு#இரவியின் கருத்துகள்--இரவி (பேச்சு) 18:54, 13 திசம்பர் 2013 (UTC) நபர்கள்

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 15 திசம்பர் 2013 (UTC) பார்வைக்கு

கட்டுரைகளுக்கு வெளி இணைப்புகளாக ஆவி மற்றும் தவி கட்டுரைகளைத் தராமல் , ’இவற்றையும் பார்க்க’ என்ற தலைப்பின் கீழ் தரலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:43, 22 திசம்பர் 2013 (UTC) உங்களுக்குத் தெரியுமா பரிந்துரைகள்

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் இங்கு வானியலில் உள்ள முக்கிய செய்திகளை ஒரு வரியில் பரிந்துரைக்கலாம். வானியலில் கிராபிக்சு பைல்கள் அதிகம் இருக்கும். விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 20, 2012 இந்த இணைப்பை பாருங்கள். இதை பாருங்கள். இதை பார்ப்பவர் நிச்சயமாக அந்த பக்கத்தை பார்வையிடுவார். இதைப் போல் கிராபிக்சு புகைப்படங்கள் அதிகம் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருக்கும். அதனால் அது தொடர்பான பங்களிப்புகளை உங்களுக்குத் தெரியுமாவுக்காக பரிந்துரைக்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:51, 23 திசம்பர் 2013 (UTC) பதக்கம் Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம் இலக்கு நிர்ணயித்து, அதனை அடைந்து, சாதனைப் படைக்கும் தங்களின் உழைப்பினைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறோம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 3 சனவரி 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 06:42, 3 சனவரி 2014 (UTC)

   👍 விருப்பம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:28, 3 சனவரி 2014 (UTC)
   👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:40, 3 சனவரி 2014 (UTC)
       👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:41, 3 சனவரி 2014 (UTC)

நன்றி

Face-wink.svg நன்றி!விக்கித்திட்டம் வானியலில் இணைந்து கொண்டதிற்கு நன்றி, இப்படியே உங்கள் உழைப்பு விக்கித்திட்டம் வானியலிற்காக மேலும் மேலும் தொடர வேண்டும். -- திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:13, 3 சனவரி 2014 (UTC) சந்தேகம்

ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தான் கட்டுரையில் \\கசாரா பகுதியில் ’சோவியத் ஒன்றியம்’ ஆதரவு அதிகாரிகளை நீக்கிவிட்டு \\ என்று உள்ளது. ஆவி கட்டுரையில் \\’Kabul-backed’ authorities\\ என்றுள்ளது.

எனது சந்தேகம்: Kabul-backed என்பது சோவியத் ஒன்றியமா என்பது தான்.--Booradleyp1 (பேச்சு) 17:47, 4 சனவரி 2014 (UTC) புது வருடம், புத்தாண்டு...

புத்தாண்டு நாள் எனும் கட்டுரையும் உள்ளது. அதற்கு ஏற்றாற்போல உங்களின் புதிய கட்டுரையினை எழுதுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:20, 14 சனவரி 2014 (UTC) தகவல் பெட்டி

நீங்கள் உருவாக்கும் இடங்கள் பற்றிய கட்டுரைகளில் தகவல் பெட்டி வார்ப்புவை இணைத்து உருவாக்குங்கள். தகுந்த வார்ப்புரு இணைக்காவிட்டால் "விக்கியாக்கம்" வார்ப்புரு இடப்பட வாய்ப்புள்ளது. en:Template:Wikify --Anton·٠•●♥Talk♥●•٠· 06:51, 20 சனவரி 2014 (UTC)

   நன்றி. இனிமேல் எழுதும் கட்டுரைகளில் இணைக்கிறேன். வார்ப்புருக்களை கண்டுபிடிக்க இயலவில்லை. தாங்கள் அதற்குறிய லிங்கை கொடுத்தால் உதவியாய் இருக்கும். மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 10:23, 20 சனவரி 2014 (UTC)
   பகுப்பு:தகவற்சட்ட வார்ப்புருக்கள்
   பகுப்பு:தகவல் பெட்டிகள்

தகவல் பெட்டி வார்ப்புரு இணைக்க இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:18, 21 சனவரி 2014 (UTC)

       நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பல ஆ.வி.யில் இருந்து மொழி மாற்றப்படுவதனால், அங்குள்ள தகவல் பெட்டி வார்ப்புவை இலகுவாக பயன்படுத்தலாம். உமாரியா, சாதோல் மாவட்டம் ஆகிய கட்டுரைகளில் இணைத்துள்ளேன் பாருங்கள். கீழேயுள்ள வார்ப்புரு பிரதி பண்ணப்பட்டு உமாரியா கட்டுரையில் சேர்க்கப்பட்டு தமிழுக்கு தகவல் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
           இருவருக்கும் நன்றி. இனிவரும் கட்டுரைகளில் அவ்வாறே செய்கிறேன். உங்கள் இருவரின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 17:14, 21 சனவரி 2014 (UTC)
Umaria
city
Country இந்தியா
மாநிலம்Madhya Pradesh
மாவட்டம்umaria
ஏற்றம்538 m (1,765 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்26,837
Languages
 • OfficialHindi
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

--Anton·٠•●♥Talk♥●•٠· 16:52, 21 சனவரி 2014 (UTC) வேண்டுகோள்

பாலா, நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்குப் பகுப்புகளையும் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   விருப்பத் தேர்வுகள் -> கருவிகள்--> தொகுப்புதவிக் கருவிகள் --> விரைவுப் பகுப்பி -ஐத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
   பகுப்பினைச் சேர்ப்பதற்கு:

கட்டுரையின் கீழ் வரும் பகுப்புகள் கட்டத்துக்குள் தொடர்பான சில எழுத்துக்கள் அல்லது வார்த்தைகளை இட்டால் அது தொடர்பான பகுப்புகள் தோன்றும் அதில் தேவையானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:18, 21 சனவரி 2014 (UTC) விண்மீன் ஊடு பருப்பொருள்

இக்கட்டுரையினை தொடர்வீர்களா? அல்லது நீக்கி விடலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) தயவுசெய்து வாக்களிக்க

இங்கு சென்று vote' என்பதை click செய்து yes என்பதை தெரிவுசெய்யவும், வேணு மெனில் கருத்துக்களையும் இடவும். --யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:45, 9 பெப்ரவரி 2014 (UTC)

       உங்களுக்கு யார் பொருத்தமானவர் என தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. மேலும் Yes, No, Neutral இதில் எது உங்களுக்கு சரி என படுகிறதோ அதன்படி வாக்களியுங்கள். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:11, 9 பெப்ரவரி 2014 (UTC)

வருடம் - ஆண்டு...!

வணக்கம்!

   வருடம் என்பதற்குப் பதிலாக ஆண்டு என எழுதுதல், நல்ல தமிழ்!
   நிகழ்சி என எழுதுவது தவறு; நிகழ்ச்சி என்பதே சரி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 28 ஏப்ரல் 2014 (UTC)
   நிகழ்ச்சியை எப்படி நிகழ்சி என எழுதினேன் எனப் புரியவில்லை. ! இனிவரும் கட்டுரைகளில் ஆண்டு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 08:57, 28 ஏப்ரல் 2014 (UTC)

புரிதலுக்கு நன்றி. நீங்கள் ஒரு தொடர்பங்களிப்பாளர் என்பதனால் சுட்டினேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:42, 28 ஏப்ரல் 2014 (UTC) Crystal Clear app help index.png

வணக்கம் Balurbala! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:27, 17 மே 2014 (UTC)

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

வரும் வார இறுதியில், மலேசியா, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். பார்க்க: விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம். நன்றி.--இரவி (பேச்சு) 09:31, 25 மே 2014 (UTC)


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு உங்களுக்குத் தெரியுமா நீங்கள் பங்களித்த பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 28, 2014 அன்று வெளியானது.


பதக்கம் Real Life Barnstar.jpg மெய்வாழ்வுப் பதக்கம் சிங்கப்பூரில் உங்களைக் கண்டு பேசியதில் மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியா மீது தாங்கள் கொண்டிருக்கும் காதலைக் கண்டு கசிந்துருகி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன் :) இரவி (பேச்சு) 08:49, 3 சூன் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

   மிக்க நன்றி இரவி :) --ஆர்.பாலா (பேச்சு) 10:21, 3 சூன் 2014 (UTC)
   👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:34, 14 சூலை 2014 (UTC)

காற்பந்துப் பதக்கம் FootballBarnstar.png காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Balurbala 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

   👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:36, 14 சூலை 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் பாலா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பாலசுப்பிரமணியம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)

   ஆயிற்று இரவி. நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 10:01, 16 ஆகத்து 2014 (UTC)

புதுப்பயனர் வார்ப்புரு

வணக்கம் பாலா! புதுப்பயனர் வார்ப்புருவை அவர்களின் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். மறந்துபோய் பயனர்ப் பக்கத்தில் இட்டுவிட்டீர்கள் என எண்ணுகிறேன். இருவருக்கு மாற்றியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 15:18, 19 ஆகத்து 2014 (UTC)

   அடடா..! கவனக்குறைவாய் இருந்துவிட்டேன். :( நினைவுறுத்தலுக்கு மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 15:35, 19 ஆகத்து 2014 (UTC)

முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு

இன்னும் எந்த தமிழ் செய்தித்தாளிலும் செய்தி வெளிவரவில்லை. ஜெயலலிதா கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றத்தை, அது வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாமா? இணையத்தள ஆதாரம் வந்தவுடன், திரும்ப சேர்த்து விடலாம்.-Vatsan34 (பேச்சு) 09:20, 27 செப்டம்பர் 2014 (UTC)

   தினமலர் எண்டிடிவி உள்ளிட்ட பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவிட்டன.--இரா.பாலா (பேச்சு) 09:22, 27 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம் Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம் பாலசுப்ரமணியம் அவர்கள் விக்கிப்பீடியாவில் அயராமல் தொடர்ந்தும் உழைப்பதற்கு இது வழங்கப்படுகின்றது mohamed ijazz(பேச்சு) 10:32, 2 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

   👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:20, 2 அக்டோபர் 2014 (UTC)
   👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:18, 3 அக்டோபர் 2014 (UTC)
   👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 3 அக்டோபர் 2014 (UTC)
       நன்றி. mohamed ijazz. உங்களது இந்தப் பதக்கம் என்னை மேலும் திறம்படச் செயலாற்ற தூண்டுகோலாய் உதவும் என்பதில் ஐயமில்லை. --இரா.பாலா (பேச்சு) 10:08, 25 அக்டோபர் 2014 (UTC)

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்புடன் பங்களியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:12, 28 திசம்பர் 2014 (UTC)

   இரவி, உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.--இரா.பாலா (பேச்சு) 04:05, 30 திசம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு அனைவரும் வருக

வணக்கம் Balurbala! தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:18, 30 திசம்பர் 2014 (UTC)

   வணக்கம் பாலா, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:49, 16 சனவரி 2015 (UTC)

தலைப்புச் செய்தி

நாளை அல்லது பிற்காலத்தில் நடைபெறும் நிகழ்வை தலைப்புச் செய்தியாகத் தர வேண்டாம். அத்துடன், தேதியிடப்பட்ட செய்தியையும் முதற்பக்கத்தில் தவிர்ப்பது நல்லது. தில்லி சட்டசபை தேர்தல் முடிவு வெளிவரும்போது செய்தியாகத் தருவது நல்லது. தில்லி சட்டசபைத் தேர்தல் பற்றிய சிறப்புக் கட்டுரை இருந்தால் அதன் தொடுப்பை வார்ப்புருவில் கீழே தரலாம்.--Kanags \உரையாடுக 05:14, 6 பெப்ரவரி 2015 (UTC) தலைப்பு மாற்றல்

தலைப்பு மாற்றல் கொள்கை (en:Wikipedia:Article titles) தெளிவற்று இருக்கும் பட்சத்தில் கட்டுரைகளுக்கு (நடுநிலை மீறாதபட்சத்தில்) தலைப்பு மாற்றல் வார்ப்புருக்கள் இடுவதைத் தவிர்க்கலாம். கொள்கையை உரிய மாற்றம் ஏற்படுத்திய பின் தலைப்புக்கள் மாற்றுவது சிறப்பு. இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கான திருத்தந்தைகள் மற்றும் சுவாமிகள் கட்டுரைகள் துப்புரவுப் பணியில் தேங்கிக் கொண்டிருக்கும். நன்றி. --AntonTalk 04:35, 23 மார்ச் 2015 (UTC)

       சில கட்டுரைகள் விதிவிலக்காய் இருக்கின்றன, அதனால்தான் வார்ப்புருக்களை இட்டேன்.---இரா.பாலா (பேச்சு) 14:10, 23 மார்ச் 2015 (UTC)

சரிபார்க்கவும்...

வணக்கம்! எனது இந்தத் திருத்தத்தை சரிபாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 30 மார்ச் 2015 (UTC)

   👍 விருப்பம், நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:59, 30 மார்ச் 2015 (UTC)

செயற்க்கைக்கோள் என சில இடங்களில் இருக்கிறது; கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 30 மார்ச் 2015 (UTC)

   Yes check.svg ஆயிற்று. நன்றி :) --இரா.பாலா (பேச்சு) 02:05, 31 மார்ச் 2015 (UTC)

பெயர்ச்சுருக்கங்கள்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ என்பது போன்ற பெயர்ச் சுருக்கங்களை எழுதும் போது புள்ளிக்கு அடுத்து ஒரு இடம் விடவும். ஐ. ஆர். என். எஸ். எஸ்-1ஏ என்று எழுதுவது சரியாக இருக்கும். மணியன், உறுதி செய்ய முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 31 மார்ச் 2015 (UTC)

       பாலா, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ போன்ற ஏழு வகைகளுக்கும் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். என்ற தாய்க்கட்டுரை இன்னும் எழுதப்படவில்லை போல் தெரிகிறது. en:Indian Regional Navigation Satellite System என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு ஏற்ப ஒரு கட்டுரை தமிழிலும் (இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் தொகுதி எனத் தலைப்பிடலாம்) எழுதினால் இத்தொடர் முழுமை அடையும். இரவி கூறுவது போன்ற இடைவெளிகள் இவ்வாறான சுருக்கங்களுக்குத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். (பொதுவாக நபர்களின் முதற்பெயர்ச் சுருக்கங்களுக்கே கட்டாயமாக இடைவெளி விடுகிறோம்). ஏனையோரின் கருத்துக்களையும் இதுபற்றி அறிவது நல்லது. எனது பரிந்துரை: தலைப்பை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ என்பதற்குப் பதிலாக "இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் 1ஏ" எனத் தலைப்பிடலாம்? ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ இற்கு வழிமாற்றை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:44, 31 மார்ச் 2015 (UTC)
           நன்றி கனக்சு, தாய்க்கட்டுரையை விரைவில் எழுதுகிறேன். நானும் இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் 1ஏ என்றே ஆரம்பித்தேன். ஏற்கனவே ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி எழுதப்பட்டிருந்ததால் அதையே பின்பற்றலாம் என நினைத்தேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 09:00, 31 மார்ச் 2015 (UTC)
   கனக்சுடன் உடன்படுகிறேன். தமிழில் தலைப்பிடுவதே சிறப்பு. ஆங்கிலச் சுருக்கங்களுக்கு புள்ளியிட்டு இடைவெளி தேவையில்லை என்பதே எனது பரிந்துரையும். இந்த கட்டாய இடைவெளி விடுவது என்பதே தேடுதல் பொறிகளுக்காகத் தான். திமுக, பாஜக என தமிழ் சுருக்கங்களுக்கே இடைவெளி விடாது எழுதுகிறோம். ஆனால் புள்ளியிட்டால் இடைவெளிவிட்டு விக்கிநடையைப் பின்பற்றலாம். Navigation என்பதற்கு ஊடுருவும் என எப்படி வந்தது ? நான் மொழிபெயர்ப்பதானால் இந்திய வட்டார வழிநடத்து துணைக்கோள் அமைப்பு அல்லது இந்திய வட்டார வழிகாட்டி துணைக்கோள் அமைப்பு என்று பெயரிடுவேன்.--மணியன் (பேச்சு) 09:10, 31 மார்ச் 2015 (UTC)
   இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி துணைக்கோள் அமைப்பு என்பதும் பொருத்தமாக இருக்கும்.--இரா.பாலா (பேச்சு) 09:19, 31 மார்ச் 2015 (UTC)
       இது தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா நடைக்கையேட்டுப் பகுதியைக் கண்டறிய முடியவில்லை. ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதுவதன் மூலம் பெயர்ச்சுருக்கம் என்பதனைச் சுட்டலாம். தமிழில் அவ்வாறு இயலாது என்பதாலேயே புள்ளி வைக்கக் கோருகிறோம். புள்ளிக்கு அடுத்து இடைவெளி விடாமல் எழுதினால் ஒற்றைச் சரமாகவே கணக்கில் வரும். புள்ளியை அடுத்த இடைவெளி விடும் போது தான் தமிழ் மரபுப் படி அது பெயர்ச்சருக்கமாக கருத இயலும். ஊடகங்களிலும் பல இடங்களிலும் திமுக என்பது போல் எழுதுகிறார்கள் தான். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் இதில் சீர்மை பேண வேண்டுகிறேன். குறிப்பிட்ட துறை குறித்த அறிமுகம் இல்லையென்றால் முறையாக எழுதாத பெயர்ச்சுருக்காங்களை சரியாக ஒலிக்க முடியாது. நன்றி.--இரவி (பேச்சு) 09:49, 31 மார்ச் 2015 (UTC)
           இரவி, இக்கட்டுரையில் பெயர்ச்சுருக்கங்களைத் தவிர்த்துவிடுவோம். இந்திய வட்டார வழிநடத்து துணைக்கோள் அமைப்பு, இந்திய வட்டார வழிகாட்டி துணைக்கோள் அமைப்பு மற்றும் இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி துணைக்கோள் அமைப்பு இதுபோல ஒன்றைப் பயன்படுத்துவோம். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 09:54, 31 மார்ச் 2015 (UTC)
               சரி, பொதுவாக இதனைக் குறித்த சீர்மையை எட்ட முனைவோம். நடைக்கையேட்டைத் தகுந்த முறையில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 09:56, 31 மார்ச் 2015 (UTC)
                    :👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 09:58, 31 மார்ச் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help Hello Balurbala, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done! அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC) தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:24, 7 சூலை 2015 (UTC) ஆசிய மாதம், 2015 WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

   கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
   கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
   பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
   இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி ஆசிய மாதம் - முதல் வாரம் Asia (orthographic projection).svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

   இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
   இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
   இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
   (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
   இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。

, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC) ஆசிய மாதம் - இறுதி வாரம் WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

   விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
   ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
   நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
   நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால்

என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)

Return to the user page of "Balurbala/தொகுப்பு 1".