வாருங்கள்!

வாருங்கள், C.K.MURTHY, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 05:27, 2 சூலை 2014 (UTC)

படக் கோவைதொகு

விக்கிப்பீடியா படக் கோவை அன்று. --AntonTalk 07:42, 11 நவம்பர் 2014 (UTC)

பயனர் பெயர்தொகு

உங்கள் பயனர் பெயரை மாற்றுவதற்கு இங்கு கேளுங்கள்.--Kanags \உரையாடுக 19:56, 21 திசம்பர் 2014 (UTC) நன்றி

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் C.K.MURTHY!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 07:43, 30 திசம்பர் 2014 (UTC)

மூர்த்தி, தங்களின் ஆர்வத்தை நான் தடுக்கவில்லை; எனினும் இந்தத் தகவலையும் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள்! நன்றி!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 31 திசம்பர் 2014 (UTC)
ஆம்! மிகச் சரியாக புரிந்துகொண்டீர்கள். உங்களின் இலக்கினை நான் ஏற்கனவே அறிந்தமையால், தங்களுக்கு தெரியப்படுத்தினேன். தற்போது எனது கட்டுரைகளை நான் எனது கணிப்பொறியில் சேமித்து வருகிறேன். காலை 5.30 முதல் பதிவேற்றம் செய்வேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

உதவிக் குறிப்புகள்தொகு

மூர்த்தி,

 1. தாங்கள் இதுவரை இங்கு எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.
 2. உங்களுக்கு விருப்பமான துறையில் எழுதப்பட்டுள்ள மற்றக் கட்டுரைகளை படித்துப் பார்த்து, பிழைகளைத் திருத்தலாம்; கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.
 3. 100 குறிப்பிடத்தக்க தொகுப்புகளே நமது இலக்கு என்பதனை நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு சரியான மாற்றமும், ஒரு தொகுப்பாகக் கருதப்படும்; ஒரு புதிய கட்டுரையினை பதிப்பித்தீர்கள் என்றால், அது ஒரு தொகுப்பாக பதிவாகும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:08, 31 திசம்பர் 2014 (UTC)

தங்களின் தொகுப்புகள் குறித்த புள்ளி விவரங்களை இங்கு காணலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:30, 31 திசம்பர் 2014 (UTC)

மிக்க நன்றி-- C.K.MURTHY  ( பேச்சு  )

மூர்த்தி,

 1. உங்களின் கட்டுரைகள் கண்டிப்பாக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையென்றால் நீக்கப்படலாம்.
 2. அமந்துள்ளது என்பன போன்ற எழுத்துப்பிழைகளைத் தவிருங்கள். ஒருமுறை கட்டுரையை முழுதாக படித்து பார்த்து, பிறகு ஏற்றுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:38, 1 சனவரி 2015 (UTC)


சரி-- C.K.MURTHY  ( பேச்சு  )

தமிழாக்கம்தொகு

நீங்கள் இன்று எழுதிய ஜான்ஸ் சட்டம் என்ற கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு மொழிபெயர்க்கப்பட்டதாத் தெரிகிறது. இதனால் இதனை நீக்கியுள்ளேன். அது தவறான முடிவு என நீங்கள் கருதினால் தெரிவியுங்கள். அக்கட்டுரையில் நிறைய மொழிபெயர்ப்புப் பிழைகள் காணப்படுகின்றன.--Kanags \உரையாடுக 03:37, 1 சனவரி 2015 (UTC)

லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் எனும் கட்டுரையை முழுக்க திருத்திவிட்டு, அடுத்த கட்டுரையை துவக்குங்கள். அவசரப்படாதீர்கள்... இன்னமும் 20 மணி நேரம் அல்லது 30 நாட்கள் உள்ளன. தரமான கட்டுரைகளே நமது நோக்கம்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:18, 1 சனவரி 2015 (UTC)
ஜான்ஸ் சட்டம் கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:11, 1 சனவரி 2015 (UTC)
இதுவரை மொத்தமாக 231 தொகுப்புகளை செய்துள்ளீர்கள் [1]. ஆனால் ஜனவரி 1 அன்று எத்தனை என்பதனை கண்டறிய எனக்குத் தெரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 2 சனவரி 2015 (UTC)
உதவிக்கு நன்றி. நேரத்தை எப்படி குறிப்பிடுவது-- C.K.MURTHY   ( பேச்சு  )
--~~~~ என எழுதியதன் பின் இட்டால் கையெப்பமும் நேரமும் தானே இடப்படும். கைஎப்பத்தில் மாற்றம் செய்ய மேலேயுள்ள (பயனர், பேச்சு ஆகியவற்றிற்கு அடுத்ததாக) விருப்பத்தேர்வுகள் எனும் பக்கம் சென்று விரும்பியபடி மாற்றலாம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:34, 2 சனவரி 2015 (UTC)

இலக்குதொகு

ஆம், இலக்கை அடைந்து விட்டீர்கள். நேற்று 106 தொகுப்புக்களை செய்துள்ளீர்கள். நேற்றே அடைந்த்தீர்கள். இன்று 54 தொகுப்புக்கள் செய்துள்ளீர்கள். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:11, 2 சனவரி 2015 (UTC)

தகவல்க்கு மிக்க நன்றி. -- C.K.MURTHY  ( பேச்சு  ) 16:53, 2 சனவரி 2015 (UTC)

கட்டுரைப் பகுப்புகள்தொகு

கட்டுரைகளுக்கான பகுப்புகளில் பயனர் பக்கங்களை சேர்க்காதீர்கள். உ+ம்: திருச்சி. பயனர்களுக்குத் தனியே பகுப்புகளோ வார்ப்புருக்களோ உருவாகும் போது பயனர் என்பதையு ஆரம்பத்தில் சேர்த்துப் பெயரிடுங்கள். உ+ம்: பயனர் திருச்சி சரி. திருச்சி பயனர் தவறு.--Kanags \உரையாடுக 20:05, 6 சனவரி 2015 (UTC)

சரி -- C.K.MURTHY   ( பேச்சு  ) 07:19, 7 சனவரி 2015 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
இம்மாதம் உங்களின் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 11:45, 9 சனவரி 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 9 சனவரி 2015 (UTC)
  விருப்பம் தொடர்ந்தும் ஆர்வத்துடன் பங்களிக்க என் வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:56, 20 சனவரி 2015 (UTC)
  விருப்பம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:01, 20 சனவரி 2015 (UTC)

விக்கித்திட்டம் 100 அழைப்புதொகு

விக்கித்திட்டம் 100 தொடர்பாக மேலும் பல பயனர்களை நீங்கள் அழைத்து வருவது கண்டு மகிழ்ச்சி. இது தொடர்பாக தேர்ந்தெடுத்த சில பயனர்களுக்கு புதிய அழைப்பு விடுவது பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பாக உங்கள் உதவியை விரைவில் நாடுகிறேன். அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:14, 16 சனவரி 2015 (UTC)

சரி, நீங்கள் ஒரு பட்டியலோடு தொடர்புகொள்வீர் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.-- C.K.MURTHY  ( பேச்சு  ) 06:24, 16 சனவரி 2015 (UTC)
விரைவில் பட்டியல் தருகிறேன். அருள்கூர்ந்து அது வரை புது அழைப்புகள் விடுக்காமல் பொறுத்திருக்கவும். ஏற்கனவே முனைப்பாக இருந்த பயனர்களால் மட்டுமே உடனே மாதம் 100 தொகுப்புகள் தர இயலும். மற்ற பயனர்களை வேறு வகையில் அணுகி சில காலம் கழித்தே முனைப்பாக ஈடுபட வைக்க முடியும். எனவே, எல்லாருக்கும் இப்போது 100 தொகுப்புகள் அழைப்பை அனுப்புவது பயன் தராது. --இரவி (பேச்சு) 07:44, 16 சனவரி 2015 (UTC)

குறிப்புதொகு

மூர்த்தி, இங்குள்ள மாற்றத்தைக் காணுங்கள். பிற மாநில / நாட்டு ஊர்களைத் தமிழில் எழுதும் போது சரியான ஒலிப்பை உறுதி செய்து விடுங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில் இருந்து குறிப்பிட்ட ஊருக்கான தமிழ் கட்டுரை இருக்கிறதா என்று பார்ப்பது இதற்கு உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 19:15, 18 சனவரி 2015 (UTC)


சரி -- C.K.MURTHY  ( பேச்சு  ) 19:19, 18 சனவரி 2015 (UTC)

புதுப்பயனர் வரவேற்புதொகு

புதுப்பயனர் வரவேற்பில் தாங்கள் காட்டும் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால், அகரவரிசைப்படி பல ஆண்டுகள் முன்பு (அதுவும் பிற மொழிப் பயனர்களுக்குத் தமிழில் வரவேற்பு இடுதல்) பதிவு செய்த பயனர்களுக்கு வரவேற்பு இடுவதன் பயன் ஐயமே. இங்குள்ள பதிகையில் அண்மையில் பதிந்த பயனர்களுக்கு மட்டும் வரவேற்பு இடுதல் போதுமானது. அவர்களிலும் தானாக உருவாக்கப்பட்டது என்ற குறிப்புடன் உள்ள பயனர் கணக்குகளை விட்டு விடலாம். ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்கியுள்ளார் என்ற குறிப்புடன் உள்ள கணக்குகளுக்கு மட்டும் வரவேற்பு இடலாம். இந்தக் கணக்குகள் அண்மைய மாற்றங்களிலும் புலப்படும். இவ்வாறான பயனர்களுக்கு வரவேற்பு இடுவதன் பயன் கூட, இது வரை பார்த்த அனுபவத்தில், மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, பயன்மிகு தொகுப்புகளில் தங்கள் உழைப்பைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:22, 19 சனவரி 2015 (UTC)

1000 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், C.K.MURTHY!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 13:04, 31 சனவரி 2015 (UTC)

Thank youதொகு

Thanks C.K.MURTHY for your Welcome. Happy to meet you here--Alessandroga80 (பேச்சு) 13:33, 8 ஏப்ரல் 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 19 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:09, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:54, 31 மே 2017 (UTC)

வார்ப்புதொகு

நீங்கள் புதிதாக சில வார்ப்புருக்ககள் உருவாக்கியுள்ளீர்கள். அவை எதற்காக?--AntanO (பேச்சு) 06:28, 26 அக்டோபர் 2018 (UTC)

பரிந்துரைதொகு

வணக்கம். தேர்தல் குறித்த கட்டுரைகளை இற்றை செய்வதற்கு நன்றி. வாக்குப்பதிவு சதவீதம் எனும் தலைப்பின்கீழ்... அட்டவணையில் ஒவ்வொரு தேர்தலின்போது பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து இற்றை செய்வதால், அதன்படியே தொடரலாம். தனியே இந்தத் தேர்தலுக்கென அட்டவணை தேவையில்லை என நினைக்கிறேன். பரிசீலியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:56, 17 ஏப்ரல் 2019 (UTC)

சரி --C.K.MURTHY (பேச்சு) 12:57, 17 ஏப்ரல் 2019 (UTC)

நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:03, 17 ஏப்ரல் 2019 (UTC)

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் 2016 தேர்தல் தகவல்கள் விடுபட்டது போன்று அல்லாமல், மக்களவைத் தொகுதி பக்கங்களை தயவுசெய்து தகவல்களுடன் பதியுங்கள். இல்லையெனில் கடைசிவரை வெற்றுப் பகுதியாக நிலைத்துவிடும். பிறகு அதனைத் தொகுப்பது, பராமரிப்பது எளிதான காரியமாயிருக்காது. நன்றி -- Mdmahir (பேச்சு) 15:15, 12 மே 2019 (UTC)

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதொகு

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கட்டுரையில் உடைந்த மேற்கோள் உள்ள சான்றையும் வெற்று அட்டவணையினையும் நீக்கினேன். தாங்கள் அதனை மீளமைத்தது ஏன்? விளக்கம் தரவும். நன்றி ஸ்ரீ (talk) 17:10, 13 ஆகத்து 2019 (UTC)

August 2019தொகு

  வணக்கம், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி என்ற பக்கத்தில் அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ஸ்ரீ (talk) 17:11, 13 ஆகத்து 2019 (UTC)

Community Insights Surveyதொகு

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!தொகு

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:C.K.MURTHY&oldid=2845359" இருந்து மீள்விக்கப்பட்டது