பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 2

பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6

பதக்கம் தொகு

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
வேட்டி குறித்து உங்களது பங்களிப்பு மிக அருமை. உங்களுக்கு இந்தச் செயல்நயம் மிக்கவர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். :-) பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். கிருஷ்ணபிரசாத் (பேச்சு) 05:57, 25 மே 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி தொகு

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:05, 26 மே 2012 (UTC) +1 நன்றி தினேஷ்--சண்முகம் (பேச்சு) 11:28, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:10, 30 மே 2012 (UTC)Reply

சான்று தேவை தொகு

தினேசு, பல கட்டுரைகளிலும் சான்றுகளுக்கான வார்ப்புரு இடுவது நன்று. ஏற்கனவே சான்றுகள் உள்ள கட்டுரைகளில் அதற்கான அடிக்குறிப்பைச் சேர்க்கிறீர்கள், இல்லாத கட்டுரைகளில் சான்று தேவை என்று வார்ப்புரு இடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதனைத் தானியக்கமாகச் செய்ய முடியுமா என்று பார்க்கலாம். இது குறித்து முன்பு சுந்தர் ஈடுபாடு தெரிவித்து இருந்தார். தமிழ் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவை ஒட்டி எழுதப்பட்டவையே. எனவே, சான்றுக் குறிப்புகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையவையே. இந்நிலையில், நூற்றுக் கணக்கான / ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் சான்று தேவை வார்ப்புரு இட்டால், அவற்றை உடனடியாக சரி செய்யும் ஆள் வளம் நம்மிடையே இல்லை. நீண்ட நாட்களாக இவ்வார்ப்புருக்கள் தங்கினாலும் படிப்பதற்கு உவப்பாக இருக்காது. நிச்சயம் தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், இதனை ஒரு முறையான திட்டமாக முன்வைத்து பயனர்களின் கருத்துகளை அறிந்து திறம்படச் செய்யலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 18:19, 26 மே 2012 (UTC)Reply

வணக்கம் இரவி, இப்பணியை தானியக்கமாகச் செய்வதற்கு எனக்குத் தெரிந்த வரை சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் அல்லது ஆங்கில விக்கிப்பீடியாவை ஒட்டி எழுதப்பட்டவையாக இருந்த போதும், போதுமான ஆதாரம் சேர்க்கப்படாமல் இருப்பது வருத்தமாகவே உள்ளது. இதனை குறித்து ஏற்கனவே ஆலமரத்தடியில் ஆலோசனை கேட்கப்பட்டது. அனைத்து கட்டுரைகளிலும் ஒரே நேரத்தில் சேர்த்தால், அவற்றை உடனடியாக சரி செய்யும் அளவிற்கு போதிய நேரமின்மையை ஒரு வேலை நீங்கள் ஆள் வளமின்மையாக நீங்கள் கூறினால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் நீண்ட நாட்களாக இவ்வார்ப்புருக்கள் தங்கினாலும் படிப்பதற்கு உவப்பாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நானே இப்பணியை தொடர்ந்து செய்கிறேன். வேறு பயனர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களுக்கும் திட்டத்தை விளக்கி எளிதாக, விக்கிப்பீடியா 9-ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு இப்பணியை செய்ய முயல்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:30, 27 மே 2012 (UTC)Reply

தினேசு, பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு பார்த்தீர்களேயானால் பல கட்டுரைகளில் வார்ப்புரு இட்டதோடு துப்புரவாக்கம் பல ஆண்டுகளாகத் தேங்கி நிற்கிறது. இதே நிலை சான்று கோரல் வார்ப்புரு உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கு வரக்கூடாது என்பதே என் கவலை. பற்பல பக்கங்களிலும் இத்தகைய வார்ப்புருவைக் காணும் ஒரு பயனருக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மேல் தேவையற்ற ஐயமே உருவாகும். எங்குமே சான்றே இல்லாத சர்ச்சைக்குரிய / பொய்யான தகவல் என்பது வேறு. சான்று இருந்தும் குறிப்பிட்ட கட்டுரையில் இணைக்கப்படவில்லை என்பது வேறு. தமிழ் விக்கிப்பீடியாவின் எண்ணற்ற கட்டுரைகள் இரண்டாம் வகையின் கீழ் வரும். ஆங்கில விக்கிப்பீடியா மிகவும் நன்கு வளர்ந்த ஒரு கலைக்களஞ்சியம். அங்கு இது போன்று வார்ப்புருக்களை இட்டுச் சென்றால், அதனைக் கவனித்துச் சரி செய்யவென்று சில பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். எனவே, வார்ப்புருக்கள் தேங்காமல் கட்டுரை சீராவதற்கான வாய்ப்பு உண்டு. தமிழ் விக்கி சமூகம் இப்போது உள்ள அளவில், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அளவுக்குத் தர கட்டுப்பாட்டு, சான்று கோரல் முறைகளை இங்கு செயற்படுத்துவது கடினம். பங்களிப்பாளர்களை அயரச் செய்து விடும். இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூகுள் கட்டுரைகளில் 20% அளவேனும் உரை திருத்தி முடிக்க முடியவில்லை. நாம் மிகவும் குறைவான முனைப்பான பங்களிப்பாளர்கள் எண்ணிகையையே கொண்டிருக்கிறோம். அவர்களும் பல்வேறு வகையான பங்களிப்பு ஆர்வங்களைக் கொண்டிருக்கிறார்கள். சான்று சேர்க்கும் ஆர்வம் உள்ளோர் கூட அனைத்துத் துறைகளிலும் செய்ய இயலாது. பொது அறிவாக உள்ள பலவற்றுக்கும் தமிழ்ப் பதிப்புச் சூழலில் போதிய சான்று சேர்க்க இயலாத நிலையும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறேன்:

  • இதனை ஒரு முறையான திட்டமாக முன்வைத்துப் பயனர்களின் கருத்துகளைக் கோருங்கள்.
  • நீங்களே தனிப்பட செய்ய முற்பட்டாலும், உங்களின் பங்களிப்பு நேரத்துக்கு உட்பட்டு இதனைப் படிப்படியாகச் செய்யலாம்.

எடுத்துக்காட்டுக்கு: முதலில், ஏதேனும் ஒரு சில துறைகள் அல்லது நீங்கள் சான்று சேர்க்கக்கூடிய ஆர்வமும் அறிவும் உள்ள சில துறைகள் குறித்த கட்டுரைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சான்று கோரல் வார்ப்புரு இடுவதற்குப் பதில், நேரடியாகவே சான்றுகளைச் சேர்க்க முயலலாம். ஒட்டு மொத்தமாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் இச்சான்றுகளை இடுவதை விட, பத்து பத்தாகவோ ஐம்பது ஐம்பது கட்டுரகளாகவோ வார்ப்புருக்களை இட்டு, அவை ஒவ்வொன்றையும் சீர் செய்ய முனைந்து பிறகு அடுத்த சில கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடலாம். இதன் மூலம், இந்தத் திட்டத்தின் போதாமைகள், பங்களிப்பாளர் ஈடுபாடு முதலியவற்றை அளந்து அதற்கு ஏற்ப செயல்பட முடியும். நன்றி--இரவி (பேச்சு) 10:24, 27 மே 2012 (UTC)Reply

வணக்கம் இரவி, நான் நினைத்தவற்றில் பல உங்களுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகின்றது. இதனை ஒரு முறையான திட்டமாகச் செய்ய உரிய தகவல்கள் தேவை. என்னுடைய நேரத்திற்கு உட்பட்டே என்னுடைய பங்களிப்புகளை செய்து வருகிறேன். ஆகஸ்ட் 2012 வரை என்னுடைய பங்களிப்பு சற்று கூடுதலாக இருக்கும். அதற்குள் என்னால் முடிந்த அளவு பணிகளை நிறைவேற்ற முயல்கிறேன். படிப்படியாகவே செய்யத் திட்டமிட்டு உள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:42, 27 மே 2012 (UTC)Reply

தினேஷ்குமார், நீங்கள் தற்போது கட்டுரைகளில் சேர்த்து வரும் வார்ப்புரு:சான்றில்லைக்கு பதில் இந்த வார்ப்புரு:Refimprove வார்ப்புருதான் சரி என்று நினைக்கிறேன். சான்றில்லை என்பது சர்ச்சை, அல்லது ஆதாரம் கோரிய கட்டுரைகளுக்கு பயன்படுத்தலாம். -- மாகிர் (பேச்சு) 12:58, 29 மே 2012 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி மாகிர், இனிவரும் காலத்தில் வார்ப்புரு:Refimprove வார்ப்புருவை பயன்படுத்துகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:00, 29 மே 2012 (UTC)Reply
பார்க்க பேச்சு:நிறுவனம் (வணிகம்)..--மணியன் (பேச்சு) 13:13, 29 மே 2012 (UTC)Reply

தினேசு, பயனர் பேச்சுப் பக்கங்களில் சான்று சேர்க்க வேண்டுகோள் இடும் போது பகுப்பு:சான்றுகோள் இல்லாக் கட்டுரைகள் பக்கத்துக்கு இணைப்பு தருவது உதவும். இப்போதைக்கு, நீங்கள் தனிப்படவும் சிறுகச் சிறுகவும் இத்திட்டத்தைச் செய்வதாக இருந்தாலும், பேச்சு:நிறுவனம் (வணிகம்) பக்கத்தில் உள்ள கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, அருள்கூர்ந்து, இந்த சான்று சேர்க்கும் பணியை ஒரு முறையான திட்டமான முன்மொழிந்து ஆலமரத்தடியில் கருத்து கோரி அதற்கேற்பச் செயற்படுங்கள். இல்லாவிட்டால், பயனர்களை அயரச் செய்து விடும். மாகிர் சுட்டியவாறு வார்ப்புரு:Refimprove பயன்படுத்தலாம். நன்றி--இரவி (பேச்சு) 14:01, 29 மே 2012 (UTC)Reply

அருள்கூர்ந்து, உங்கள் கருத்துகள் / செயல்முறையை விக்கிப்பீடியா பேச்சு:சான்று சேர்க்கும் திட்டம் பக்கத்தில் இடுங்கள். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கிச் செயற்படுத்துவோம். நன்றி--இரவி (பேச்சு) 14:21, 29 மே 2012 (UTC)Reply

இரவி, எனது திட்டத்தைப் பற்றி விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம் பக்கத்தில் இட்டுள்ளேன். ஆலமரத்தடியில் இது குறித்து ஒரு தொகுப்பையும் விரைந்து சேர்த்து விடுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:44, 30 மே 2012 (UTC)Reply

நன்றி, தினேசு. பயனர் கருத்து அறியவும் தகுந்த உதவிப்பக்கங்களை உருவாக்கவும் ஒரு வார காலமாவது தரலாம். அது வரை புதிய கட்டுரைகள், பயனர் பேச்சுப் பக்கங்களில் வார்ப்புரு இடாமல் ஏற்கனவே வார்ப்புரு இட்ட கட்டுரைகளைச் சீராக்க முனையலாம். இந்த விசயத்தில் இப்போது வேகம் தேவை இல்லை :)--இரவி (பேச்சு) 06:28, 30 மே 2012 (UTC)Reply

தகுந்த உதவிப் பக்கங்களையும் விரைந்து உருவாக்குகிறேன், பயன்ர்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கிறேன்; மாற்றங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, சீராக்கமும் ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருக்கிறது. // இந்த விசயத்தில் இப்போது வேகம் தேவை இல்லை // இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. 50,000 கட்டுரைகளை பெறப்போகும் நம் தமிழ் கலைக்களஞ்சியத்தில் குறைந்தபட்சம் 10 - 15 % கட்டுரைகள் மேற்கோள், உசாத்துணை போன்றவை இல்லாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது. இவற்றை விரைந்து துப்புரவு செய்தல் அவசியமாகிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:59, 30 மே 2012 (UTC)Reply

பக்கவழிமாற்றுகள் தொகு

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளுக்கு மட்டுமே பக்கவழிமாற்றுகள் ஏற்படுத்துங்கள். இரண்டு கட்டுரைகளுக்குத் தேவையற்றது. பார்க்க: ஞானப்பிரகாசர். மேலும், பக்கவழிமாற்றுகளுக்கு ஒரு விக்கித்திட்டம் தேவை தானா? நேர மினக்கேடு என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:31, 28 மே 2012 (UTC)Reply

வணக்கம் Kanags, இரண்டு கட்டுரைகள் தற்போதே உள்ளன, இனிவரும் காலத்தில் மேற்கொண்டு ஏதேனும் ஒரு புத்தகமோ, ஆட்களோ வரலாம் அல்லவா ? ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தாலே, குழப்பம் கண்டிப்பாக வரும். பார்க்க தெளிவு தேவை. தற்போது இத்திட்டத்திற்கான அவசியம் இல்லாவிட்டாலும், கண்டிப்பாக இனிவரும் காலங்களில் இத்திட்டம் பயன்படும். நம்மால் முடிந்தவரை முயல்வோம். :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:39, 28 மே 2012 (UTC)Reply
Kanags நீங்கள் about வார்ப்புரு சேர்த்திருப்பதைப் பார்த்தேன், நன்றாகவே விரைந்து செய்துள்ளீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே, இன்னும் ஒரு ஞானப்பிரகாசரும் வந்துவிட்டார் ;-) பார்க்க திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் ???? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:26, 28 மே 2012 (UTC)👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 12:50, 28 மே 2012 (UTC)Reply
  • இரு பக்கங்கள் மட்டும் இருந்தால், பிறப்பக்கபோகும் நபருக்காவோ, எழுதாத புத்தக்கத்திற்கோ தனியாக ஒரு பக்கவழிமாற்று தேவையில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதப்படாமல் இருந்தால் தனி பக்கம் உருவாக்கலாம், சிவப்பு இணைப்பும் கொடுக்கலாம். எ.கா ஸ்ரீகாந்த். இரண்டே பக்கங்கள் இருக்கும் பட்சத்தில் இரு கட்டுரையின் முதல் வரியில் ஒரு குறிப்பு இட்டால் போதுமானது. ஆங்கில விக்கியிலும் இதுவே பழக்கம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:09, 28 மே 2012 (UTC)Reply
தினேசு, சிறீதரனின் கருத்துடன் உடன்படுகிறேன். இத்திட்டத்தை ஒருங்கிணைக்க பகுப்பு பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்திலேயே கூட உரையாடலாம். தனியே பேச்சுப் பக்கத்தில் தகவல் இடத் தேவை இல்லை. பிறகு, ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றி எச்சரிப்பது, உடனடி மேம்பாடுகளை வேண்டுவது போன்ற வார்ப்புருக்களை மட்டும் பக்கத்தின் மேலே இடுவது வழக்கம். குறுங்கட்டுரை வார்ப்புரு பக்கத்தின் அடியில் இருப்பதே வழமை--இரவி (பேச்சு) 13:47, 28 மே 2012 (UTC)Reply
இரண்டு பக்கங்கள் மட்டுமே இருப்பது மட்டுமே காரணமாக நான் கூறவில்லை, இப்பெயருள்ள எழுதாத புத்தகத்தைப் பற்றியோ, பிறக்காத நபருக்காகவோ நானும் வருந்தவில்லை, ஞானப்பிரகாசர் என்பது ஒரு பொதுவான பெயரே! அவர்களைப் பற்றிச் சேர்க்கும் போது குழப்பம் வராமல் இருக்கவே பக்க வழி நெறிப்படுத்தலை வலியுறுத்துகிறேன். எ. கா. தினேஷ் என்ற பெயர் போல இதனையும் பலருக்கு வைத்துள்ளனர். (அப்பாடா, ஸ்ரீகாந்த் போல என் பெயரையும் பதிலில் ஒரு வழியாக சேர்த்து விட்டேன் :-) ) இந்த உரையாடலை அங்கு நகலெடுத்து பதிகிறேன். இனி வரும் காலங்களில் குறுங்கட்டுரை வார்ப்புருவை பக்கத்தின் அடியிலேயே சேர்க்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:18, 28 மே 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு


wikisource தொகு

வணக்கம் தினேஷ்..பார்க்க s:wikisource:ஆலமரத்தடி--சண்முகம் (பேச்சு) 06:47, 31 மே 2012 (UTC)Reply

மீண்டும் பார்க்க s:பயனர் பேச்சு:shanmugamp7 & s:பயனர் பேச்சு:Shanmugamp7/mainpage--சண்முகம்ப7 (பேச்சு) 10:59, 5 சூன் 2012 (UTC)Reply

டூல் சர்வர் குறித்து தொகு

வணக்கம் தினேஷ், இப்பக்கத்தில் உள்ள Months edit, பயனர். மற்றும் பிறவற்றை எவ்வாறு உருவாக்கம் செய்வது?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:07, 3 சூன் 2012 (UTC)Reply

Y ஆயிற்று நானே உருவாக்கிவிட்டேன் தினேஷ் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:19, 3 சூன் 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:57, 3 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

100 (எண்) கட்டுரையைப் பார்த்ததும் நீங்கள் சென்சுரி அடித்திருப்பதை உய்த்துணர முடிகிறது. வாழ்த்துகள்! 100 ஆயிரமாகப் பெருகட்டும் ! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:15, 9 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகளுக்கு நன்றி, மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:17, 9 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 12:26, 9 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகளுக்கு நன்றி மதனாகரன்! 100-வது தலைப்பை பரிந்துரை செய்தமைக்காக மேலுமொரு நன்றி :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:52, 9 சூன் 2012 (UTC)Reply

குமுதம் வார இதழ் சான்று? தொகு

குமுதம் வார இதழில் முதலியார் என்ற பட்ட பெயர் கொண்ட சாதியரில் குறிபிடத்தக்க நபர் பட்டியல் இருந்தது. எந்த நபரும் இன்னார் சாதி என்று குறிப்பிடவில்லை.−முன்நிற்கும் கருத்து 117.202.138.189 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் பெயரிடாத பயனரே, சமூகம் சார்ந்த நபர்களை ஒரு கட்டுரையில் இருந்து நீக்கம் அல்லது சேர்க்கும் பொழுது அதற்கான சான்றுகளையும் சேர்ப்பது அவசியமாகிறது. நீங்கள் குறிப்பிட்டவாறு நான் ஏதேனும் தவறுதலாக தகவல் சேர்த்திருந்தால், அதனை மாற்றும் போது அல்லது நீக்கல் செய்யும் போது குறிப்பு சேர்க்கவும். புகுபதிகை செய்யாமல், காரணம் தெரியப்படுத்தாமல் நீங்கள் கட்டுரைகளில் மாற்றம் செய்ததால், உங்களுடைய மாற்றங்களை மீளமை செய்திருந்தேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:00, 9 சூன் 2012 (UTC)Reply

கண்ணன் (நெல்லைக் கண்ணன்) தொகு

வணக்கம், Dineshkumar Ponnusamy, தாங்கள் கண்ணன் (நெல்லைக் கண்ணன்) என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை நீக்க பரிந்துரை செய்து உள்ளீர்கள். நான் அக்கட்டுரை மேலும் தொக்குகலாம் என்ற தவல்களை திரட்டிவருகிறேன் என்பதை உங்களிடம் கூறிக்கொள்கிறேன். கார்த்தி கரூர் பயனர்:karthim02

வணக்கம் ம.கார்த்தி, நீங்கள் தொடங்கிய கண்ணன் (நெல்லைக் கண்ணன்) கட்டுரையில் ஒரு வரித்தகவல் மட்டுமே இருந்ததால், நீக்கல் வேண்டுகோள் விடுத்தேன். அருள்கூர்ந்து அக்கட்டுரையை விரைந்து மேம்படுத்தவும். நீங்கள் கட்டுரையை மேம்படுத்தும் பொழுது நீக்கல் வேண்டுகோளையும் நீங்களே நீக்கி விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:14, 10 சூன் 2012 (UTC)Reply
வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி,தங்கள் கனிவான பதிலுக்கு நன்றி.. மிக விரைவில் அதை செய்துமுடிகிறேன். கார்த்தி பயனர்:karthim02 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:00, 10 சூன் 2012 (UTC)Reply

திதிகள் தொகு

திதிகள் பகுப்பிலுள்ள கட்டுரைகளிற்கான மேலதிக தகவல்கள் சிலவற்றை சேகரித்துள்ளதுடன் மேலும் சேகரித்து வருகின்றேன். இவற்றை மேம்படுத்த மேலும் சிறிது கால அவகாசம் வேண்டுகின்றேன். தயவுசெய்து கட்டுரைகளை நீக்க வேண்டாம். --சிவகோசரன் (பேச்சு) 11:06, 4 சூலை 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு தொகு



முதற்பக்க அறிமுகம் வேண்டல் தொகு

வணக்கம் தினேசு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தினேஷ்குமார் பொன்னுசாமி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி (பேச்சு) 15:18, 25 சூலை 2012 (UTC)Reply

வணக்கம் இரவி, அறிமுகப் பக்கத்தினை உருவாக்கிவிட்டேன். பணி நிமித்தம் காரணமாக தற்போது என்னுடைய பங்களிப்பு குறைந்துள்ளது. விரைந்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய அதிகப்படியான பங்களிப்பு தொடரும். முதற்பக்கத்தில் என்னுடைய அறிமுகத்தினை இட நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:08, 25 சூலை 2012 (UTC)Reply

நன்றி, தினேசு. சிறு உரை திருத்தத்துடன் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்து உள்ளேன். தற்போது முதற்பக்க அறிமுகப் பகுதிக்குச் சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது, மீண்டும் அப்பகுதி இடம்பெறும் போது உங்கள் அறிமுகம் வரும். --இரவி (பேச்சு) 12:29, 26 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:26, 26 சூலை 2012 (UTC)Reply

பிறந்த நாள் வாழ்த்துகள் தொகு

வணக்கம் Dineshkumar Ponnusamy/தொகுப்பு 2 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாகரன் (பேச்சு) 08:30, 10 ஆகத்து 2012 (UTC)Reply
நன்றி மதனாகரன்!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:28, 10 ஆகத்து 2012 (UTC)Reply

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தினேஷ் ! இந்நாள் புத்துணர்வூட்டும் நல்லாண்டிற்கான ஆரம்பமாக ஆகட்டும் !!--மணியன் (பேச்சு) 17:09, 10 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி மணியன், இந்த ஆண்டு விக்கித்திட்டங்களில் அதிக பங்களிப்புகள் இருக்கும். :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:04, 18 ஆகத்து 2012 (UTC)Reply


கலைச்சொற்கள் தொகு

"கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், சேவை உள்கட்டுமானம் என்ற கட்டுரையை தொடங்கினேன், அக்கட்டுரை இன்றும் போதிய கலைச்சொற்கள் இன்மை காரணமாக சிறிய அளவில் இருப்பது வருத்தமே :-(" என்று பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கலைச்சொற்கள் பட்டியலைத் தந்தால் பிறரிடம் கேட்டு பரிந்துரைகள் தர முடியும். --Natkeeran (பேச்சு) 14:23, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விரைந்து மேம்படுத்துகிறேன். நேரப் பற்றாக்குறை காரணமாக சரியாக விக்கித்திட்டங்களில் பணியாற்ற இயலவில்லை. கலைச்சொற்கள் பட்டியல் கிடைத்தால் இலகுவாக முடித்து விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:26, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply
ஓரளவிற்கு விரிவாக்கம் செய்துள்ளேன். இத்தொழில்நுட்பக் கட்டுரை தமிழில் முதலில் எழுதப்பட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். (வேறு எந்த மொழிகளிலும் சேவை உள்கட்டுமானத்திற்கென்று தனிக் கட்டுரை கிடையாது, ஆங்கிலம் உட்பட). -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:06, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ultimate edition 3.4 குறித்து தொகு

இன்று நீங்கள் கூறிய, மேற்கூறிய இயக்குத்தளத்தில் தான் இயங்குகிறேன். இது நன்கு இயங்கவும், கணினியில் பிற வேலைகளை தடையின்றி செய்யவும் 4ram இருப்பின் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.வரைகலை வேலைகள் (graphical works)அருமை. பொதுவாக நிழற்படங்களை மேம்படுத்தும் வின்டோசு பயனாளிக்கு நல்லதொரு இயக்குத்தளம். கண்களுக்கம் தான்.வார இறுதியில் நூண்மிகளை(bit) பற்றி கட்டுரை எழுத மறந்து விடாதீர்கள். மீண்டும் சந்திப்போம்.வணக்கம். -- உழவன் +உரை.. 06:43, 21 செப்டெம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்Reply

நூண்மிகள் என்பதை இருமம் எனவும் தமிழ் விக்கியில் உபயோகம் செய்யப்பட்டுள்ளது, 32 இருமம் குறித்த கட்டுரையை துவங்கி விட்டேன். விரைந்து முடிக்கிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:19, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மொழிபயர்ப்பு தொகு

தினேஷ்குமார், ஜூனியர் என்டிஆர் பக்கத்தில் இருந்த ஆங்கிலப் பகுதிகளை நீக்கியிருக்கிறேன். ஆங்கிலப் பகுதிகளை தமிழ் விக்கிக் கட்டுரைகளில் வைத்திருப்பது விரும்பத்தக்கதல்ல. அந்த வழக்கமும் இப்போது தமிழ் விக்கியில் இல்லை. நீங்கள் இப்பக்கத்தை பகுதி பகுதியாக மொழிபெயர்க்க விரும்பினால் உங்கள் பயனர்வெளியில் பயனர்:Dineshkumar_Ponnusamy/ஜூனிடர்_என்டிஆர் என்ற சோதனைப் பக்கத்தைத் தொடங்கிப் பங்களிக்கலாம். பின்னர் முதன்மை வெளிக்கு மாற்றலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:54, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply

குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொகு

வணக்கம் தினேஷ், குறித்த கால நீக்கல் வேண்டுகோள் பெரும்பாலும் மூன்று வரிகளுக்கு குறைவாக உள்ள கட்டுரைகளுக்கே இடுகிறோம், மூன்று வரிகளுக்கு மேல் உள்ள சில கட்டுரைகளில், நீங்கள் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள், மூன்று வரி காரணமா? வேறு ஏதாவது காரணமா? பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தால் நல்லது. (தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பட்டியல், செய்யாமங்களம், அரங்க இராமலிங்கம்)--சண்முகம்ப7 (பேச்சு) 16:23, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

போதுமான மேற்கோள், ஆதாரம் எதுவுமில்லாமல் இருக்கும் கட்டுரை, பொதுவான கருத்துகளை மட்டுமே உள்ளடக்கிய கட்டுரை என பல்வேறு காரணங்களுக்காகவுமே குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுத்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:09, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
சரி தினேஷ், இதற்கு இந்த வார்ப்புரு சரி வருமா எனத் தெரியவில்லை, ஏனெனில் இதில் உள்ளடக்கம் சேர்க்கவும் என்று மட்டுமே உள்ளது, வேறு வார்ப்புரு உருவாக்கலாம் அல்லது {{refimprove}}, {{சான்றில்லை}} போன்றவற்றை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். (கட்டுரை இவ்வாறு மாற்றப்பட வேண்டும் எனக் கூறினால் தானே பார்ப்பவர்கள் சற்றேனும் மாற்ற நினைப்பார்கள் :) )--சண்முகம்ப7 (பேச்சு) 03:20, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
அதிலும் சிக்கல் உள்ளது, விவசாயம் _________ ஊரில் முக்கிய தொழில், இது இந்த மாவட்டத்தில் உள்ளது. இவர் இது செய்துள்ளார் என்று ஒரே பயனர் அல்லது ஒரு பதிகை செய்தவரும், ஒரு புதிய பயனரும் இணைந்து தகவல் கொடுத்திருக்குமிடத்தில் என்ன செய்வது, ஒரு மாத நீக்க வார்ப்புரு இட்டால், பெரும்பாலானோர் (குறைந்தது ஐந்து விக்கிப்பீடியா உறுப்பினராவது) பார்க்கின்றனர், அவர்களால் முடிந்த அளவு அக்கட்டுரையை மேம்படுத்தியுள்ளனர். நானும் செய்துள்ளேன். நேரமின்மை காரணமாக உடனடியாக அதனை செய்ய இயலவில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:28, 10 அக்டோபர் 2012 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: FDC portal/Proposals/CentralNotice2012 தொகு

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் FDC portal/Proposals/CentralNotice2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-10-15

This banner will invite logged-in editors on all projects to participate in the current public review phase about funding requests by 12 organizations, regarding more than 10 million US dollars of donation money. (Questions about the translation notification system can be asked at [1], and you can manage your subscription at [2].)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 08:08, 14 அக்டோபர் 2012 (UTC)

Transcription தொகு

Hi Dineshkumar, I'm looking for the transcription of the name "Tom Conley". Tom should be "டாம" but his family name? Can you help? --77.186.182.227 17:36, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

Hi, its டாம் கான்லீ not "டாம". -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:54, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

முன்னிலையாக்கல் தொகு

வணக்கம் தினேஷ், மன்னிக்கவும், தவறுதலாக முன்னிலையாக்கலை அழுத்தி விட்டேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:03, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

அன்புள்ள பொன்னுசாமி! (இது என் தந்தை பெயர்) களவியல் கட்டுரையில் தங்கள் நீக்கல் குறிப்புகளைப் பார்த்தேன். குறிப்பு சரியே. எனது முனைப்பை அறிவீர்கள். கட்டுரை நான் உருவாக்கியது என்பதும் தங்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட குறிப்புகளை எழுதிய ஆசிரியருக்குத் தெரிவிப்பது நல்லது. இன்றேல் அரிய செய்திகள் பாழாகும். தமிழ் நம்முடையது. எண்ணிச் செயல்படுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 19:08, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம் செங்கை பொதுவன், நான் களவியல் கட்டுரையில் புதுபதிகை செய்யாமல் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து, ஒரு வரிமாறாமல் எடுக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக துப்புரவு வார்ப்புருவும், பதிப்புரிமை மீறல் வார்ப்புருவும் இட்டிருந்தேன்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

இறுதி முற்றுகை தொகு

தினேஷ்குமார் பொன்னுசாமி, இறுதி முற்றுகை என்ற கட்டுரையில் கறுப்பரசன் என்பதைக் கருப்பரசன் என்று மாற்றியிருந்தீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 05:28, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

மதனாகரன் அது கருப்பரசன் என்று நினைத்தே மாற்றியிருந்தேன். நிறத்தை குறிக்க கருப்பு என்று எழுதியிருந்தீர்கள் என நினைத்து மாற்றியிருந்தேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:53, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/AdrianneW Appeal தொகு

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/AdrianneW Appeal மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

Return to the user page of "Dineshkumar Ponnusamy/தொகுப்பு 2".